பெற்றோர்களின் கவனத்திற்கு....... - !
பெற்றோர்களின் கவனத்திற்கு....... - !
பெற்றோர்களின் கவனத்திற்கு...!
1.பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்...
2.மேலாடையின்றியோ... ஆடை இன்றியோ... குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள்..
3.ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்..
4.யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்..
5.வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்.
6.வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக் காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்..
7.தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்..
8.ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகி விடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
9.குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
10 .உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்..
11.படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
12.ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.
13.குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
14.ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டையிடாதீர்கள்.
15.ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல.
ஒன்லைனில் கொள்வனவு செய்யும் ---- இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
விசேடமாக சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகார சபை அறிவுறுத்துகிறது.
இவ்வாறு பொருட்களை விண்ணப்பம் செய்வதற்கு முன் விற்பனையாளரின் முகவரி, தொடர்புத் தகவல் மற்றும் வாடிக்கையாளர் மதிப்புரைகளைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் போலி reviews குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அதிகாரசபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த சிறுவன்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன் அதே விமானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
காபூலிலிருந்து புறப்பட்ட கே.ஏ.எம் (KAM) விமானம், இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
அப்போது, விமானத்தின் சக்கரப் பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கண்டனர். அவனை விசாரித்தபோது, தான் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து வந்ததாகத் தெரிவித்தான்.
சிறுவன் ஒளிந்திருந்த பகுதியைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு சிறிய ஒலிபெருக்கி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், விமானம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், எந்தவிதமான சதிச் செயல்களும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
விசாரணைக்கு பின்னர், அந்தச் சிறுவன் மீண்டும் அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவ குறிப்பு
நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
உடலின் ஆரோக்கியத்திற்கு தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.
ரத்த சோகை நீங்கும்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்தணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
இதய நோய்கள் நீங்கும்
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
கண் பிரச்சனை நீங்கும்
கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
பசியின்மை பிரச்சனை நீங்கும்
பசியின்மையால் அவதிப்படுபவர்களும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் இப்பிரச்சினையை சரிசெய்யலாம்.
சிறுநீரக பிரச்சினை நீங்கும்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறி தொண்டைப்புண்ணும் குணமாகும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்.
உயிரிழந்த இரட்டை குழந்தைகள்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்பின்பு, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த நிலையில், பெண் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆண் குழந்தை உயிருடன் பிறந்த நிலையில் 45 நிமிடங்கள் கழித்து உயிரிழந்துள்ளது.
குழந்தைகளின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களின் கவனத்திற்கு....... - !

No comments