இணையப் பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....
இணையப் பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....
இணையப் பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....
குறைந்த நேரத் தொழில்களுக்கு அதிக வேதனம் வழங்குவதாக உறுதியளிக்கும் இணைய விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மோசடிகளை மேற்கொள்வோர், இணைய விளம்பரங்கள் மூலம் தனியாட்களைக் குறிவைத்து, போலியான தொழில் வாய்ப்புக்களுக்காகப் பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையைக் கோருகின்றனர்.
இந்தநிலையில், தொழில் மோசடிகளை எவ்வாறு அடையாளம் கண்டு தவிர்ப்பது என்பது குறித்து மக்களுக்கு தெளிவூட்ட இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு சமூக ஊடக பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களம் - இன்றுடன் 159 ஆண்டுகள் நிறைவு
இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்றுடன் (03) அதன் 159ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது.
1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் நிறுவப்பட்டது. அதன் முதல் பொலிஸ் அதிகாரியாக ஜி.டபிள்யூ.ஆர். கேம்பல் நியமிக்கப்பட்டிருந்தார்.
159ஆவது பொலிஸ் திணைக்கள தினத்தை கொண்டாடும் வகையில் இன்று (03) பொலிஸ் களப் படை தலைமையகத்தில் சிறப்பு விழா நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு போக்குவரத்து பிரிவினர் சிறப்பு போக்குவரத்து திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இப் போக்குவரத்து திட்டத்தின்படி, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குள் தும்முல்ல சந்தியிலிருந்த திம்பிரிகஸாய சந்தி வரையிலான ஹேவ்லொக் வீதியில் பின்வருமாறு வாகனப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் களப் படைத் தலைமையகத்துக்கு எதிரேயுள்ள வெளிச்செல்லும் பாதையில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை ஹேவ்லொக் வீதியிலுள்ள பொன்சேகா வீதி சந்திக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்படும்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குள் தும்முல்ல சந்தி மற்றும் திம்பிரிகஸாய சந்திக்கிடையில் பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையில் கன்டெய்னர், லொறி மற்றும் டிப்பர் போன்ற கனரக வானகப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்
பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் உடல் மாயம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒகஸ்ட் 1 ஆம் திகதியன்று தெமட்டகொட பொலிஸ் பிரிவின் மாளிகாவத்தை ரயில்வே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விவகாரம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சிசுவின் உடலை ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிணவறைக்குச் சென்று சிசுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும் உடல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளவும் சென்றுள்ளனர்.
ஆனால், சிசுவின் உடல் பிரேத அறையில் இல்லை.
எனவே இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு விழா
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நேற்று (02) பெய்ஜிங் வந்தடைந்தார்.
அவருடன் அவரது மகளும் ரயிலில் சீனா வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட ஈரான், கியூபா உள்ளிட்ட 26 நாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த 70 நிமிட நிகழ்ச்சியின் போது சீனாவின் மிகவும் மேம்பட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
"வரலாற்றை நினைவில் கொள்வோம், தியாகிகளை நினைவு கூர்வோம், பிரகாசமான எதிர்காலத்திற்காக அமைதியைப் போற்றுவோம்" என்பது இந்நிகழ்வின் முக்கிய கருப்பொருளாகும்.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்கு பங்களித்த சர்வதேச நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று இரவு (03) சிறப்பு கலை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று இத்தாலிய பிரதி அமைச்சர் இலங்கை வருகிறார்...
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இன்று (03) இலங்கை வருகிறார்.
இன்று (03) முதல் 05 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.
இவ் விஜயத்தின்போது அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனும் மரியா திரிபோடி கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இணையப் பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....
No comments