அமேசனின் கிளவுட் சேவைகள் செயலிழப்பு.... - !

  அமேசனின் கிளவுட் சேவைகள்  செயலிழப்பு.... - !





அமேசனின் கிளவுட் சேவைகள்  செயலிழப்பு.... - !





 



அமேசனின் கிளவுட் சேவைகள்  செயலிழப்பு



அமேசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை கட்டமைப்பு தொழில்நுட்ப சிக்கல்களால் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளது. 


இந்த தகவலை அமேசன் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. 


அமெசன் நிறுவனத்தின் கிளவுட் சேவை செயலிழப்பால் பல நிறுவனங்களின் இணைய சேவை மற்றும் செயலிகளின் பயன்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 


ஸ்னாப் சாட், கென்வா, டூலிங்கோ, ரோப்ளாக்ஸ், அலெக்ஸா உள்ளிட்ட பல செயலிகளின் வேகம் குறைந்துள்ளதுடன் சில செயலிகள் முடங்கியுள்ளன. 


இது அமேசன் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவாகும், 


இதனை சார்ந்து உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான இணையதளங்களும், சேவைகளும் செயல்படுகின்றன. 


உங்கள் ஸ்மார்ட் கைப்பேசியில் உள்ள பல செயலிகள் அமேசன் வெப் சர்வீஸ் (AWS) தரவு மையங்களிலிருந்தே இயங்குகின்றன. 


AWS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், US-East-1 பிராந்தியத்தில் உள்ள அதன் சேவைகளில் திடீரென "கோரிக்கைகள் மீது உயர் விகிதத்தில் பிழைகள்" உணரப்படுவதாக கூறியுள்ளது.



 4 ரயில் சேவைகள் ரத்து!



தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும், ரயில் ஒன்று தடம்புரண்டமையினாலும் இன்று (20) இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 


இதனிடையே, பலான மற்றும் இஹல கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாதையில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதன் காரணமாக, இன்றைய தினம் 18 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாளைய தினமும் 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. 


> அவ்வாறு ரத்து செய்யப்பட்ட சேவைகள் பின்வருமாறு,


அதிகாலை 04.30 கண்டி முதல் கொழும்பு கோட்டை


அதிகாலை 04.50 மாத்தளை முதல் கொழும்பு கோட்டை


அதிகாலை 05.00 கண்டி முதல் மாத்தறை 


காலை 06.15 கண்டி முதல் கொழும்பு கோட்டை.




 அரச இணைய சேவைகள் வழமைக்கு



'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. 


குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்த முடியும் என அதன் பேச்சாளர் தெரிவித்தார். 


'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகள் கடந்த ஒருவார காலமாக செயலிழந்தன. 


சுமார் 34 அரச நிறுவனங்களின் சேவைகள் இவ்வாறு ஒரு வாரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாக ICTA குறிப்பிட்டுள்ளது. 


இந்தச் சேவைகளில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர) இணையவழியிலான வருமான வரி அமைப்பு (eRL 2.0), பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் அமைப்பு, வணிகத் திணைக்களத்தின் இணைவழியூடான நாட்டின் உற்பத்தி சான்றிதழ் வழங்கும் முறை, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய அமைப்பு, வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம் மற்றும் இலங்கையின் கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிலைகள் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



PCID விசாரணைப் பிரிவு  திறப்பு



குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு நேற்று (20) திறக்கப்படவுள்ளது. 


பழைய பொலிஸ் தலைமையகக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவு,நேற்று காலை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் திறக்கப்படவுள்ளது. 


2025 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விதிகளுக்கு அமைய, விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த புதிய பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 


இந்த பிரிவின் மூலம், சட்டவிரோதமாகப் பணம், சொத்து மற்றும் மூலதனங்களை ஈட்டியது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும். 


பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவுக்கு, பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 


சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட மூன்று வருட காலத்திற்கு இந்தப் பிரிவின் பணிப்பாளராக நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம், இப் பதவி நியமனம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அசங்க கரவிட்ட , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதி மோசடிக் குற்றப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் செயற்படுகிறார். 


குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் மூலம், 34 அரச நிறுவனங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி, எந்தவவொரு முறையிலும் ஈட்டிய மூலதனங்கள் குறித்து விசாரணை நடத்த சட்டப்பூர்வமாக இந்தப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளதுடன், குற்றம் அல்லாத சொத்துகள் ஈட்டல் குறித்து சிவில் வழக்குகள் தாக்கல் செய்யும் சாத்தியக்கூறும் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 


பொது மக்களும் இந்தப் பிரிவில் நேரடியாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதுடன், சட்டப்பூர்வமற்ற முறையில் ஈட்டிய சொத்துக்களை 30 நாட்களுக்குள் தடை செய்ய அல்லது கையகப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.



வாகன முன்பதிவுகள் ஏற்றம் 



இலங்கையின் வாகன முன்பதிவுகள் கடந்த மாதத்தில் உயர்வை, பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


கொழும்பைத் தளமாகக்கொண்ட தனியார் நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதம், வாகன முன்பதிவுகள் 27 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





அமேசனின் கிளவுட் சேவைகள்  செயலிழப்பு.... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.