இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான -- தனியார் வகுப்புகளுக்குத் தடை!
இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான -- தனியார் வகுப்புகளுக்குத் தடை!
இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான -- தனியார் வகுப்புகளுக்குத் தடை!
ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான மேலதிக கல்வி வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்துதல், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கான யூக கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல், பரீட்சைக்கான வினாத்தாள்களை வழங்குவதாகவும் அல்லது அதற்கு சமமான கேள்விகளை வழங்குவதாகவும் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல் அல்லது மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அவற்றை வைத்திருப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறி எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ செயல்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கோ அல்லது பாடசாலை பரீட்சை அமைப்பு, முடிவுகள் கிளையிலோ 0112 784208 அல்லது 0112 784537 என்ற எண்களுக்கு அழைத்து முறையிடவும் முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
படுகொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது
வத்தளை, ஹேக்கித்த, அல்விஸ்வத்த பகுதியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (05) பிற்பகல் முகத்துவாரம் மற்றும் வத்தளை பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்ததற்காக இரண்டு சந்தேக நபர்களும், கொலைக்கு உதவியதற்காக ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17, 25 மற்றும் 27 வயதான கொழும்பு 15 மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசிகளை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி, வத்தளை, ஹேக்கித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை குறித்த நபர் தங்கியிருந்த இரண்டு மாடி வீட்டிற்குள் இடம்பெற்றிருந்தது.
முகத்தை மூடியவாறு முச்சக்கர வண்டியில் பிரவேசித்த நான்கு பேர் அந்த நபரின் வீட்டிற்குள் நுழைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.
பொலிஸாரால் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், கொலை செய்யப்பட்டவர், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவியவர் என்பது தெரியவந்துள்ளது.
7 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்றுநோய்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்றுநோய் உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சனையாக இருக்கின்றது என வைத்தியரும், புற்றுநோய் தடுப்பு சங்க தலைவரும் மட்டு மாநகர சபை உறுப்பினருமான பேராசிரியர் கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் வாய் புற்றுநோயை தடுக்கும் திட்டத்தின் கீழ் பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பரிசோதனை செய்யும் நடமாடும் வைத்திய முகாம் மட்டு பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் தலைமையில் மட்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (05) இடம்பெற்றது.
இதன்போது அங்கு கலந்துகொண்ட வைத்தியர் கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்,
மாவட்டத்தில் வாகன சாரதிகள் நடத்துனர்கள் வெற்றிலை, பாக்கு புகையிலை, புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகியுள்ளனர்
அவை இல்லாமல் அவர்களது தொழிலை செய்ய முடியாது உள்ளனர். இது எந்தளவுக்கு வாய் புற்றுநோயை கொண்டுவரும் என்பது எங்களுக்கு தெரியும் இது பெரும் சமூதாய பிரச்சனையாக இருக்கின்றது.
எனவே முதலில் இந்த வாகன சாரதிகள் நடத்துனர்களை முதலில் பரிசோதித்து புற்று நோயை இனம் கண்டு வெற்றிலை, பாக்கு, புகையிலை , புகைத்தல்களை பாவிப்பதால் ஏற்படும் புற்றுநோய் தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டல்களை தெளிவுபடுத்துவதன் மூலம் இதனை தடுக்கமுடியும்.
இந்த வெற்றிலை, பாக்கு புகையிலை, பாவிப்பவர்கள் அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனால் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.
24 மணி நேரம் கெடு விதித்தார்
அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள்.
ஆனால், நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை. எனவே, நாங்கள் 25 சதவீத வரி விதிக்க முடிவு செய்தோம். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன், காரணம், அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறார்கள். உக்ரைன் மீதான தாக்குதலுக்கான எரிபொருளை அவர்கள் ஊக்குவிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ரஷ்யா உக்ரைனுடன் சமாதான ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரிகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (05) தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தலுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குவிக்கப்பட்ட பொலிஸார்! அச்சத்தில் மக்கள்
மன்னாரில் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை பாகங்களை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும், பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன் நகருக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள், குறித்த பாகங்களை நகருக்குள் எடுத்து வரக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தொடர்ச்சியாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் போராட்டங்கள் தொடரப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.
இதேநிலையில், இன்று அதிகாலை மக்கள் கண்காணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதும், பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன், காற்றாலை பாகங்களை ஏற்றிய வாகனங்கள் நகருக்குள் உள்நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அவ்விடத்தில் நின்றவர்களை அச்சுறுத்தி பலத்த பாதுகாப்புடன் மன்னாரை நோக்கி குறித்த வாகனம் சென்றுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான -- தனியார் வகுப்புகளுக்குத் தடை!
No comments