புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..... - !

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..... - !





புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..... - !




புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்.....  




2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


கடந்த ஒகஸ்ட் 10 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



2025 தேசிய வணிக விசேடத்துவ விருது விழா



2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வணிக விசேடத்துவ விருதுகளில் (National Business Excellence Awards 2025), வங்கி அல்லாத நிதிச் சேவைத் துறையின் வெற்றியாளராக Citizens Development Business Finance PLC (CDB) நிறுவனம் எட்டாவது வருடமாக வெற்றி வாகை சூடியுள்ளது. 


அத்துடன், நிறுவன முகாமைத்துவத் திறன் விசேடத்துவத்திற்காக விசேட பாராட்டு விருதையும் (Merit Award) CDB நிறுவனம் வென்றுள்ளது. 


இந்த இரண்டு கௌரவங்களும், ஒரு நிலையான நிதி நிறுவனம் என்ற வகையில் வணிக விசேடத்துவத் தன்மையில் தொடர்ச்சியாக முன்னணி வகிக்கும் CDB நிறுவனத்தின் தலைமைத்துவத்தையும், அதன் ஒப்பற்ற சேவை தொடர்பான கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.


நிறுவனத்தின் குழுவினரால் வணிக விசேடத்துவத்தை நிலையாக பேணுவதற்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்தும் செயற்பாடுகள் மற்றும் பசுமை பொருளாதார முன்னேற்றங்களை முன்னெடுக்கும் பணிகள் ஆகியன அதன் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை பலப்படுத்துவதாக, CDB நிறுவனத்தின் பிரதி பிரதம செயற்பாட்டு அதிகாரி தமித் தென்னகோன் பாராட்டினார். 


“எமது பயணத்தின் ஒவ்வொரு படியையும் உறுதியுடன் எடுத்து வைக்க எமக்கு வலிமையையும், ஆதரவையும் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் வழங்குகின்ற, எமது குழுவிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர்கள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “தொழில்நுட்பத்தையும், நிலைபேறான தன்மையை மையமாகக் கொண்ட புத்தாக்கம் கொண்ட நிதிச் சேவை வழங்குநர் எனும் வகையில், பல்வேறு பிரிவுகளிலான வணிக விசேடத்துவத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் CDB நிறுவனம் வணிக விசேடத்துவத்தை வெற்றி கொண்டிருப்பதோடு, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்வை வழங்கி வருகிறது.” என்றார்.


இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான தேசிய வணிக விசேடத்துவ விருதுகள் (NBEA) மூலம், நிறுவனங்களின் வணிக திறமைக்கான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நாடு வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டங்களை சந்தித்த நிலையிலும் CDB இன் வணிக விசேடத்துவம், நிலைபேறான வணிக மாதிரிகள், வணிக நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் நிறுவனம் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும்

இவ்விருதுகளை வென்றுள்ளது.


பல்துறை நிறுவனங்களிலிருந்து வந்த விண்ணப்பங்கள், ஏழு விடயங்களின் அடிப்படையில், புகழ்பெற்ற நடுவர் குழாமினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. தலைமைத்துவம், பெருநிறுவன ஆளுகை மற்றும் யுத்தி, திறன் விருத்தி, செயல்திறன் முகாமைத்துவம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கான அணுகல், சுற்றுச்சூழல் சமூக ஆளுகை, வணிக மற்றும் நிதி முடிவுகள் ஆகிய 7 விடயங்களிலான வணிக விசேடத்துவமே அவையாகும்.


“இந்த ஏழு பிரிவுகளிலும் நாம் வலிமையுடனும் சுறுசுறுப்பாகவும் உள்ளோம்” என தமித் தென்னக்கோன் சுட்டிக் காட்டினார். 


“ஒரு நிறுவனத்தின் தங்குதடையற்ற, திறமையான மற்றும் வெளிப்படையான செயற்பாடுகளுக்குத் தேவையான ஒழுங்குமுறை நடைமுறைகள், முதலீடுகளை ஈர்ப்பதிலும் பங்குதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் அல்லாதோரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், பங்குதாரரின் மதிப்பை உயர்த்துவதிலும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என நாம் நம்புகிறோம்” என்றார்



நன்னீர் குழாய்களை அமைக்க அகழப்பட்ட குடியிருப்பு வீதிகள்  ---  பல காலங்களாக மூடப்படவில்லை



வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.


வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளைக் அகழ்ந்து  குழாய்களை அமைத்து வருகின்றனர்.


குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக விட்டு செல்கின்றனர். இதனால் மருதங்கேணி உள்ளக வீதிகள்  பெரும் சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளது


கனரக  வாகனங்கள் உள்வீதியால் பயணிக்க தடை காணப்படுகின்ற வேளையிலும் கனரக வாகனங்களை உள்வீதி ஊடாக கொண்டு வந்து வீதிகளை சேதப்படுத்தியுள்ளனர். 


உரிய முறையில் மருதங்கேணி பிரதேச மக்களால் நன்னீர் திட்ட  அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கடந்த ஆறு மாதங்களாக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 


மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு  நன்னீர் திட்ட அதிகாரிகள் ஏனைய பகுதியில் தமது வேலையை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையே இளைஞர்கள் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும், தாளையடி நன்னீர் திட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான பரிதா,   தான் தோன்றித்தனமாக பதில் அளித்ததால் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேல் அதிகாரியை அழைத்தனர். 


குறித்த இடத்திற்கு சென்ற மேலதிக அதிகாரி ஒருவர், இன்று  உரிய பதிலை வழங்குவதாக கூறிவிட்டு அனைத்துப் பணிகளையும்  நிறுத்திவிட்டுச் சென்றனர். 


அங்கு சென்றிருந்து பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் வேலாயுதம் சசிகாந்த் குறித்த வீதியை பார்வையிட்டதுடன் குறித்த வீதி மிகப் படுமோசமான முறையில் காணப்படுவதாக தெரிவித்தார்.



தங்கத்தின் விலை; இரண்டே நாட்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்



கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (01) தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. 


கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர். 


கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. 


இந்த நிலையில் இன்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றிற்கு 2000 ரூபாயால் அதிகரித்து, 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 


அந்தவகையில்,  22 கரட் தங்கம் பவுண் ஒன்று 260,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாயாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.



சூடானில் ஏற்பட்ட மண்சரிவில்   ----  1000 பேர் பலி



மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வௌியாகியுள்ளது. 


பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் உதவி கோரப்பட்டுள்ளன.


புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..... - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.