கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு --- ஜனாதிபதி அறிவுறுத்தல்..... - !

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ---  ஜனாதிபதி அறிவுறுத்தல்..... - !





கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ---  ஜனாதிபதி அறிவுறுத்தல்..... - !




 

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ---  ஜனாதிபதி அறிவுறுத்தல்..... - !



அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் எமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பை முறைமைப்படுத்துதல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும், ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில், அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் விரும்பிய இலக்குகளை அடைய தேவையான முதலீடுகளைச் செய்யுமாறும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.


நாடு முழுவதும் பரந்து காணப்படும் தொழிற்கல்வி திட்டங்களுக்குப் பதிலாக, கல்வி அமைச்சின் தொழிற்கல்வி பிரிவின் தலையீட்டின் மூலம் ஒரு தேசிய தொழிற்கல்வித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் இன்று (29) காலை ஜனாதிபதி செயலகத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.



கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய 03 துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டின் கீழ் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது. 



“இலங்கை அடையாளத்தைப் பகிர்ந்து கொள்ளும் திறமையான பிரஜைகள் மூலம் உலகளாவிய சமூகத்தில் தலைசிறந்த நிலையை அடைதல்” என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ் கல்வி அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன் போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.


வெளிநாட்டு உதவியின் கீழ் பாடசாலைக் கட்டமைப்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. 


பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டம் (GEMP), இரண்டாம் நிலைக் கல்வித் துறை அபிவிருத்தித் திட்டம் (SESIP) போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர். 


நீண்ட காலமாக பாடாசலைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஆரம்பப் பாடசாலை அபிவிருத்தி உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். பாடசாலை போசாக்கு உணவுத் திட்டம், புலமைப்பரிசில், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள், சுரக்ஷா காப்புறுதித் திட்டம், பின்தங்கிய பாடாசலைகள் மற்றும் பிரிவேனாக்களின் மாணவர்களுக்கு காலணிகள் வழங்குதல், பெண் மாணவர்களுக்கு சுகாதார நப்கின்கள் வழங்குதல், தொழில்நுட்ப பாட புலமைப் பரிசில் திட்டம், 'சுஜாத தியனி' புலமைப்பரிசில் திட்டம் மற்றும் 'சுபக' புலமைப்பரிசில் திட்டம் போன்ற நலன்புரித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.


அடுத்த ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். 



2026 ஜனவரி 05 ஆம் திகதி புதிய பாடசாலை தவணை தொடங்குவதற்கு முன்பு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. 


இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்ட புதிய நிர்மாணப்பணிகள் குறித்தும் தனித்தனியாக ஆராயப்பட்டது. அடுத்த ஆண்டு, பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளை விரிவுபடுத்துதல், வசதியான கற்றல் சூழலை உருவாக்க பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களை சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்த்துதல் மற்றும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப பட்டப்படிப்பு திட்டங்கள் மற்றும் பாடத்திட்டங்களை மீளாய்வு செய்வதன் மூலம் புதிய கல்வித் திட்டங்களைத் தயாரிப்பதாக இதன்போது அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். 


தொழில் கல்வித் துறையை நெறிப்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. 2026-2030 காலகட்டத்தில் 50 தொழிற்பயிற்சி நிறுவனங்களை நவீனமயமாக்குதல் மற்றும் 09 திறன் மையங்களை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.


    

தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை



31 நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொலரா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஜனவரி முதல் இந்த மாத இறுதிவரை கொலராவால் பாதிக்கப்பட்ட 31 நாடுகளில் 409,000 நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4,738 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.


முன்னர் கொலரா நோயாளர்கள் அடையாளம் காணப்படாத கொங்கோ மற்றும் சாட் போன்ற நாடுகளிலிருந்து தற்போது நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொலராவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.


இந்த அதிகரிப்புக்கு மோதல், வறுமை, இடப்பெயர்ச்சி, இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் என்பன காரணமாகின்றன.


விசேடமாக கிராமப்புற மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நோய் அதிகளவில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.


சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்துக்கான அணுகலை மேம்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பிரசாரங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் நிலைமை மோசமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளது.



இலங்கைக்கு நன்மைகள் இருப்பின்  ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதி - அரசு அறிவிப்பு



நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய இனி அனுமதியளிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.


இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,


உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து தீர்மானிக்க வெளிவிவகார அமைச்சு விசேட குழு அமைத்து கலந்துரையாடி வருகிறது. 


இவ்வாறான ஆய்வுக்கப்பல்களின் வருகை குறித்து ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பொதுவானவொரு திட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தில சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என வேறுப்படுத்தி பார்க்க விரும்ப வில்லை. இறுதியில் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.


மறுபுறம் இவ்வாறான ஆய்வுக்கப்பல்கள் வரும் போது உலகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதனையும் ஆராய வேண்டும். 


ஏனெனில் வல்லரசு நாடுகளுக்கு இடையில் போர் சூழலும் போட்டித்தன்மையும் காணப்படுகின்றமை இரகசியமான விடயமல்ல.


எனவே ஏவுகணை தாக்குதல்கள், புவிசார் அரசியல் நலன்கள், ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கலாசார விஜயங்கள் என பல கோணங்களில் ஆய்வுக்கப்பல்களின் வருகையை கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது என்றார். 



இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம்! பிரதி அமைச்சர் சுனில் சுட்டிக்காட்டு



அரச சேவைக்கு பொறுத்தமற்ற 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.


மஹரகம நகரசபையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம்.


எவராயினும் நேர்மையாக பணியாற்றினால் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்படாது. 


அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையை சரிவர நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அவர்களை பாதுகாப்போம்.


எவ்வாறிருப்பினும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க முடியாது. இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.


தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப் போவதில்லை. அதேபோன்று ஏனைய துறைகளிலும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 



யாழில் கடவுச்சீட்டு பெற உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்



எதிர்வரும் முதலாம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் திறந்து வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இதனை தெரிவித்துள்ளார்.


வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு குடியகல்வு அலுவலகம் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படவுள்ளது.


அதற்காக எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி , மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


அதனை தொடர்ந்து யாழ் .மாவட்ட செயலகத்தில் கடவுசீட்டு , அலுவலகத்தை திறந்து வைத்து, கடவுசீட்டு வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.


பின்னர் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பார்.


அத்துடன் யாழ் . பொது நூலகத்திற்கு விஜயம் செய்து , நூலகத்தை பார்வையிடவுள்ளதுடன் , சில நூல்களையும் அன்பளிப்பு செய்யவுள்ளார்.



புத்தளம் மாவட்ட செயலாளரை கௌரவித்த  ---  புத்தளம் ஊடகவியலாளர்கள்



புத்தளம் மாவட்ட செயலாளரை புத்தளம் ஊடகவியலாளர்கள் கௌரவித்து உள்ளனர்.


களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் புத்தளம் மாவட்ட செயலாளர்  எச்.எம்.எஸ்.பீ. ஹேரத் , புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களினால் கௌரவிக்கப்பட்டார்.


புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.


புத்தளம் மாவட்ட செயலாளராக கடந்த மூன்றரை வருடங்களாக கடமையாற்றி வந்த இவர், செப்டம்பர் மாதம் முதலாம் திகதி களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கு இவர் செய்த சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வகையில்,


புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னம் வழங்கி உள்ளனர்.


 புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஊடக அதிகாரி இந்துனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு கொண்டுள்ளனர்.



கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ---  ஜனாதிபதி அறிவுறுத்தல்..... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.