கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு






கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு




கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த தினத்திற்கு முன்னர் தரம் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2026 ஜனவரி 20 ஆம் திகதியன்று தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்குரிய வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில் கல்வி அமைச்சு நிகழ்ச்சி நிரலொன்றினையும் வெளியிட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சு நிகழ்ச்சி நிரல்

01. தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றல்.

02. பெற்றோர் மற்றும் விருந்தினர்களை வரவேற்றல், தேசிய மற்றும் பாடசாலை கொடியேற்றம், தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைத்தல்.

03. ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு, தரம் ஒன்றின் புதிய கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் தொடர்பில் தரம் ஒன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களது பெற்றோர்களை அறியப்படுத்துதல்.

04. புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியினை ஆரம்ப பிரிவு மாணவர்களது பங்கேற்புடன் கலை நிகழ்ச்சியாக நடத்துதல்.

05. புதிய மாணவர்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எந்தவொரு அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

06. இந்த நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்துவதற்காகப் பாடசாலையின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் உட்பட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பினைப் பெற்றுக் கொள்வது பொருத்தமாகும்.

07. அவ்வாறே தரம் ஒன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை இனங்காணல் நிகழ்ச்சித்திட்டத்தை (ஆரம்ப பாடசாலைக்கு மகிழ்ச்சிகரமானதோர் ஆரம்பம்) 2026 ஜனவரி மாதம் 02ம் திகதி முதல் 2026 ஜனவரி 16ம் திகதி வரையில் (அரச விடுமுறை தினங்கள் தவிர்த்து) தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய நடைமுறைப்படுத்த வேண்டும்.

08.பிள்ளைகளை இனங்காணும் நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னர் பாடசாலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காகவும் மேற்படி இலக்கம் 05 ற்குரிய செயற்பாடுகளை நெகிழ்வுத் தன்மையுடன் மேற்கொள்ளுமாறு தரம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு, உரிய தரப்பிடம் இருந்து ஒத்துழைப்பை கல்வியமைச்சு எதிர்பார்க்கிறது.






பணம் பறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது


சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து பயணத் தொகையை விட அதிகமாக பணம் பறித்த இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்ட இருவரும் இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து ரூ. 10,000 மற்றும் ரூ. 30,000 என்று அறவிடப்பட வேண்டிய பணத்திற்கு மேலதிகமாக பணம் பறிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சந்தேகத்திற்குரிய சாரதிகள் மேலதிக விசாரணைக்காக கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.






தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு 6,00,000/- அபராதம்


கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6,00,000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. 


நுகர்வோர் விவகார அதிகார சபையின் நாரஹேன்பிட்ட மாவட்ட அலுவலகத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை 70/- ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை 90/- ரூபாவிற்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த வழக்கு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் நீதிமன்றத்தின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டது. 


தண்டனை வழங்குவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள், இந்த குற்றத்திற்காக ஐந்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர். 


முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு 6,00,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.





இன்று அமைச்சரவையில் மாற்றம்!


இன்று (10) அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 


2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 


அதன்படி, புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.





நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு


நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 


உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 


மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். 


"கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்குக் காரணங்கள் என்பதை இந்த மனநல சோதனை கண்டறிந்துள்ளது." 


"இலங்கையின் மக்கள் தொகையில் 19% பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது." என்றார்.


இன்றைய (10) உலக மனநல தினத்தை முன்னிட்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது பேராசிரியர் மியுரு சந்திரதாச இவ்வாறு கூறினார்.




கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



No comments

Theme images by fpm. Powered by Blogger.