தலைமை ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவர்கள்......!

தலைமை ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவர்கள்......!



தலைமை ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவர்கள்......!

 

 



 தலைமை ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவர்கள்



பாடசாலை வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியையின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்​பட்​டு உள்​ளார்.


இந்த சம்பவம், தரு​மபுரி மாவட்​டம் அரூர்  அரு​கே​யுள்ள மாவேரிப்​பட்டி கிராமத்​தில் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பாடசாலை செயல்​பட்டு வரு​கிறது. இங்கு 30-க்​கும் மேற்பட்ட மாணவ, மாணவி​கள் பயில்​கின்​றனர். தலைமை ஆசிரியை உட்பட 2 ஆசிரியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.


இந்​நிலையில், தலைமை ஆசிரியை கலை​வாணிக்கு மாணவ, மாணவி​கள் கை, கால்​களை அழுத்தி விட்டு மசாஜ் செய்​யும் காட்சி வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகப் பரவியது. இதனால் அதிர்ச்​சி​யுற்ற பெற்​றோர் பாடசாலைக்கு, செவ்வாய்க்கிழமை (02) மாணவர்களை அனுப்ப மறுத்​து, பாடசாலையை முற்​றுகை​யிட்​டனர்.


இதனிடையே, மாவட்ட தொடக்​கக் கல்வி அலு​வலர் விஜயகு​மார், வட்​டாட்​சி​யர் பெரு​மாள், வரு​வாய் ஆய்​வாளர் சத்​யபிரியா ஆகியோர் பள்​ளிக்கு நேரில் சென்​று, சம்​பந்​தப்​பட்ட தலைமை ஆசிரியை மற்​றும் மாணவ, மாணவி​களிடம் விசா​ரணை மேற்​கொண்டனர்.


இதுகுறித்து மாணவர்​களின் பெற்​றோர் கூறும்​போது, “பல்​வேறு நாட்​களில் மாணவ, மாணவி​களை கை, கால்​களை அழுத்​தி​விட சொல்​வ​தாக​வும், இதுகுறித்து பெற்​றோரிடம் கூறக்​கூ​டாது எனவும் மாணவர்​களை தலைமை ஆசிரியை மிரட்​டு​கிறார். மாணவர்களிடம் அத்​து​மீறி நடந்த தலைமை ஆசிரியை மீது உடனடி​யாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரிவித்தனர்.


கல்​வித் துறை அதி​காரி​கள் கூறும்​போது, “வி​சா​ரணை​யைத் தொடர்ந்​து, மாவட்ட நிர்​வாகத்​தின் வழி​காட்​டு​தல்​படி, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளார். அவருக்​குப் பதிலாக வேறு ஆசிரியர் உடனடி​யாக பணி​யில் இணைவார்” என்​றனர்​.



ஐ.தே.க. ஆண்டு விழா ஒத்திவைப்பு!



ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வை எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.


கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.



இலங்கை - சிம்பாப்வே முதலாவது டி20 போட்டி இன்று ஆரம்பம்



இலங்கை கிரிக்கெட் அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (03) மாலை 5:00 மணிக்கு ஹராரே விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.


சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





கைத்தொழில்களுக்கு காணி வழங்கும் நடைமுறையில் மாற்றம்: 50,000 ஏக்கர் காணிகள் ஒதுக்கத் திட்டம்



192 ஆண்டுகள் பழமையான பி.சி.சி லிமிடட் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு முதல் தடவையாக தரச் சான்றிதழ்
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள ஐந்து நிறுவனங்களின் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.




கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது.


இக்கூட்டத்தில் கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பிரதியமைச்சர் சதுர அபேசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இதற்கு அமைய, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, பி.சி.சி இலங்கை லிமிடட் நிறுவனத்தின் 2021/2022 மற்றும் 2022/2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, தேசிய உப்பு நிறுவனத்தின் 2021/2022 மற்றும் 2022/2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை போன்றவை இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டன.


இக்குழுக் கூட்டத்தில் நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட முறைகளின் படி முதலீட்டாளர்களுக்குக் காணிகளை வழங்குவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
 

இதற்கு அமைய, புதிய தொழில்களுக்கு ஒரு முதலீட்டாளருக்குக் காணிகளை வழங்க 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். 


சர்வதேச கருத்துக்களின்படி, ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3% பொதுவாக தொழில்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01% என்ற விகிதத்திலேயே காணப்படுவதாக செயலாளர் கூறினார்.


இதற்கு முன்னர் காணப்பட்ட தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைய கைத்தொழில்களுக்கு ஏற்ற காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமல், அரசியல் அல்லது வேறு காரணங்களால் பல்வேறு சிக்கல் நிறைந்த சூழ்நிலைகள் எழுந்துள்ளது என்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 


எனவே, நாடு முழுவதிலும் உள்ள கைத்தொழில்களுக்கு ஏற்ற வகையில் 50,000 ஏக்கர் காணிகளை ஒதுக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 


இதற்கு அமைய, இது தொடர்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.


தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபணரங்கள் அதிகாரசபையின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் அதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 


எதிர்காலத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் மாணிக்கக்கல் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவனம் ஆகியவற்றை ஒன்நிணைக்கத் தீர்மானித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தற்போதைய செயல்திறன் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 


நாட்டில் ஏற்றுமதியை அபிவிருத்தி செய்து அதனை மேம்படுத்துவதற்காக உள்ள ஒரேயொரு நிறுவனம் இது என்றும், ஆடைகள், தேயிலை, ரப்பர், வாசனைத் திரவியங்கள், தகவல் தொழில்நுட்பம், இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதிகள் குறித்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


நாட்டின் ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கைக் கொண்ட அமெரிக்காவின் வரிக் கொள்கையை முறையாக நிர்வகிப்பதன் மூலம் நிலைமையை சமாளிக்க முடிந்திருப்பது ஒரு பெரிய சாதனை என்றும், 2023 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 15 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2028 ஆம் ஆண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் இலக்குடன் செயற்பட்டு வருவதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தேசிய உப்பு நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் அதிக செயல்திறனுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

காலநிலை மாற்றத்தால், கடந்த காலங்களில் இயற்கை உப்பு உற்பத்தியில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 


அதன்படி, ஆனையிறவு பகுதியில் இயற்கை செயல்முறைக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கையாக உப்பு உற்பத்தி செய்யும் உப்பு உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. 


இந்த ஆண்டுக்கான தேசிய உப்பு நிறுவனத்தினால் இலக்கு வைக்கப்பட்ட வருமானம் ரூபா 1 பில்லியன் என்றும், இது கடந்த ஆண்டை விட 50% அதிகரிப்பாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அத்துடன், பி.சி.சி லங்கா லிமிடட் நிறுவனம் உயர் மட்டத்திலான தேங்காய் எண்ணெய்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனம் என்பதுடன், 192 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த நிறுவனத்திற்கு தரச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படவில்லையென அதன் தற்போதைய தலைவர் குழுவில் குறிப்பிட்டார். இந்த சூழ்நிலையால் பல ஏற்றுமதி வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, SLS மற்றும் ISO உள்ளிட்ட தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அவசர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இக்குழுக் கூட்டத்தில் அதன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, கந்தசாமி பிரபு, விஜேசிரி பஸ்நாயக்க, சுரங்க ரத்நாயக்க, திலிண சமரகோன் ஆகியோரும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.





பாராளுமன்ற உணவுகளின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற்குக் குழு




பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற சபைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


கௌரவ சபாநாயகரின் வேண்டுகோளுக்கு அமைய, பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்ற வளாகத்தில் உணவு தயாரிக்கும் சமையலறை உட்பட பல இடங்களை ஆய்வு செய்தனர்.


அதற்கமைய, இந்த ஆய்வின் அவதானிப்புகள் அடங்கிய விரிவான அறிக்கை பொது சுகாதார பரிசோதகர்களால் சபைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.


இங்கு கருத்துத் தெரிவித்த பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரி வை.பி. இந்திக்க தெரிவிக்கையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் சுமார் 150 அரச நிறுவனங்களின் உணவுப் பாதுகாப்பை ஆய்வு செய்திருந்தாலும், பாராளுமன்றத்தின் உணவுப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.


இதற்காகத் தலையிட்ட சபாநாயகருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதற்கமைய, பாராளுமன்றத்தின் உணவுப் பொருட்களைப் பெறுவது முதல் உணவு உற்பத்தி, களஞ்சியம் மற்றும் பரிமாறுவது வரையிலான ஆய்வின் அறிக்கை கௌரவ சபாநாயகருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனைய பணியாளர்களுக்குப் பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை கௌரவ சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார். அதற்கமைய, பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் பிரிவில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்படுவதாக கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டார்.


அதற்கமைய, பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தில் சமையலறை தொடர்பான நிபுணத்துவம் பெற்ற பொறியியலாளர் அல்லது கட்டடக் கலைஞர், பாராளுமன்றத்தின் உணவு வழங்கல் மற்றும் வீட்டுப் பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பாராளுமன்றத்தின் இணைப்புப் பொறியியலாளர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்க வேண்டும் என இங்கு முன்மொழியப்பட்டது.


அதற்கு மேலதிகமாக, மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் வழங்கப்படும் சேவைகள், பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்தக் குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.


அது தொடர்பாகக் காணப்படும் குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ சபாநாயகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.





தலைமை ஆசிரியைக்கு மசாஜ் செய்த மாணவர்கள்......!




No comments

Theme images by fpm. Powered by Blogger.