2024 A/L பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள்

2024 A/L பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் ..... - !





2024 A/L பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள்




 


2024 A/L பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் 






2024 -2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.


இதனைத் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பலத்த பாதுகாப்பு!


கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புறப்  பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 


எனினும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிந்துரைகளின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 


அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அவரது வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்திலும் அதனை சுற்றிய வளாகத்திலும் பாதுகாப்புப் பலத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தம்



தேசிய தடகள, மேசைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த அறிவிப்பு நேற்று (25) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்மூலம், குறித்த மூன்று சங்கங்களின் நிர்வாக மற்றும் மேற்பார்வை செயல்பாடுகள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.


1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33ஆம் பிரிவுகளின்படி இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழில் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்



எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 


70 மில்லியன் ரூபாய் செலவில் அலுவலக பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்  தெரிவித்தார். 


அதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர் வடக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தமக்கான கடவுச் சீட்டுக்களை யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் புதிய அலுவலகத்தினுடாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 


யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


அதற்கமைய, ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடாக புதிய அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார். 


ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 


சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



காலாவதியான பேரீச்சம்பழங்கள் கைப்பற்றல்



வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 


குறித்த சபையினரால் அப் பகுதியில் நடத்தப்பட்ட பரிசோதனையின்போதே காலாவதியான 3620 கிலோகிராம் பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


கைப்பற்றப்பட்ட பேரீச்சம்பழங்களின் பெறுமதி ரூபாய் 6.5 மில்லியன் ஆகும். 


தொடர்ந்து பேரீச்சம்பழங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 






2024 A/L பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் 

No comments

Theme images by fpm. Powered by Blogger.