முக்கிய அறிவித்தல்-FREE SCHOLARSHIP FOR Students 2025..... - !

முக்கிய அறிவித்தல்-FREE SCHOLARSHIP FOR Students 2025..... - !





முக்கிய அறிவித்தல்-FREE SCHOLARSHIP FOR Students 2025..... - !




முக்கிய அறிவித்தல்-FREE SCHOLARSHIP FOR Students 2025..... - !



வெளிநாட்டில் பணிபுரியும் மற்றும் ஏற்கனவே பணிபுரிந்தோரின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள்(பணஉதவி) வழங்குவதற்காக விண்ணப்பம் கோரல் - 2025


Scholarships for Migrant Workers Children-SLBFE 2025 APPLICATION




ORGANIZATION SLBFE
CLOSING DATE 15.09.2025

FULL DETAILS





APPLY ONLINE     CLICK HERE    



Ministry of Industry and Foreign Employment Registration with Sri Lanka Foreign Employment Bureau Distribution of Scholarships to Children of Foreign Employment Workers 2025 Registered with Sri Lanka Foreign Employment Bureau





ஆப்கானிஸ்தானில்  ---  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.




நெடுஞ்சாலை பயணிகளுக்கு   ----  இன்று முதல் சீட் பெல்ட் கட்டாயம்




நெடுஞ்சாலையில் செலுத்தப்படும் எந்தவொரு வாகனத்திலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். 

இருப்பினும் சீட் பெல்ட் இல்லாத சில வாகனங்களுக்கு அதனை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 




காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு



மட்டக்களப்பு, குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது. 


குரல்கள் அமைப்பு மற்றும் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துர் ரஊப் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. 


இதன்போது 12.07.1990 அன்று புனித ஹஜ் கடமையை முடித்துக் கொண்டும், கல்முனை பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைக்காகவும் சென்று காத்தான்குடிக்கு திரும்பி வரும்போது அவர்கள் கடத்தப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் ஆவணங்களுடன் வந்து தகவல்களை வழங்கினர். 


காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத் அப்துர் ரஊப் என்பவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி குருக்கள் மடம் மனித புதைகுழியை தோண்டுவதற்கு கட்டளை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



 போதைப்பொருள் பாவனை ---  பறிபோன இரு இளைஞர்கர்களின் உயிர்கள்



பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


இவ்வாறு உயிரிழந்தவர்கள் பசறை மற்றும் கம்பளை பகுதிகளை சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று மதியம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்கு சென்ற சிறுவன் ஒருவர் ஜன்னல் வழியாக வீட்டினுள் எட்டி பார்த்த போது, இருவர் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார். 


உடனே அயலவர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அயலவர்களினால் 1990 அவசர உயிர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டது.


பின்னர் காவு வண்டி அவ்விடத்திற்கு வந்த பின்னர் காவு வண்டியில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்விரு நபர்களையும் பரிசோதித்த போது இரண்டு ஆண்களும் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.


இதன் பின்னர் பசறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டனர். 


குறித்த இருவரும் கப்பொலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீடொன்றிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அவர்களது வீட்டுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றிற்கு சென்று அங்கு போதை பாவனையில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், போதை அதிகரித்தமையே மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


மரணித்த இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் இறந்தவர் ஒருவரின் கையில் போதைமருந்தை உட்செலுத்தக்கூடிய ஊசி ஒன்றும் காணப்பட்டதாகவும், அவர்கள் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இது தொடர்பாக பசறை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



முக்கிய அறிவித்தல்-FREE SCHOLARSHIP FOR Students 2025..... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.