பிரபல பாடசாலை மாணவியை . - !
பிரபல பாடசாலை மாணவியை . - !
பிரபல பாடசாலை மாணவியை
மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் அதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று (17) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதுரெலிய மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
14 வயதுடைய மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை கைதுசெய்யப்பட்ட ஆசிரியருக்கு எதிராக இதற்கு முன்னரும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை இன்று (18) மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆசிரியர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்சரிக்கும் பிரதி அமைச்சர் சுனில் ---- திருகோணமலை சம்பவத்தை யாரும் இனவாத, மதவாதமாக மாற்றவேண்டாம்! -
திருகோணமலை சம்பவத்தை யாரும் இனவாத, மதவாதமாக மாற்றவேண்டாம். தற்போது அது நீதிமன்ற நடவடிக்கையாகும். அதனால் நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை என பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நிறைவேற்றுத்துறை, நீதிமன்றம், பாராளுமன்றம் ஆகிய மூன்று தூண்களும் சமநிலையாக செயற்படவேண்டும் என நாங்கள் படித்திருக்கிறோம். ஆனால் அது செயற்பாட்டில் வரும் காலம் வரும்வரை நாங்கள் பார்த்திருந்தாேம்.
ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியின் கீழே இந்த மூன்று துறைகளும் சமநிலையாக செயற்பட இடமளிக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் ஜேஆர், உயர்நீதிமன்ற நீதியர்களுக்கு கள் எறிந்தார். அவ்வாறு எந்த சம்பவமாவது இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கிறதா?
அதேபோன்று நாட்டில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கிறார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பசில்ராஜபக்ஷ்வின் வழக்கை கையாண்டுவந்த சட்டத்தரணியை உயர்நீதிமன்றத்துக்கு நியமித்தார்.
அதன்பின்னர் திவிநெகும வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு சார்ப்பாக தீர்ப்பெழுதவில்லை என்பதறக்காக பிரதமர நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவை விரட்டினார்கள். அதன் பின்னர் செலான் வங்கியின் தலைவரை உயர்நீதிமன்ற ஆசனத்தில் அமர்த்தினார்கள்.இவர்கள்தான் இன்று நீதிமன்ற சுயாதினம் தொடர்பில் கதைக்கின்றனர்.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை எவ்வாறு வழிநடத்தினார்கள், நீதிமன்ற சுயாதீனத்தன்மையை எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பது வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்போதுதான நீதிமன்ற நடவடிக்கைகள் சுயாதீனமாக செயற்படுகின்றன. நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்கிறது. அதில் யாருக்கும் அழுத்தங்கள் கொடுக்க முடியாது.
திருகோணமலை சம்பவத்தை ஒருசிலர் இனவாதமாக்க முயற்சிக்கின்றனர். அதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேநேரம் நீதிமன்றத்துக்கும் அறிவித்திருக்கிறது. தற்போது அது நீதிமன்ற நடவடிக்கையாகும்.
அதனால் அந்த நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை, எனவே இந்த சம்பவத்தை இனவாத, மதவாதமாக மாற்ற வேண்டாம். என தெரிவித்தார்.
350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை!
அத்தியாவசிய சிகிச்சைகளை மக்களுக்கு மேலும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் நோக்குடன், 350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.
ஒழுங்குபடுத்தப்பட்ட விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்வதன் மூலம் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும்,
இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்படப் பல முக்கியமான மருந்துகளின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பேக்லிடேக்செல் (Paclitaxel) மருந்தின் ஒரு குப்பியின் விலை 42,000 ரூபாவிலிருந்து 26,332 ரூபாய் 29 சதமாகவும் குடற் புழுத் தொற்றுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Mebendazole 500 mg (மெபெண்டசோல்) மாத்திரையின் விலை 83 ரூபாவிலிருந்து 50 ரூபாய் 25 சதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணயப் பொறிமுறை தொடரும் என்றும், புதிதாகப் பதிவுசெய்யப்படும் மருந்துகளுக்கும், உரிமம் புதுப்பிக்கப்படும் மருந்துகளுக்கும் புதிய கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், நுகர்வோர், மருந்துகள் மற்றும் அவற்றின் விலையை எளிதாக அறிந்துகொள்ள ஒரு கைபேசி செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், மருந்தகங்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி
பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தக் கொடுப்பனவு பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று அமைச்சரவை தீர்மானம் எடுத்தது. அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் ரூபா 7,000/- கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2025 ஆம் ஆண்டிற்காக 1,100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதமே அந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அத்துடன், அதிகாரிகளின் விளையாட்டுப் பாதணிகள் மற்றும் உடைகளுக்காகவும் கொடுப்பன ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. அடுத்த வாரமே அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்."
இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் காய்ச்சல் -
இவ்வருடத்தில் வழமையை விட அதிக அளவிலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் எதிர்வரும் சில வாரங்களில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக முகக் கவசம் அணிவதுடன் மற்றவர்களுடனான நேரடி தொடர்பினை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் மாவட்ட பொதுச் சுகாதார நிர்வாக உறுப்பினர் அஜந்தா ஹல்டன், தேசிய விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளுக்காக அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வருடத்தில் வழமையை விட அதிக அளவிலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் எதிர்வரும் சில வாரங்களில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக முகக் கவசம் அணிவதுடன் மற்றவர்களுடனான நேரடி தொடர்பினை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் மாவட்ட பொதுச் சுகாதார நிர்வாக உறுப்பினர் அஜந்தா ஹல்டன், தேசிய விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளுக்காக அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நவம்பர் 30 ஆகும்
AI கருவிகள் சொல்லும் அனைத்தையும் ----- கண்மூடித்தனமாக நம்பக்கூடாது
AI கருவிகள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “AI மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், AI தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை வழங்குவதில் அதிக உறுதியுடன் இருக்கும் பிற தயாரிப்புகளும் உள்ளன.
நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் எழுத விரும்பினால் AI கருவிகள் உதவியாக இருந்தாலும், மக்கள் இந்தக் கருவிகள் எதற்குச் சிறந்ததோ அதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.
எங்களால் முடிந்தளவு துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் செய்யும் பணியில் பெருமை கொள்கிறோம், ஆனால் தற்போதைய அதிநவீன AI தொழில்நுட்பத்தில் சில பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன”
வெளிநாட்டு நன்கொடைகளாக 2 விமானங்கள் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள்
இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக 2 விமானங்கள் மற்றும் 10 உலங்கு வானூர்திகள் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து 2 C130 ரக விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று அவர் கூறினார்.
அத்துடன், அமெரிக்காவிடமிருந்து 10 TH-57 ரக உலங்கு வானூர்திகள் நன்கொடையாகக் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் வைத்துக் கூறினார்.
பிரபல பாடசாலை மாணவியை . - !

No comments