வரலாற்று பிரசவம் --- இலங்கைத் தாய் --- கொழும்பில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த ....... - !
வரலாற்று பிரசவம் --- இலங்கைத் தாய் --- கொழும்பில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த ....... - !
வரலாற்று பிரசவம் --- இலங்கைத் தாய் --- கொழும்பில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த
தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம்
31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் தெரிவிக்கப்படுகிறது - மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள்.
பேராசிரியர் டிரான் டயஸின்
பராமரிப்பில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன.
தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் நல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்க திட்டம் --- 2026ஆம் ஆண்டில்
கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் பணித்திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கல்வி மறுசீரமைப்புக் குறித்த உபகுழு, பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியினால் தயாரிக்கப்பட்ட பணித் திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள், ஆறு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கல்வி மறுசீரமைப்பில் இந்த டிஜிட்டல் மயப்படுத்தலை முன்னெடுப்பது குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு அமைய, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்கு சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், கல்விக்கான தகவல் தொடர்பாடல் குறித்த உபகரணங்கள் மற்றும் வளங்களை வழங்குதல், சில பேரிடர் சூழ்நிலைகளில் பாடாசலைகளைத் தொடர்ந்தும் இயங்கச் செய்தல், மாணவர்களுக்கான சிறுவர் பராயத்தை டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் பெற்றுக்கொடுத்தல் போன்ற துறைகளின் கீழ் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை முன்னெக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
2025 டிசம்பர் 31ஆம் திகதியாகும்போது இணையத்தள வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகள், டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட் மற்றும் கணினி அல்லது மடிக்கணினி அல்லாத பாடசாலைகளுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குறித்த செயலணியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்பொழுது காணப்படும் தகவல்களுக்கு அமைய நாட்டில் உள்ள 3 இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு மின்சார வசதிகள் இல்லையென்றும், 546 பாடசாலைகளில் ஒரு கணினியோ அல்லது மடிக்கணினியோ அல்லது டப் கருவியோ இல்லையென்றும், 2088 பாடசாலைகளில் டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட்கள் இல்லையென்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இங்கு உரையாற்றிய பிரதமர், எதிர்காலத்திற்காக அதிக அளவு பணத்தை முதலீடு செய்து மேற்கொள்ளப்படும் கல்வித் துறையில் இந்த தனித்துவமான மாற்றத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என்று கூறினார்.
அதன்படி, கல்வி மறுசீரமைப்பு தொடர்பாகப் பொருத்தமான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு டிஜிட்டல் செயலணியை அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கை அரசின் செயற்திட்டத்திற்கு முழு ஆதரவு
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று மாலை (25) இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை சென்றடைந்த ஜனாதிபதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மரியாதையுடன் வரவேற்றதுடன், பின்னர் அவர்கள் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்திற்கு உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் செயற்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ஐ.நா. பொதுச்செயலாளரிடம் விளக்கினார்.
இலங்கை அரசாங்கத்தின் புதிய முற்போக்கான செயற்திட்டத்தைப் பாராட்டிய பொதுச்செயலாளர், அதற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்நிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய ஆகியோருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கேபிள் கார் விபத்து --- வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்
குருநாகல் மெல்சிறிபுர நாவுயன பிக்குகள் தியான நிலையத்தில் நேற்றுமுன்தினம்(24.09.2025) நடந்த கேபிள் கார் விபத்தில் இதுவரை ஒன்பது பிக்குகள் மரணமடைந்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் குருநாகல் பகுதியிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களில் மூவர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாவர்.ரஷ்யா மற்றும் ருமேனியா, இந்திய பிக்குகள் ஆவர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், நாவுயன பிக்குகள் தியான நிலையத்தில் மலைப் பகுதியில் இருக்கும் தியான நிலையத்திற்கு 13 பிக்குகள் குறித்த கேபில் காரில் பயணித்துள்ளனர்.
தியான இடத்தை அண்மித்த 10 அடி இருக்கும் தருவாயில் கேபிள் அறுந்துள்ளது. அச்சந்தர்ப்பத்தில் கேபிள் காரில் இருந்து இரு பிக்குகள் பாய்ந்துள்ளனர்.
அவர்களுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
சிலரின் கை,கால்கள் உடைந்துள்ளதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிக்குமார்களின் உடலங்கள் 150 மீட்டருக்கு மேல் வீசப்பட்டு கிடந்தாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது அதாவது நேற்றுமுன்தினம் ஏழு பேர் மரணமடைந்ததோடு நேற்று இரண்டு பிக்குகள் மரணமடைந்துள்ளனர்.
நாவுயன பிக்குகள் தியான நிலையம் 5000 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. அது 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
200 பிக்குகள் வசிப்பதுடன் 250 க்கும் மேற்பட்ட தியான நிலையங்கள் அதாவது குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம்தினம்(24) இரவு தியானத்தில் ஈடுபடுவதற்காக 13 பிக்குகள் மலைப் பகுதிக்கு கேபிள் காரில் சென்றுள்ளனர். கேபிள் கார் பயணிக்கும் தண்டவாளம் 20 வருடங்கள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு குறித்த கேபிள் தினமும் பரிசோதனை செய்யப்படுவதாகவும் நிலையத்திலுள்ள பிக்குகள் தெரிவிக்கின்றனர்.
கேபிள் காரில் 500 கிலோ கிராமே அதி கூடிய பாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
13 பிக்குகள் என்னும் போது இரு மடங்கு பாரம் ஏற்றப்பட்டுள்ளது.கூடிய பாரமே கேபிள் அறுந்து போவதற்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தெரிவிப்பு ---- பாலஸ்தீனத்தை சுதந்திர தனி நாடாக அங்கீகரிப்பதாக
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இன்று உலகின் புதிய பிரச்சினையாக மாறிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் மேலும் கூறினார்.


No comments