பாடசாலை மாணவர்களுக்கான புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளுக்கான சலுகை (அரச/தனியார் மருத்துவமனை) ரூ.300,000 ஆகவும், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை ரூ.20,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது,
அதே நேரத்தில் கடுமையான நோய்களுக்கான காப்புறுதி இப்போது ரூ.1.5 மில்லியனில் இருந்து ஆரம்பமாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காப்புறுதியில் இப்போது நிரந்தர ஊனத்திற்கு ரூ.200,000, நிரந்தரப் பகுதி ஊனத்திற்கு ரூ.150,000 மற்றும் தற்காலிக ஊனத்திற்கு ரூ.100,000 வரை அடங்கும்.
ஆண்டுதோறும் ரூ.240,000 க்கும் குறைவாக (ரூ.180,000 இலிருந்து) வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆயுள் காப்புறுதி சலுகைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்கள் இறந்த பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.75,000 பெறுவார்கள், அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.225,000 கிடைக்கும்.
கால்-கை வலிப்பு (Epilepsy), சிறுநீரகச் சிதைவு நோய்க்குறி (Nephrotic syndrome), முடக்கு வாதம் (Rheumatoid arthritis), பெருங்குடல் அழற்சி (Systemic lupus erythematosis), குடல் அழற்சி (Ulcreative colitis), நாள்பட்ட நோய் (Crohn discase) மற்றும் இதய வாத நோய் (Rheumatic valvular heart disease) போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இப்போது வெளிநோயாளர் சலுகைகளுக்குத் தகுதியுடையவர்கள்.
மேலதிகக் காப்புறுதியில் முதுகுத்தண்டு வளைவு ரூ.75,000 மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் செவிப்புலன் கருவிகளுக்கு ரூ.75,000 ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மஞ்சள் எச்சரிக்கை ---- வளிமண்டலவியல் திணைக்களத்தின்
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் முடியுமானவரை வீடுகளுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தொலைபேசிகள், மின்சார சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணயக்கைதிகளின் விடுவிப்பு
ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் "வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் பாராட்டினார்.
காசாவில், இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500,000 பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய எதிர்வரும் திங்கட்கிழமை ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாக எகிப்து உறுதிப்படுத்தியது.
ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ட்ரம்ப் உட்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எகிப்திய ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரும் திங்கட்கிழமை எகிப்துக்கு பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை ட்ரம்ப் எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு நாளை இஸ்ரேலுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்புக்கூறல் திட்டத்திற்காக நிதி கோரியுள்ள மனித உரிமைகள் பேரவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, 2025 ஒக்டோபர் முதல் 2027 செப்டம்பர் வரையிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு நிதியளிக்க, 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அதாவது இலங்கை ரூபாயில் 1.1 பில்லியன்களை கோரியுள்ளது.
திட்டச் செலவுகள் பயணச் செலவுகள், புதிய ஆட்சேர்ப்புகள், பயணங்களின் போது உள்ளூர் விளக்கம் தொடர்பான ஒப்பந்தச் சேவைகள், செயற்கைக்கோள் படம் பகுப்பாய்வு போன்றவற்றை ஈடுகட்டுவதாக இந்த நிதி கோரிக்கை கோரப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு, ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையாகும்.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட, இந்தப் பொறுப்புக்கூறல் திட்டம் 2021 இல் ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
அத்துடன் 2025, ஒக்டோபர் 6 அன்று இலங்கை மீதான புதிய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தின் ஆணை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தப் பொறிமுறையை இலங்கையின் அரசாங்கங்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றன.
மாற்றமடைந்த அமைச்சு பதவிகள்
அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்தின் படி புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க இன்று (11) அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.
10 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்படி மூன்று புதிய அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.
அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பணியாற்றிய பிமல் ரத்நாயக்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, முன்னர் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனுர கருணாதிலக்கவிடம் இருந்து நீக்கப்பட்ட வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சானது பிரதி அமைச்சராகப் பணியாற்றி வந்த கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர முன்னர் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்காத கலாநிதி கௌசல்ய அரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜெயவீர மற்றும் எம்.எம்.ஐ. அர்காம் ஆகியோரும் பிரதி அமைச்சர்களாக பதவியேற்றிருந்த நிலையில் அவர்களது பொறுப்புகள் தொடர்பிலும் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments