உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு - சி.ஐ.டியிடம் முறைப்பாடு... . - !
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு - சி.ஐ.டியிடம் முறைப்பாடு... . - !
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு - சி.ஐ.டியிடம் முறைப்பாடு...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்..
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கிக் கணக்குகள் இல்லாததால், முந்தைய ஆண்டில் (2024) 43,703 அஸ்வெசும பயனாளிகள் தங்கள் உரிமை பலன்களைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, தகுதியான பயனாளிகள் தங்கள் பலன்களைப் பெற முடியாமல் போகலாம் அல்லது இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2025 இறுதிக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையை நிறுவி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளுக்கு கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி சபை தொடர்பாக 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
முழுமையாக மூடப்பட்ட கொழும்பு - கண்டி வீதி..!
கொழும்பு - கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
22/11/2025 காலை கனேதென்ன பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நான்கு பேர் இதுவரையில் மீட்கப்பட்டு, மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் சிலர், தொடர்ந்தும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தற்போது துரிதப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த வர்த்தக நிலையமானது, சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்துவதற்காகப் பலர் விரும்பிச் செல்லும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடமாகும் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அபாயம்! - அவுஸ்திரேலிய கடும் எச்சரிக்கை
இலங்கைக்கு செல்லும் மற்றும் இலங்கையில் தங்கியுள்ள அவுஸ்திரேலியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவுஸ்திரேலியர்கள் இலங்கையில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
அத்துடன், ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் அவுஸ்திரேலியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் நிகழலாம் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வங்கி அட்டை முலம் பேருந்து கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும்...
வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை (24) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கான ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் இந்நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பேருந்து கட்டணத்தை செலுத்திய பின்னர், நடத்துனர்கள் மீதிப் பணத்தை வழங்காமை பயணிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.
இதற்குத் தீர்வாகவே வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் பேருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைப்பதையும் முதன்மையாக்ககொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மண் வெட்டியால் தாக்குதல் ---- பெண் ஒருவர் உயிரிழப்பு ….!
பொத்துவில், ஹுலன்னுகே, 12வது தூண் பகுதியில், ஒரு பெண் மீது நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கியதாகவும், படுகாயமடைந்த நிலையில், லாஹுகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் பொத்துவில் காவல் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் ஹுலன்னுகே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கோனார முதியன்செலாகே விமலவதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலின் போது, மண்வெட்டியால் தலையில் தாக்கப்பட்டு அந்தப் பெண் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை இறந்த பெண்ணின் கணவரின் சகோதரர் மேற்கொண்டார்.
பின்னர் அவர் ஹுலன்னுகே காவல் நிலையத்திற்குச் சென்று காவல்துறையிடம் சரணடைந்தார்.
நுகேகொடை பேரணியில் மேடையில் கைத்துப்பாக்கியுடன் பாதுகாப்பு கொடுத்தது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பமைச்சு தீர்மானம்!
அரசாங்கத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நுகேகொடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார கைத்துப்பாக்கியுடன் மேடையில் நின்றமை குறித்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
மேற்படி கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. உரையாற்றும்போது அதனருகில் கழுத்துப் பை ஒன்றைத் தாங்கியபடி, கைத்துப்பாக்கி ஒன்றைச் சுடுவதற்குத் தயார்நிலையில் வைத்திருக்கும் பாணியில் முன்னாள் எம்.பி. உதித் லொக்குபண்டார நின்றுகொண்டிருந்தமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் உதித் லொக்குபண்டார அப்படி இருந்தது ஏன்?அவர் நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கினாரா? அல்லது தற்பாதுகாப்புக்காக அப்படிச் செயற்பட்டாரா என்ற கோணங்களில் நோக்கப்படுவதால இது பற்றிய விசாரணைகளை நடத்தத் தீர்மானித்திருக்கும் பாதுகாப்பமைச்சு, இது தொடர்பில் அறிக்கையொன்றை நுகேகொட பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உதித் லொக்குபண்டார மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வாக்குமூலம் பெறவும் பொலிஸ் தயாராகி வருகிறது.
உதித் வைத்திருந்த கைத்துப்பாக்கி சிலவேளை பாதுகாப்பமைச்சின் அனுமதியுடன் பெறப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அதனை பொதுவெளியில் அப்படி வைத்திருக்கலாமா? இது அச்சமூட்டும் செயற்பாடாக அமையாதா? என்ற கோணங்களிலும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.
எவ்வாறாயினும், இந்தக் கைத்துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு விவகாரத்தை நாமல் ராஜபக்ஷ அறிந்திருக்கவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பமைச்சு விரைவில் அறிவிப்பொன்றை வெளியிடலாமென மேலும் அறியமுடிந்தது.
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு - சி.ஐ.டியிடம் முறைப்பாடு... . - !

No comments