சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு வந்த சோதனை....... - !

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு வந்த சோதனை....... - !





சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு வந்த சோதனை....... - !





சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு வந்த சோதனை



ஹம்பாந்தோட்டை மற்றும் கோன்னொருவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று கண்டிக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது, ​​அவர்களில் ஐந்து பேர் திடீரென மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


பேராதனை தாவரவியல் பூங்காவை நேற்று மாலை பார்வையிட்ட பிறகு, மாணவர்கள் குழு வெளியே வந்து அருகிலுள்ள கடைகளில் இருந்து சிற்றுண்டி மற்றும் பால் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அதன்பின் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றுள்ளதுடன்


பின்னர், மாணவர்கள் குழு அவர்களின் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த தேசிய கண்காட்சி மைதானத்திற்கு அருகில் வந்தபோது, ​​ஐந்து மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். 


அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் மயக்கமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


மேலும் அவர்கள் உணவு வாங்கியதாகக் கூறப்படும் கடைகளைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். 



எல்ல பேருந்து விபத்தின்    ------   விசாரணை நிறைவு



எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. 


இது குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த இரண்டு நாட்களுக்குள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


குறித்த குழு அறிக்கையின்படி, விபத்தில் சிக்கிய பேருந்து முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், பிரேக்கிங் அமைப்பில் குறைபாடுகள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது. 


மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் வீதி குறித்து சரியான அறிவு இல்லாமல் பேருந்தின் சாரதி செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்கிடையில், விபத்து நடந்த நேரத்தில் பேருந்துக்கு முன்னால் வந்த சொகுசு காரின் கெமரா தரவு பதிவு எதுவும் இல்லை என்று பொலிஸார் கூறுகின்றனர். 


இது தொடர்பாக காரின் நிறுவனத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டதாகவும், அந்த அறிக்கையின்படி, சர்ச்சைக்குள்ளான காரின் கெமரா அமைப்பில் எந்த தரவும் சேமிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எல்ல பொலிஸ் நிலைத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 




22 அன்று 21 வது பிறந்த நாள்



செப்டம்பர் 22 ஆம் திகதி, திங்கட்கிழமை (22) தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடும் இளைஞன், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, 22 ஆம் திகதியன்று மரணமடைந்த சம்பவம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.


வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதை செலுத்தி சென்ற இளைஞர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திங்கட்கிழமை (22) காலை உயிரிழந்தார் என்று நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த விபத்தில் உயிரிழந்தவர் நுவரெலியாவின் ஹாவா எலிய பகுதியைச் சேர்ந்த மனித் அபூர்வ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலிய சந்தியில் ஞாயிற்றுக்கிழமை 21)  இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


தனது வீட்டிலிருந்து நுவரெலியா நகருக்குள் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், குறித்த சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் செல்ல முற்பட்டபோது, இராகலையில் இருந்து நுவரெலியா நோக்கி அதிவேகமாக சென்ற லொறியில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விபத்து   விசாரணை நடத்தி வரும் நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.


விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21வது பிறந்தநாள் திங்கட்கிழமை (22) ஆகும் .


உயிரிழந்த இளைஞன் நுவரெலியா மாவட்ட   பிராந்திய செய்தியாளர் சம்பத் ஜெயலாலின் ஒரே மகன் ஆவார். 




ஹோட்டலை இடிக்க உத்தரவு




முன்னாள் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தின் மனைவி திருமதி அஜந்தா ரூபசரி ஹேரத்துக்குச் சொந்தமான ஹோட்டல், பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த உத்தரவை மத்திய நுவரகம் மாகாண பிரதேச செயலாளர் சுதர்ஷன திசாநாயக்க பிறப்பித்தார், அவர் ஹோட்டல் மற்றும் அருகிலுள்ள பல கட்டமைப்புகள் உட்பட கட்டிடங்கள் 60 பேர்ச் பாதுகாக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.


அதிகாரிகளின் கூற்றுப்படி, கட்டுமானங்கள் முறையான ஆவணங்கள் அல்லது சட்டப்பூர்வ ஒப்புதல்கள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டன. அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள் இடிப்புப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.


அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள குளங்களின் இருப்புக்களை எல்லை நிர்ணயம் செய்து பாதுகாப்பதற்கான பரந்த அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


நீர்ப்பாசனத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தில், நிலத்தை அளவீடு செய்து, எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க எல்லைக் குறிகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.


சமீபத்திய கணக்கெடுப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய சொத்து பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட எல்லைக்குள் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டதால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பிரதேச செயலாளர் திசாநாயக்க தெரிவித்தார்.




மருத்துவ குறிப்பு


 இரவு லேட்டா சாப்பிடுறீங்களா? அப்போ இந்த நோயின் தாக்கம் இருக்கும்.


பொதுவாக ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் உணவு எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனின் உணவு பழக்கங்கள் சரியாக இருந்தால் நீங்கள் இளமையாகவே நீண்ட நாட்களுக்கு வாழலாம்.


இதன்படி, ஒருவர் மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு பின்னர் தங்களின் அன்றாட வேலைகளை தொடர்ந்து செய்யலாம்.


மதிய நேர உணவிற்கு பின்னர் நாம் எப்போதும் வேலைச் செய்வது வழக்கம். ஆனால் இரவு சாப்பாடு எடுத்து கொண்டதற்கு பின்னர் எந்தவித வேலையும் செய்யாமல் தூங்கி விடுவோம். இதனால் கல்லீரல் பாதிப்பு வரும் என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கிறார்.


இன்னும் சிலர் இரவு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு நள்ளிரவில் உணவு எடுத்துக் கொள்வார்கள். இது செரிமானத்தில் தாக்கம் செலுத்தும்.


அந்த வகையில், இரவு நேர உணவு தாமதமாக சாப்பிடும் பொழுது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பதிவில் பார்க்கலாம். 


1. இரவு நேரம் உணவை தாமதமாக எடுக்கும் பொழுது உடலில் அதிக கலோரி சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் உடல் பருமன் அதிகரிக்கும். அதே சமயம், கொழுப்பு கல்லீரலில் படிய தொடங்கி, அது நாளடைவில் லிவர் கொழுப்பு கல்லீரல் நோயை ஏற்படுத்தும்.


2. காலை, மதிய உணவுகளுக்கு பின்னர் வேலைச் செய்வது வழக்கம். ஆனால் இரவு நேரம் உணவை சாப்பிட்டவுடன் சிலர் படுக்கைக்கு சென்று விடுவார்கள். இதனால் அவர்களுக்கு வயிறு சுற்றி கொழுப்பு படியும். அத்துடன் இதயங்களுக்கு செல்லும் நாளங்களில் கொழுப்பு படியும்.


3. இரவு உணவு தாமதமாக சாப்பிடும் ஒருவருக்கு செரிமான கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் வளர்சிதை மாற்றங்கள் பாதிக்கப்பட்டு, நீரழிவு நோய் கூட வரலாம். அத்துடன் உணவு சாப்பிட்ட பின்னர் நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சினைகள் வரலாம். இன்னும் சிலருக்கு வயிறு கனமாக இருப்பது போன்று தோன்றும்.  



சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு வந்த சோதனை....... - !

 

No comments

Theme images by fpm. Powered by Blogger.