அரச பரீட்சை நாட்காட்டி 2025 - இலங்கை பரீட்சைகள் திணைக்களம்..... - !

அரச பரீட்சை நாட்காட்டி 2025 - இலங்கை பரீட்சைகள் திணைக்களம்..... - !





அரச பரீட்சை நாட்காட்டி 2025 - இலங்கை பரீட்சைகள் திணைக்களம்..... - !




 

அரச பரீட்சை நாட்காட்டி 2025 - இலங்கை பரீட்சைகள் திணைக்களம்..... - !



செப்டம்பர் மாத அரச பரீட்சை நாட்காட்டி – 2025









வேலை நிறுத்த போராட்டத்துக்கு தயாராகும் வங்கி உத்தியோகத்தர் 



பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரச வங்கி சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.


பிரதான மூன்று அரச வங்கிகளிலும் வருடாந்த போனஸ் கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு நியாயமற்ற முறையில் வரையறைகள் விடுக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றுக்கு அதிக வரி அறவிடப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து அரச வங்கி சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.


பல தசாப்தங்களாக தாம் பெற்று வந்த உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதாகவும், சலுகைகள் நீக்கப்படுவதாகவும் குறித்த தொழிற்சங்கங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. போனஸ் கொடுப்பனவு நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறது.


இலங்கை மின்சாரசபைக்கு செய்தததையே அரச வங்கிகளுக்கும் செய்கின்றனர். அரச வங்கி உத்தியோகத்தர்களுடன் பேச்சுவார்த்தைளுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்துவதற்கு கூட இயலாமல் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளார்.


இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க, 


தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைவதற்குள் அரச வங்கி உத்தியோகத்தர்களையும் வீதிக்கு கொண்டு வருவதில் இந்த அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது.


எம்மை அடக்க முற்பட்டால் சகல அரச வங்கிகளையும் மூடி வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயங்க மாட்டோம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம் என்றார்.



கண்டி தேசிய வைத்தியசாலையின்  --- நிலம் ஆக்கிரமிப்பு



கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான 58 ஏக்கர் நிலங்களில் 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


இதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


குறித்த  நிலங்களில் வீடுகள், கடைகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக வைத்தியசாலையின் செயல்பாடுகளை பராமரிப்பதில் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.


இலங்கையின் இரண்டாவது பெரிய தேசிய வைத்தியசாலையாகவும், போதனா வைத்தியசாலை எனவும் அழைக்கப்படும் கண்டி தேசிய வைத்தியசாலை, தற்போது 80 வார்டுகள், 11 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், நில ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்த வைத்தியசாலையை மேம்படுத்துவதில் தடைகள் ஏற்படுகின்றன.


அத்துடன், வைத்தியசாலைக்குச் செல்லும் வீதிகளில் கடைகள், மலர்சாலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 இந்திய பிரதமர்  --  சீனா ஜனாதிபதியுடன் பேச்சு



பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீ ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார். 


7 ஆண்டுகளுக்கு பின்னர், சீனாவுக்கான விஜயத்தை இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ளார். 


அதிக சனத் தொகையினை கொண்டு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் இன்று (31) இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். 


அமெரிக்காவின் அதிக வரிவிதிப்புக்கு மத்தியில் சீனா மற்றும் இந்திய ஆகிய நாடுகள் சாதகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன. 


தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 


இந்த உச்சி மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதியையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 


ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் கொள்வனவில் ஈடுபடுவதால், அமெரிக்க ஜனாதிபதியினால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத இறக்குமதியை விதித்தமை குறிப்பிடத்தக்கது.



 அரச நிறுவனங்களுக்கு  ---  வாகனங்கள்



அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். 


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத், 


"அடிமட்ட அளவில் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்த, மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்கள் கிராமங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 


அதிகாரிகள் அங்கு சென்று திரும்புவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு சில வாகனங்கள் தேவை. 


நாட்டில் உள்ள ஒவ்வொரு அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


இதேவேளை செயல்படாத உள்ளூராட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்த பல புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். 


கிராமப்புறங்களின் வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.




அரச பரீட்சை நாட்காட்டி 2025 - இலங்கை பரீட்சைகள் திணைக்களம்..... - !



No comments

Theme images by fpm. Powered by Blogger.