கல்வி அமைச்சின் ---- அவசர எச்சரிக்கை ...... - !

 கல்வி அமைச்சின்   ----    அவசர எச்சரிக்கை ...... - !





கல்வி அமைச்சின்   ----    அவசர எச்சரிக்கை ...... - !





கல்வி அமைச்சின்   ----    அவசர எச்சரிக்கை



போலி வட்ஸ்அப் குழு ஒன்று தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த எச்சரிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் விடுத்துள்ளது.


புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி பேரவை என்ற பெயரில் செயல்படும் ஒரு மோசடி வட்ஸ்அப் குழு குறித்து இந்ந எச்சரிக்கை விடுக்கப்டப்டுள்ளது.


இந்தநிலையில், கல்வி மண்டலங்கள் முழுவதும் ஆசிரியர்களை ஒன்றிணைப்பதாக இந்தக் குழு அறிவுருத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனடிப்படையில், எந்த வகையிலும் இந்த குழு அமைச்சுடன் இணைக்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.


அத்தோடு, இந்த தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தகவல் தொடர்புகள் அல்லது செயல்பாடுகளுக்கும் அமைச்சு பொறுப்பேற்காது என அறிவுருத்தப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேலும், அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்த முயற்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் குழுக்களால், தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்குமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பச்சிளம் குழந்தையை விற்று  ---   போதைப்பொருள் வாங்கிய  தம்பதி



இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில், ஆறு மாத ஆண் குழந்தையை விற்று அந்தப் பணத்தில் போதைப்பொருள் வாங்கிய தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


போதைப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த தம்பதி, தமது குழந்தையை புத்லாடா நகரில் உள்ள வர்த்தகர் ஒருவரின் குடும்பத்திற்கு 1.80 லட்சம் இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்தநிலையில், குழந்தையின் தாய்வழி உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.


இதனையடுத்து, உடனடியாக செயற்பட்ட பொலிஸார் தம்பதியினரைக் கைது செய்ததுடன், குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.


குழந்தையை விற்ற பணத்தை குறித்த தம்பதியினர் போதைப்பொருள் மற்றும் வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநில அளவில் முன்னாள் மல்யுத்த வீராங்கனையான குழந்தையின் தாயார் திருமணத்துக்குப் பின்னர் போதைப் பொருளுக்கு அடிமையானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



 இலங்கையருக்கு மருத்துவ உதவி -  உயர் நீதிமன்றம் உத்தரவு



சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என புழல் சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 


இலங்கையைச் சோ்ந்த தனுக ரோஷன் என்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அத்துடன் இலங்கையைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி, உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடாரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதற்குப் பழிவாங்கும் விதமாக, தனிமைச் சிறைக்கு மாற்றி அதிகாரிகள் எங்களைக் கொடுமைப்படுத்துகின்றனா் என்று கூறியிருந்தாா். 


இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ்.நதியா, சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளின் இன்ஹேலா்களைக்கூட சிறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளனா். அவா்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவது இல்லை என்று வாதிட்டாா். 


காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் சட்டத்தரணி ஏ.கோகுலகிருஷ்ணன், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றாா். 


இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க புழல் சிறைத் துறை நிா்வாகத்துக்கு உத்தரவிட்டனா். 


மேலும், மனுவுக்கு வரும் நவம்பர் மாதம் 3-ஆம் திகதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.



  ‘மொந்தா புயல்’ இலங்கையை தாக்குமா?




மத்திய வங்காள விரிகுடாவில் உருவான  'மொந்தா' என்ற புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையினால் நகர்ந்து வருகிறது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தகவல் தெரிவித்துள்ளார்.


குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படுவதோடு, இது எதிர்வரும் 27ம் திகதி புயலாக மாற்றம் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், 


இது 2025-2026 வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் உருவாகவுள்ள முதலாவது புயலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கு ' மொந்தா' என்ற பெயரினை  தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது. 


அதன்படி, மொந்தா புயல் எதிர்வரும் அக்டோபர் 27ஆம் திகதிக்கு முன்பாக புயலாக மாறி, வடமேற்கு மேற்கு திசையில் நகர்ந்து, 


அக்டோபர் 28-ம் தேதி இரவு அல்லது 29-ம் தேதி காலை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா பகுதியில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, இலங்கைக்கு இந்த புயலால் சேதமோ பாதிப்போ ஏற்படமாட்டாது. 


இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில்  எதிர்வரும் 28.10.2025 வரை மிதமான மழை பெய்யக்கூடும். 


கிழக்கு கரையோர பகுதிகளில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அருகிலான இடங்களில் கனமான மழை மற்றும்  இடியுடன் கூடிய மின்னல் ஏற்படக் கூடும்.


மேலும், எதிர்வரும் 27.10.2025 திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.


இதன் விளைவாக, வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதன் முழுவதையும் இந்த புயல் உள்ளீரத்துக் கொள்ளும் என்பதனால் எதிர்வரும் 28.10.2025 -  06.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காது. 


ஆனாலும் பருவக் காற்று காரணமாக அவ்வப்போது சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.




AI பயன்பாட்டால்   ---   தொழிலாளர்களுக்கு ஆபத்து



இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 


தெற்காசியாவின் AI பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கையின்படி, தெற்காசியாவில் நேபாளம் மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, அதிக AI பயன்படுத்துவோர் கொண்ட தொழிலாளர் சக்தியைக் கொண்ட நாடுகளாக பூட்டானும் இலங்கையும் மாறியுள்ளன. 


எனினும், தெற்காசிய நாடுகளில் AI மனித நிரப்பியாக அதாவது மனித திறன்களுடன் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதில் இலங்கை குறைந்த இடத்தில் உள்ளது என்றும், திறன்களை மேம்படுத்தாமல் AI பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டால் வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 


இலங்கையில் AI தொடர்பான வேலைவாய்ப்புச் சந்தை, தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை விட வேகமாக விரிவடைந்து வருகிறது, மேலும் 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்முறை மற்றும் நிர்வாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 7.3 சதவீதத்திற்கு AI தொடர்பான திறன்கள் தேவைப்பட்டுள்ளன. 


இது பிராந்தியத்திலேயே அதிகபட்ச பங்கு என்றும், இந்தியாவில் இது 5.8% ஐத் தாண்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


இந்த வேலைவாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளில் பரவி, தொழில்முறை மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) சேவைத் துறைகளில் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இலங்கையின் நிதித் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு AI பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இலங்கையில் வலுவான AI வேலைவாய்ப்புச் சந்தை இருக்க வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது. 


இதற்கிடையில், AI பயன்பாடு காரணமாக தெற்காசியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் 7% அதிக ஆபத்தில் உள்ளதாகவும், அழைப்பு மைய அதிகாரிகள், கணக்காளர்கள், ஒப்பு நோக்குபவர்கள், கணினி மென்பொருள் போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் ஏற்கனவே சரிவு காணப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 


மேலும், ChatGPT பயன்பாடு குறித்து உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தெற்காசியாவில் இரண்டாவது அதிக தனிநபர் ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இலங்கை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. 


இதில் மாலைத்தீவு முதலிடத்தில் உள்ளதுடன், இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 


அத்துடன், இந்த AI பயன்பாட்டினால் அதிகப் பலன்களைப் பெறக்கூடிய கொள்கை ரீதியான வாய்ப்புகள் குறித்தும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது AI கண்டுபிடிப்பாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


அதன்படி, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல், STEM கல்வியை விரிவுபடுத்துதல், நம்பகமான மின்சாரம் மற்றும் இணைய உட்கட்டமைப்பில் முதலீடு செய்தல், அத்துடன் தொழிலாளர் நகர்வு மற்றும் வேலைவாய்ப்பு வசதி அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




 கல்வி அமைச்சின்   ----    அவசர எச்சரிக்கை ...... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.