பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடை .. - !
பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடை .. - !
பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடை .. - !
12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
12 வயதுக்குட்பட்ட எந்தவொரு சிறுவரும் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகமான திரை நேரம் (Screen time) மற்றும் தீங்கான இணைய உள்ளடக்கங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் சமூக தொடர்பாடலையும் ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டார்.
மாமனாரால் சுடப்பட்டு மருமகன் உயிரிழப்பு..!
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில், தனிப்பட்ட தகராறு காரணமாக 57 வயதுடைய நபர் ஒருவர் தனது மாமனாரால் ஏர் ரைபிள் (Air Rifle) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இஹலகல பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த நபர், பலத்த காயங்களுடன் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் ஆரம்பித்துள்ளன.
சிறைச்சாலையிலிருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து நேற்று (26) தப்பிச் சென்றதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையின் பேக்கரி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த கொழும்பு- 5 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் மற்றும் கொழும்பு 15, மட்டக்குளியவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காதலனும் காதலியும் கைது
தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், வெளிநாட்டு மதுபானம் மற்றும் குடியிருப்பாளருக்குச் சொந்தமான 1.3 மில்லியன் ரூபா மதிப்புள்ள மின்சார உபகரணங்கள் மற்றும் 4.5 மில்லியன் ரூபா ரொக்கம் உள்ளிட்ட சொத்துக்களைத் திருடியதற்காக கடந்த 22 ஆம் தேதி நீர்கொழும்பில் வைத்து தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பில் உள்ள ஒரு பச்சை குத்தும் நிலையத்தில் தங்கியிருந்தபோது, 24 மற்றும் 22 வயதுடைய காதலனும் காதலியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தையை கொலை செய்துவிட்டு உயிர்மாய்ப்பு --- தாயும்
படபொல, கஹடபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
படபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் மற்றும் சிறுவனின் உடல்கள் அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுள் சிறுவனுக்கு மூன்றரை வயது மற்றும் பெண்ணுக்கு 24 வயது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடை .. - !

No comments