GCE A/L சித்திகளுடன் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம்..... - !
GCE A/L சித்திகளுடன் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம்..... - !
GCE A/L சித்திகளுடன் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம்..... - !
BICT DEGREE PROGRAM 2025-South Eastern University
> closing date extended
GCE A/L சித்திகளுடன் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் தகவல் தொழில்நுட்ப வெளிவாரி பட்டப் பாடநெறியை கற்பதற்கான வாய்ப்பு
Bachelor of Information and communication Technology
- Apply Online
- Qualification: A/L (Any Stream)
FULL DETAILS
COURSE PAGE CLICK HERE
Closing Date 04.09.2025(EXTENDED)
தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து...
இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர், மேலதிக கொடுப்பனவு, கைவிரல் அடையாள இயந்திர பதிவுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து, நாளை மாலை 4 மணி முதல் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்...
பாதுக்க பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
15/08/2025 பிற்பகல், பாதுக்க மாவத்தகம பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, பொலிஸார் காரின் சாரதியை மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்தனர். மேலும், விபத்துக்குள்ளான காரையும் கைப்பற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பாதுக்க பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, அங்கு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிரமத்திற்கு மத்தியில் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
தாக்குதலில் காயமடைந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஹோமாகம பதில் நீதவான், வைத்தியசாலைக்குச் சென்று சந்தேகநபரைப் பார்வையிட்ட பின்னர், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் வீரர் -- ஐந்தாண்டு போட்டித்தடை தடை...
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட முன்னாள் இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் சாலிய சமனுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அவருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13, 2023 முதல் சமன் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். 2021 அபுதாபி டி 10 போட்டியின் போது விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட புனே டெவில்ஸ் அணியின் 8 வீரர்களில் அவரும் ஒருவராவார்.
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளின் மூன்று பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கட் விதிமுறைகளில் உள்ள சட்டங்களின்படி,
2.1.1 - 2021 அபுதாபி டி 10 போட்டிகளை அல்லது போட்டிகளின் தன்மைகளை மாற்ற, சதி செய்யதல் மற்றும் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.
2.1.3 – விதிகளில் மாற்றம் செய்வதற்காக ஊழலில் ஈடுபடும் ஒரு வீரரின் சார்பாக மற்றொரு பங்கேற்பாளருக்கு பரிசு வழங்குதல்.
2.1.4 – விதிகளின் பிரிவு 2.1 ஐ மீறுவதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டுகோள் விடுத்தல், தூண்டுதல், ஆலோசனை வழங்குதல், வற்புறுத்துதல், ஊக்குவித்தல் அல்லது தெரிந்தே உதவுதல்,போன்ற மூன்று பிரிவுகளில் குற்றம் சாற்றப்பட்டுள்ளார்.
101 முதல் தர போட்டிகள், 77 A போட்டிகள் மற்றும் 47 T20 போட்டிகளில் விளையாடிய சகலதுறை ஆட்டக்காரரான 39 வயதான சமன் கடைசியாக மார்ச் 2021 இல் இலங்கை கிரிக்கெட் T20 தொடரில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போட்டியில் விளையாடியுள்ளார்.
நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர் என்று பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நீரில் மூழ்கி விபத்துக்களில் இருந்து 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
GCE A/L சித்திகளுடன் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம்..... - !
No comments