Phone பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி..... - !

  Phone பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி..... - !





Phone பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி..... - !




 Phone பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி..... - !



எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி ஐஃபோன் 17 தொலைபேசி வகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

அத்துடன் புதிய கைக்கடிகாரங்கள் மற்றும் ஏ.ஐ சாதனங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. 

 

அப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்ச்சியையொட்டியதாகப் புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். 

 

ஐஃபோன் எனும் நாமத்திற்கு உலகளவில் பெரும் வரவேற்புள்ள நிலையில் புதிய அப்டேட்டுகளுக்காக ஐஃபோன் பிரியர்கள் காத்திருக்கின்றனர்.



சாரதி உரிமம் பெற வருவோருக்கு 



சாரதி உரிமம் பெற வருவோருக்கு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். 


சாரதி உரிமம் பெற வருவோருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் நுகேகொடையின் மருத்துவ நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 


இதனையடுத்தே இணைய முறை அறிமுகப்படுத்தப்படுவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 


தற்போது, நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் சாரதி உரிமத்திற்கு விண்ணப்பிப்போருக்கு அச்சிடப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்குகிறது. 


இந்த செயல்முறை வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது என்பது தெரியவந்துள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். 


இதேவேளை, சாரதி உரிமம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மக்கள் வேரஹெரவிற்கு செல்ல வேண்டும். 


இது சிரமத்தை ஏற்படுத்துகிறது.  கைரேகைகளை வழங்குவதற்கே அவர்கள் நேரில் வரவேண்டியுள்ளது. 


 எனினும் அடுத்த ஒரு மாதத்திற்குள், இந்த முறையையும் மாற்றப்பட்டு, வேரஹெரவிற்குச் செல்லாமல் சாரதி உரிமத்தைப் புதுப்பிப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று  பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.



 டயானா கமகேவிற்கு பிடியாணை 



முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதால், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.


இந்த வழக்கு நேற்று(26) கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.


அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 



பட்டி பட்டியாக வருகை தரும் 100க்கும் மேற்பட்ட யானைகள் --  அச்சத்தில் மக்கள்



அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் தருவாயில் 100க்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.


குறிப்பாக சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, மாவடிப்பள்ளி, நிந்தவூர் ,இறக்காமம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டி பட்டியாக தினமும் யானைக் கூட்டங்கள் வருகை தருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


குறித்த யானைகளை கட்டுப்படுத்த இன்றும் கூட  வன ஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், யானைகள் பொதுமக்களின் குடியிருப்புக்களை தாக்கி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


மேற்குறித்த பிரதேச  வயல் வெளி பகுதியில்  தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக   காட்டு யானைகள் 40 முதல் 50 வரை வருகை தந்த வண்ணம் உள்ளன.


இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகள் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்நுழைவதுடன், யானைகளை  சிறுவர்கள் விரட்டும்  நடவடிக்கையில்  கடந்த சில தினங்களில் ஈடுபட்டதை காண முடிந்தது.


யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.



இலங்கை மின்சார சபை நான்கு நிறுவனங்களாக மறுசீரமைப்பு



புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.  


இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி நான்கு நிறுவனங்களில் ஒன்றிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 


இந்தச் செயல்முறைக்கு இன்று(27) முதல் இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிறுவனங்கள் அரசின் உரிமையின் கீழ் இருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. 


புதிய நிறுவனங்களில் உள்வாங்க விரும்பாத ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓய்வு வழங்கப்படும். 


இதற்கிடையில், புதிய நிறுவனங்களில் சிரேஷ்ட நிர்வாகப் பதவிகளுக்கு, தற்போது இலங்கை மின்சார சபையில் உயர் பதவிகளில் பணியாற்றும் பொறியியலாளர்களை நியமிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 சுற்றுலாத்துறையால் பல நாடுகளில் முன்னெடுப்பு!



இலங்கை சுற்றுலாத்துறை, எதிர்வரும் செப்ரெம்பர் 8 முதல் 11 வரை  தொடர்ச்சியான நோர்டிக் சாலைக் கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.


உலகெங்கிலும் உள்ள இலக்கின் தனித்துவம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் அதன் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றை இந்தக் கண்காட்சி வெளிப்படுத்தும். 


இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் படி, இந்த சாலைக் கண்காட்சிகளை ஸ்காண்டிநேவியா (டென்மார்க், நோர்வே, பின்லாந்து மற்றும் ஸ்வீடன்) முழுவதும் நடத்தவும், செப்டம்பர் 2025 இல் ஸ்டாக்ஹோமில் ஒரு நுகர்வோர் ஊக்குவிப்பு நிகழ்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த நடவடிக்கைகள் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 2025 சர்வதேச விளம்பர நாட்காட்டியின் ஒரு பகுதியாகும். இது சந்தை நம்பிக்கையை மீண்டும் பெறவும், வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்தவும், இலங்கையை உயர் மதிப்புள்ள சுற்றுலா தலமாக மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஸ்டாக்ஹோம் நுகர்வோர் ஊக்குவிப்பு  திறந்தவெளி கலாச்சார நிகழ்ச்சிகள், ஃபேஷன் மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் முன்னெடுக்கவுள்ளது. 


இலங்கை சுற்றுலாவுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் இது ஏற்கனவே 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் குறிப்பிடத்தக்க அடையாளத்தைத் தாண்டிவிட்டது.


மேலும் பார்வையிடத் தகுந்த உலகின் முன்னணி பயணத் தலங்களில் ஒன்றாக இதுவரை பல சர்வதேச ஒப்புதல்களைப் பெற்றுள்ளது. 


இலங்கை சுற்றுலாத்துறை ஆரோக்கியம், சாகசம், கலாச்சாரம் மற்றும் சமூக அடிப்படையிலான சுற்றுலா உள்ளிட்ட புதிய இலங்கை சுற்றுலா தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. 


இலங்கை ஏற்கனவே பல பயணிகள் மற்றும் விடுமுறைக்கு வருபவர்களிடையே ஒரு பயண மற்றும் விடுமுறை விருப்பமான இடமாக மாறி வருகிறது.


கடந்த ஓகஸ்ட் 18, 2025 நிலவரப்படி 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இந்த இடம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதையடுத்து இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Phone பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி..... - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.