மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்...... - !

  மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்...... - !





மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்...... - !





 மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்



கொழும்பு (Colombo) 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தகவல் அறிவிக்கப்ட்டுள்ளது.


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாளை காலை 10.00 மணி முதல் அன்றைய தினம் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை  தெரிவித்துள்ளது.


அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை பெறும் பிரதான நீர் பம்பிக்கு வழக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடான நீர் விநியோகம் இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை,


மற்றும் கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.



 பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்  ---- கொழும்பில்

    


தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது



சீரற்ற வானிலையால்  585 பேர் பாதிப்பு  --இரு உயிரிழப்புகள் பதிவு 


நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகிறது. 


இதனால் கொழும்பில் சில வீதிகளில் வெள்ளநீர் தேங்கி, கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 


அத்துடன் பலத்த மழையினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் சீரற்ற வானிலை காரணமாக இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் 144 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


மேலும் இன்று முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.




 வான் கதவுகள் திறப்பு...

    


நாட்டில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன. 


இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


அத்துடன், தெதுரு ஓயா, இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ மற்றும் கலாவெவ ஆகியவற்றின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.



மலையக ரயில் சேவைகள் நாளை வரை வழமைக்கு திரும்பாது - ரயில்வே திணைக்களம்..

    


தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள்  22 / 10 / 2025 நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாதென்றும் இன்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் இயங்காதென்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக மலையக ரயில் சேவைகள் பல இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது, ​​மலையக ரயில் சேவைகள் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதெனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



 சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு....

     


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை 2,000 ரூபாவில் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


இது தொடர்பில் விளக்கமளித்த வௌிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடிய பின்னர் அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். 


இருப்பினும், அந்த அறிவிப்பில் செலுத்த வேண்டிய தொகை அமெரிக்க டொலரில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அது ரூபாயாக மாற்றப்பட்டு, அடுத்த வாரம் மீண்டும் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். 


இந்த வசதி எதிர்காலத்தில் வெளிநாட்டினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது என்றும், பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பும் இலங்கையர்களும் பொருத்தமான கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம் அதைப் பெற முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


"நமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல, இலங்கைக்கு வெளியே வசிக்கும் சுமார் 3.5 மில்லியன் இலங்கையர்களுக்கும் போக்குவரத்து அமைச்சு ஒரு முடிவை எடுத்தது. 


அவர்களில் பெரும்பாலோர் 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாடுகளில் வசித்து வருகின்றனர். 

அவர்கள் இலங்கைக்கு வரும்போது, ​​அவர்களுக்கும் இந்தத் தேவை எழுகிறது. 


சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல. நமது தூதரகங்களில் இராஜதந்திரப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் அந்தத் தேவை உள்ளது." 


முதலீட்டாளர்கள் கொண்டுவரப்படும்போது, ​​புதிய தொழில்கள் தொடங்கப்படும்போது, ​​அந்த நிறுவனங்களில் சேவைகளை வழங்குபவர்களுக்கும் அந்தத் தேவை உள்ளது. 


இந்நிலையில் குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக பெறப்படும் தொகையே போதுமானதாக இல்லை. 

2000 ரூபாயே தற்போது பெறப்படுகின்றது. 


எனவே போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடி அந்தத் தொகையை அதிகரிக்க ஒரு உடன்பாட்டிற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.



மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்...... - !



No comments

Theme images by fpm. Powered by Blogger.