மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த 2026 முதல் இலவச ........!

 மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த 2026 முதல் இலவச ........! 






மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த 2026 முதல் இலவச ........!




மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த 2026 முதல் இலவச 



இலங்கையிலுள்ள தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary Napkins) வழங்கும் தேசியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.


டிசம்பர் 22 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற மாணவிகளின் சுகாதார நலன் குறித்த கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


2024 இல் கிராமப்புற, தோட்டப்பகுதி மற்றும் பின்தங்கிய பாடசாலைகளை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 1.44 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. தகுதியுள்ள ஒவ்வொரு மாணவிக்கும் அணையாடைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 1,440 ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும்.


இவை மாகாண கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும். மாணவிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும்.


கலந்துரையாடலின் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார், மாணவிகள் தங்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.


புவியியல் ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் கருத்திற்கொண்டு வவுச்சர் விநியோக பொறிமுறையைச் சீரமைக்க வேண்டும். பாடசாலைகளில் பயன்படுத்தப்பட்ட அணையாடைகளை சுற்றாடலுக்குப் பாதிப்பின்றி அகற்றும் முறைகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



புதிதாக கட்டப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதிய அலுவலக வளாகம் திறந்து வைக்கப்பட்டது



இலங்கை கடற்படையின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் துறையின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிதாகக் கட்டப்பட்ட கடற்படை ஊதியம் மற்றும் ஓய்வூதிய அலுவலக வளாகம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில், 2025 டிசம்பர் 17 ஆம் திகதி வெலிசறை கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.


இந்தக் கட்டிட வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2021 ஆம் ஆண்டு கடற்படை சிவில் பொறியியல் துறையின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் தொடங்கியது. அதன்படி, நான்கு தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அலுவலக வளாகத்தில், கடற்படை ஓய்வூதியம், கணக்குகள் மற்றும் தணிக்கை மற்றும் கடற்படை ஊதியத் துறைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன, இதனால் கடற்படையின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செயல்முறை மிகவும் திறமையாக மேற்கொள்ளப்படும்.



2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான ஏற்றுமதி வருமானம் 



2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித் துறையை வலுவானதாகவும், குறித்த வளர்ச்சியை தொடர்ந்தும் பேணுவதுடன் இக்காலப் பகுதியில் 5.8 வீத வருடாந்த அதிகரிப்பை பதிவிட்டுள்ளதுடன் இலங்கை சுங்கத்தின் தற்காலிகத் தரவுகளுக்கு இணங்க மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மதிப்பிடப்பட்ட இரத்தினக்கல் மற்றும் தங்காபரணங்கள் மற்றும் மசகு எண்ணெய் உற்பத்திக்கா ஏற்றுமதி வருமானம் 15776.36 டொலர் மில்லியன் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற விசேட ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


பிரதான சந்தைகளை வழமைக்குக் கொண்டு வருதல், நிலைபேறாண உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி தந்திரோபாய வழிகளை வினைத்திறனாக செயற்படுத்துவதனால் இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பலம் மற்றும் போட்டித் தன்மைகளை வலியுறுத்துவதாக அதன் போது அவர் சுட்டிக் காட்டினார்.


மேலும் 2025 நவம்பர் மாதத்தில் சந்தைப் பொருட்கள் மற்றும் சேவை ஆகிய துறைகளில் மொத்த ஏற்றுமதி 1364.52 மீ,அமெரிக்க டாலர்கள் என்றும் அது 2024 நவம்பருடன் ஒப்பிடும் போது 5.56 வருடாந்த அதிகரிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.


அவ்வாறே 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சந்தையில் பொருட்களின் ஏற்றுமதி 124 17.98 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதுடன் அது 2024 அக்காலப் பகுதியுடன் ஒப்பிடும் போது 6.41% அதிகரிப்பாகும்.


2025 நவம்பர் மாதத்தில் சேவை ஏற்றுமதி 4.27% ஆல் அதிகரித்து 311.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் காணப்பட்டதாக மிதிப்பிடப்பட்டுள்ள தாகவும் 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சேவை ஏற்றுமதி 3.63% ஆல் அதிகரித்திருந்ததாக மதிப்பிடப்பட்டதாகவும் அது 3, 358.38 , என்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



இலங்கை மின்சார சபையின் விருப்ப ஓய்வுத் திட்டம் தாமதம்



இலங்கை மின்சார சபையின் (CEB) விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு (VRS) விண்ணப்பித்த 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், திட்டம் தொடர்ந்து தாமதமடைவதால் கடும் மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற நிலையைக் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.


பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, விருப்ப ஓய்வுத் திட்டம் நடைமுறைக்கு வரும் உறுதியான திகதியை உடனடியாக அறிவிக்க கோரியுள்ளனர். நீண்ட கால தாமதம் காரணமாக தங்களின் எதிர்காலத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தீவிரமான மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


விண்ணப்பித்த பலர் சேவையிலிருந்து விலகிய பின் செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்காக மாற்று வேலை வாய்ப்புகளை தேடுதல், வியாபாரத் திட்டங்கள் அமைத்தல், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஆராய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கனவே தயாராகியிருந்ததாகவும்  ஆனால் அதிகாரப்பூர்வ ஓய்வு திகதி அறிவிக்கப்படாததால் அந்தத் திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் தடுமாறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பின் பின்னணியில் துணை நிறுவனங்களுடன் இணைப்பு இல்லாத நிலையில் இருந்ததாலேயே தாங்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததாக ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த விண்ணப்பங்கள் இலங்கை மின்சாரச் சட்டம் (திருத்தம்) இல.36 – 2024 மற்றும் 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி இல.2451/11 என்பவற்றின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேவேளை, அரசின் மொத்த அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் விருப்ப ஓய்வுத் திட்ட முயற்சிக்கு தங்கள் நம்பிக்கை மற்றும் பாராட்டுத்தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஊழியர்கள், சிலரின் தேவையற்ற நடவடிக்கைகள் காரணமாகவே இந்த செயல்முறை மேலும் தாமதமடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் திட்டம் உண்மையில் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.


எனவே, ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் எதிர்கொள்ளும் வாழ்வாதார மற்றும் நலன் தொடர்பான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, நியாயமும் கருணையும் கொண்டு இந்த விடயத்தை தீர்த்து, விருப்ப ஓய்வு திகதியை விரைவாக அறிவிக்க எரிசக்தி அமைச்சர் தலையிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



தென் கடலில் சிக்கிய  மீன்பிடிப் படகு!



போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று தென்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த நெடுநாள் மீன்பிடிப் படகு கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 


கைப்பற்றப்பட்ட அந்தப் படகு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக, அதனை கரைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.



 தபாலில் வந்த 'குஷ்'




தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதன் எடை 6 கிலோ 201 கிராம் எனச் சுங்கப் பணிப்பாளரும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். 


விசேட பொதி சோதனையின் போதே இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனிடையே, ஒருகொடவத்தை சுங்க வளாகத்தில் சோதனைக்காக வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். 


சுங்கத் தடுப்புப் பிரிவின் செயற்பாட்டுப் பிரிவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.


அந்தக் கொள்கலன் முழுவதும் மஞ்சள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீட்கப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.



பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் 



எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார். 


நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். 


ரயில் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் 



நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. 


இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி விசேட கடுகதி ரயில் ஒன்று பயணிக்கவுள்ளது. 


அந்த விசேட ரயில், இம்மாதம் 29 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டு, காலை 8.30 மணிக்குக் கொழும்பு கோட்டையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது. 


மேலும், கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை எதிர்வரும் 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.


இந்தப் ரயில் 9 முதலாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகளைக் கொண்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த 2026 முதல் இலவச ........! 

No comments

Theme images by fpm. Powered by Blogger.