புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்!

  புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்!





புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்!






புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்!



அவுஸ்திரேலியாவைச்(australia) சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன் 400 பேருடன் புதிய நாடு ஒன்றை உருவாக்கி அனைவரையும் கவர்ந்துள்ளான்.


குரோஷியா -செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என பெயர் சூட்டப்பட்ட நாட்டையே அந்த இளைஞன் உருவாக்கியுள்ளான்.


இவ்வாறு உருவாக்கிய நாட்டிற்கு தானே ஜனாதிபதி என அவன் அறிவித்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இது குறித்து நியூயோர்க் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டானியல் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞன், குரோஷியா விற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உரிமை கோரப்படாத நிலத்தை வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து அதன் ஜனாதிபதி தான் என தனக்கு தானே என அறிவித்துள்ளான்.


அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வத்திக்கான் நகரத்திற்குப் பிறகு உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரபூர்வ மொழிகள் ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


புதிய நாட்டை உருவாக்கிய இளைஞன் இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளான்.



அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு...

    


இந்தியாவின் முக்கிய பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில்,


செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கான உளவுத்துறை தகவல்களைக் கருத்தில் கொண்டு, சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) இந்த உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நடவடிக்கையின் கீழ், விமான நிலையங்கள், ஓடுபாதைகள், ஹெலிகாப்டர் தளங்கள், பறக்கும் பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவல்களிலும் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் அமல்படுத்தப்படுவதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெப்பக் குறியீடு எச்சரிக்கை  -- வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு...

    


வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


இந்தப் பகுதிகளில் நாளை (07) வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடு, வளிமண்டல ஈரப்பதம் மற்றும் உலகளாவிய கணித வானிலை முன்னறிவிப்பு மாதிரி தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை மதிப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. 


இது உண்மையான வளிமண்டல வெப்பநிலை அல்ல, மாறாக உடலால் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கிறது என அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.



வீட்டின் பின்புறத்தில்  --   குழந்தையின் சடலம் மீட்பு-



ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்து  ஒரு பெண் குழந்தையின் சடலம் செவ்வாய்க்கிழமை (05) மீட்கப்பட்டதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, டங்கொல்ல பகுதியில் ஒருவரின் ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.


மாவனெல்லையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில்  ஜூலை 31 ஆம் திகதி குழந்தை பிறந்திருந்தாலும், அந்த நேரத்தில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், எனவே அவரது தந்தை மற்றும் பாட்டி அதை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி மத சடங்குகளைச் செய்த பின்னர் வீட்டின் முற்றத்தில் புதைத்ததாகவும் கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.


மாவனெல்ல பதில் நீதவான் திருமதி எரங்கிகா வீரசிங்க முன்னிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் உடலை மாவனெல்ல மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். சந்தேக நபர் தற்போது கண்டி மருத்துவமனையின்   சிகிச்சை பெற்று வருகிறார்.




உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்  --    வழக்கு ஒத்திவைப்பு



உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (6) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 


அதன்படி, குறித்த வழக்கு நவரட்ண மாரசிங்க, பிரதீப் அபேரத்ன மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 


இந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் பிறிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


அதன்படி, இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


இந்த வழக்கு தொடர்பாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். 


இந்த வழக்கில் அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதி குறிப்பிடத்தக்கது.




புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்!


No comments

Theme images by fpm. Powered by Blogger.