பாடசாலை கல்வித் திட்டத்தில் --- புதிய மாற்றம்........ - !

பாடசாலை கல்வித் திட்டத்தில்    ---   புதிய மாற்றம்........ - !





Phone பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி..... - !





பாடசாலை கல்வித் திட்டத்தில்    ---   புதிய மாற்றம்...

     


பாடசாலைகளில் தரம் 6 ஆம் முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


கல்வி மறுசீரமைப்பின் போது சாதாரண தரத்திலும் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் தெரிவித்துள்ளார்.


அதன்படி, குடியுரிமை பாடத்தில், 6ஆம் தரத்துக்கான சட்டக்கல்வி, மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஒழுக்கமான சமூகத்திற்காக சட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.




மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமானால் போராட்டங்கள் வெடிக்கும்...

     


நாட்டில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமானால் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் டி.எஸ். சேனநாயக்க அரசியல் கற்கைகள் பீடத்தின் திறப்பு விழா, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பங்கேற்புடன் நேற்று (11) இடம்பெற்றது.


இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,


அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நற்செய்தியொன்றை வழங்க தயாராகி வருகின்றது.


மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதே அந்த நற்செய்தியாகும்.


இந்த மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படக் கூடாது என்றே நாம் பிரார்த்திக்கிறோம்.


அரசாங்கம் ஏதோ ஒருவகையில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால், ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம், மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்.


இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்போம். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுப் பொருளாதாரத்தில் தாய்மார்களும் பெண்களும் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக காணப்படுகின்றனர்.


துன்பம், பசி, அடக்குமுறை மற்றும் அசௌகரியத்தால் மக்களை நசுக்கி, என்றுமே மக்களை அநாதவரவான நிலையில் வைத்துக் கொள்வதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் இந்த மோசமான கொள்கைகளை தோற்கடிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


220 இலட்சம் மக்களினது உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.




சம்பள உயர்வு நிச்சயம் - உறுதியளித்தார் 



இந்த வருட இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.


மலையக சமூகத்தினருக்கு இன்று வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.




 இலங்கை புற்றுநோயியல் சங்கம் கடுமையான கண்டனம்...

    


கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி குழுவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'புற்றுநோய் மருந்து' குறித்து இலங்கை புற்றுநோயியல் சங்கம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.


இந்த தயாரிப்பின் நம்பகத்தன்மைக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும், அது பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சங்கம் எச்சரிக்கிறது.


கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலகவுக்கு குறித்த சங்கத்தால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,


"இலங்கை புற்றுநோயியல் சங்கம் நோயாளிகளுக்கு ஏற்படும் தீங்கைக் குறைப்பதற்கான அனைத்து வழிகளையும் தீவிரமாகப் பின்பற்றி வருகிறது, மேலும் உங்கள் நிறுவனத்தின் தலைவராக, இந்த விஷயத்தில் உடனடி மற்றும் முழுமையான விசாரணையை நடத்துமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்," என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


கொழும்பு பல்கலைக்கழகம் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெளிவுபடுத்தவும், சிக்கல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், தயாரிப்பை பிரதான நீரோட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து அகற்றவும் சங்கம் அழைப்பு விடுத்தது.


இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், எதிர்காலத்தில் ஆராய்ச்சியின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் சங்கம் பல்கலைக்கழகத்தைக் கேட்டுக் கொண்டது.


இலங்கை புற்றுநோயியல் சங்கம் இந்தப் பிரச்சினையின் அவசரத்தை வலியுறுத்தி, நிரூபிக்கப்படாத புற்றுநோய் சிகிச்சைகளை ஊக்குவிப்பது நோயாளிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஆழமான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்தது.



எச்சரிக்கை விடுப்பு...

    


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.


வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரின் தூண்டுதலின் பேரில் நிறுவப்பட்ட இந்த பொலிஸ் பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகளை  பெறுவதாக கூறப்படுகின்றது.


இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பணியகம் கூறுகின்றது.


மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் பற்றிய தகவல்கள் உள்ள எவரும் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட பொலிஸ் பிரிவுக்கு 0112882228 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கின்றது.




பாடசாலை கல்வித் திட்டத்தில்    ---   புதிய மாற்றம்........ - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.