உயர்தரப் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு .... - !
உயர்தரப் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு .... - !
உயர்தரப் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு
2025 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான செயல்முறை பரீட்சைகளுக்கான, கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது https://eservices.exams.gov.lk/practical ஊடாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது.
2019 தேர்தலில் சுமார் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். ஆனால் 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது.
அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களை இலங்கை மக்கள் முதல் முறையாக வெளியேற்றினர்.
எங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று பொருளாதார நெருக்கடியைத் தணிப்பது. மற்றொன்று இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது.
பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம்.
அனைத்து சர்வதேச அமைப்புகளும், மதிப்பீட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும், இலங்கை ஒரு நெருக்கடியின் போது விரைவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடாக இருந்ததாக அறிக்கைகளை வழங்கியுள்ளன.
ஒரு பொருளாதாரம் இப்படி சரிந்தால், ஒரு நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
2022 ஆம் ஆண்டில் நாடு சரிந்திருந்தால், முந்தைய நிலைக்குத் திரும்ப 2032 ஆகும்.
ஆனால் நாடு சரிவதற்கு முன்பு 2019 இல் இருந்த பொருளாதாரத்தை அடுத்தாண்டு நாம் அடைய முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்றார்.
காற்றாலைக்கு எதிரான போராட்டம்
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடிவருகின்ற நிலையில், இன்றைய தினம் சனிக்கிழமை மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம் பெற்றது.
இந்த நிலையில், குறித்த காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும், ஜனாதிபதி கடந்த மாதம் அளித்த பணிப்புரையை மீறி, காற்றாலை உதிரிகள் தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக அமைதியான முறையில் காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது
மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்..
இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர்.
குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும் தடிகலால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ஊழியர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ---- பெண் ஒருவர் கொலை
தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று (26) மாலை இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணாவார்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் அயல் வீட்டுக்காரர் எனவும், உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
தகராறு ஒன்றைத் தொடர்ந்து சந்தேக நபர் குறித்த பெண்ணை ஆயுதம் ஒன்றால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துஷ்பிரயோகம் தொடர்பான வீதி நாடகம்!
சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கோடு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் நேற்று (25) மாலை மாந்தை மேற்கு பிரதேச செயலளார் பிரிவில் உள்ள அடம்பன் மற்றும் ஆண்டாங்ககுள பிரதேசத்தில் இடம்பெற்றது.
சீயோன் திருச்சபையின் போவாஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த வீதி நாடகம் இடம்பெற்றது.
சிறுவர்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிநபர்களினதும், சமூகத்தினதும், அரசினதும் கடமையாகும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.
இதன் போது போவாஸ் நிலையத்தின் பங்காளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து வீதி நாடகத்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு .... - !

No comments