கடுமையாகும் சட்டம்........ - !
கடுமையாகும் சட்டம்........ - !
கடுமையாகும் சட்டம்...
08/09/2025முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள், கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் பகுதிகளில் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல், சட்டவிரோத மேலதிக உதிரிபாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்யப்படவுள்ளது.
அதிகமான சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பில் இன்று முதல் சட்டத்தை கடுமையாக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது குண்டு வெடிப்பு
பாகிஸ்தானின் பக்துன்கவா மாகாணத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியொன்றின்போது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
உணவுகளின் விலை தொடர்பில் வெளியான தகவல்..
முட்டைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களின் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.அழககோன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை.
முட்டையின் விலை சுமார் ஒரு வருடமாகக் குறைந்துள்ள நிலையில், முட்டைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களின் விலை குறையவில்லை என்று முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே,கேக், முட்டை ரொட்டி, உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும்.
தற்போது முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பண்ணையில் இருந்து ஒரு முட்டை 24-25 ரூபாவுக்கு சந்தைக்கு வழங்கப்படுகின்றது.
நாடு தற்போது முட்டை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.''என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த ---தொழிற்சங்கங்கள் தயார்...
மறுசீரமைப்புக்கு எதிராக தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த மின்சார தொழிற்சங்கம் தயாராக இருப்பதாக இலங்கை மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்கவில்லை என்றால், இந்த போராட்டம் கூட்டு வேலைநிறுத்தமாக விரிவடையக்கூடும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தன உதய குமாரவின் கூற்றுப்படி, வங்கி, தொலைத்தொடர்பு மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளில் உள்ள தொழிற்சங்கங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இது அவர்களின் போராட்டத்திற்கு பரவலான ஆதரவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
”விதிமுறைக்கு ஏற்ப வேலை” தொழிற்சங்க நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை தொடங்கி இம்மாதம் 15 வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், இம்மாதம் 16 முதல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும், அதுவும் தோல்வியடைந்தால், நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்திற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகமும் மின்சாரத் துறை சீர்திருத்த அலுவலகமும் பொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, மின்சார திருத்தச் சட்டத்திற்கு முரணான முறையில் CEB மறுசீரமைப்பு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய வளங்களைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தொழிலாளர்களின் உரிமைகளை மீறியும், தொழிற்சங்கங்களுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைப் புறக்கணித்தும் இந்த மறுசீரமைப்பை மேற்கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மறுசீரமைப்பு செயல்முறையை முறையாக நடத்துதல் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட 24 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன.
பல் மருத்துவ பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு...
பல் மருத்துவ பட்டதாரிகள் 86 பேரை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்ய சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட நியமனக் கடிதங்கள் நாளை (08) காலை 9.30 மணிக்கு கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் வழங்கப்படவுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடுமையாகும் சட்டம்........ - !
No comments