தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் ---- விண்ணப்பத் திகதி அறிவிப்பு........ - !
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் ---- விண்ணப்பத் திகதி அறிவிப்பு........ - !
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் ---- விண்ணப்பத் திகதி அறிவிப்பு...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் 2025 செப்டம்பர் 09 முதல் 22 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா...?
நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சி.டி. அலஹக்கான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஒரு புறத்தில் விலங்குகளுக்கான தீவனங்களின் விலை அதிகரித்து செல்வதாகவும் மறுபுறத்தில் முட்டைக்கான விலை குறைவடைந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகளுக்கான உணவு மற்றும் முட்டை விலைக்கு இடையிலான தொடர்பினை அரசாங்கம் ஏற்படுத்த தவறினால் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டைகளை உற்பத்தி செய்வதனை தவிர்க்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது முட்டையை உற்பத்தியாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய தரப்பினருக்கு நியாயம் ஏற்படக்கூடிய வகையிலான முட்டை விலை முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எல்ல விபத்து ---- ஏற்பட காரணத்த வெளியிட்ட இந்திக ஹபுகொட...
எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கு சாரதியின் கவனயீனமே காரணம் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
சாரதியினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் வீதியை விட்டு விலகி பேருந்து பள்ளத்துக்குள் வீழ்ந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட கருத்துக்களாவன,
“எல்ல பகுதியில் விசேட விசாரணைகள் நடைபெற்ற வருகின்றன. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.
பதுளை, பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
25 வயதான ஒருவரே பேருந்தின் சாரதியாக செயற்பட்டுள்ளார். அவரால் பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நடத்திய சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் தீப்பரவல்..
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, திம்புலாகல கந்த பகுதியில் நேற்று (07) பிற்பகல் ஏற்பட்ட காட்டுத் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உடவலவ பகுதியிலுள்ள வனப்பகுயில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உடவலவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை, உக்குவெலவில் உள்ள ஒரு வனப்பகுதியிலும், இரத்தினபுரி, கொன்கஸ்தென்னவில் உள்ள ஒரு வனப்பகுதியிலும் தீப்பரவல் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பூட்டானில் ---- அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவு...
பூட்டானில் இன்று அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாவதாக உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை இந் நிலநடுக்கம் பதிவான சில மணி நேரங்கள் கழித்து 2.8 ரிச்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் எவ்வித உயிரிழப்புகளோ, சேதங்களோ ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் ---- விண்ணப்பத் திகதி அறிவிப்பு........ - !
No comments