ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு.............!

 ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு.............! 




ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு.............!




ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு......


முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டும், முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


முதியோருக்கு மனநலப் பிரச்சினை


இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 30% பேர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


26/01/2026 கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாடிய மனநல மருத்துவர் மதுஷானி டயஸ், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களில் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இலங்கையில் முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், முதியோர் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகள் குறித்த சமூக விழிப்புணர்வு இல்லாததால் ஏராளமான சவால்கள் எழுந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் முதியவர்களிடையே நினைவாற்றல் இழப்பு, மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை அல்லது புறக்கணிக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் முதியோர்களிடையே மனநலப் பிரச்சினைகள் குறிப்பிடத்தக்களவு பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளபோதிலும், போதுமான பாதுகாப்பு மற்றும் ஆதரவான கட்டமைப்பு இல்லாதது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


தனிமையில் வசிக்கும் முதியவர்கள் அடிக்கடி பொருளாதார மற்றும் சமூக சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் எனவும் அரசாங்கம் மற்றும் சமூகம் இரண்டிலிருந்தும் போதுமான ஆதரவு இன்மையானது இப் பிரச்சினையை அதிகப்படுத்துகிறது. 


எனவே, இலங்கையில் உள்ள முதியோர் எதிர்கொள்ளும் மனநல சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் பயனுள்ள வழிமுறைகளை நிறுவுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இன்டர்போல் அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தும் ரஷ்யா


சர்வதேச காவல்துறையில் (இன்டர்போல்) பணிபுரியும் ஒரு நபர் கசியவிட்ட ஆயிரக்கணக்கான இரகசியக் கோப்புகள், ரஷ்யா எவ்வாறு சர்வதேச பிடியாணைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள தனது விமர்சகர்களையும் அரசியல் எதிரிகளையும் குறிவைக்கிறது என்பதை முதன்முதலாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 

கடந்த 10 ஆண்டுகளில், இன்டர்போலின் தன்னாட்சி பெற்ற முறைப்பாடுகள் பிரிவுக்கு வந்துள்ள முறைப்பாடுகளில் ரஷ்யாவிற்கு எதிரான புகார்களே முதலிடத்தில் உள்ளன. 

 

இது இரண்டாவது இடத்தில் உள்ள துருக்கியை விட மூன்று மடங்கு அதிகமாகும். 


ரஷ்யாவின் கோரிக்கையின் பேரில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளில் சுமார் 400 க்கும் மேற்பட்டவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனக் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

ரஷ்யா பொதுவாக அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிருப்தியில் உள்ள தொழிலதிபர்களை நிதி மோசடி அல்லது ஊழல் போன்ற பொதுவான குற்றங்களைச் செய்ததாகக் கூறி இன்டர்போல் தரவுத்தளத்தில் இணைக்கிறது. 

 

இது ஒரு நபரை உலகளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அனைத்து நாடுகளும் அவரைக் கைது செய்யக் கோரும் அறிவிப்பாகும். இது குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் நேரடியாக அனுப்பப்படும் கைது கோரிக்கையாகும். 

 

ரஷ்யத் தொழிலதிபரான ஈகோர் பெஸ்ட்ரிகோவ் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தனது நிறுவனங்களை இராணுவத் தேவைக்காகப் பயன்படுத்த ரஷ்ய அரசுக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததால், அவர் மீது நிதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

 

இதனால் பிரான்சில் தஞ்சம் புகுந்த அவர், இன்டர்போல் பிடியாணையில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, தலைமறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என இன்டர்போல் அந்த பிடியாணையை ரத்து செய்தது. 

 

2022 இல் யுக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யாவின் கோரிக்கைகளை இன்டர்போல் கூடுதல் கவனத்துடன் சோதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. 

 

இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் 90 வீதமான கோரிக்கைகள் ஆரம்பகட்ட சோதனைகளில் தப்பித்துவிட்டன. 

 

ஆனால், மேல்முறையீட்டின் போது அதில் பாதிக்கும் மேற்பட்டவை தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. 

 

இது இன்டர்போலின் சோதனை முறை பலவீனமாக இருப்பதையே காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்த போது, அதற்குப் பதிலடியாக அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் மீது இன்டர்போல் ஊடாக பிடியாணை பிறப்பிக்க ரஷ்யா முயற்சித்தது. 

 

இருப்பினும், இந்த முயற்சி இன்டர்போலால் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை வரலாற்றில் மாபெரும் திருப்பம்- 


இலங்கை வரலாற்றில் மிகப்பாரிய அளவிலான அந்நிய நேரடி முதலீடான சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவில் இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 2 இலட்சம் கொள்கலன் மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டுள்ளது. 


இந்த திட்டத்தினூடாக, உள்ளூர் சந்தையில் 20 சதவீத எரிபொருளை மாத்திரமே விற்பனை செய்ய வேண்டும் என்ற இலங்கை அரசின் நிபந்தனைக்கு சினோபெக் நிறுவனம் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 

 

இந்தநிலையில், நீண்டகாலமாக நீடித்துவந்த சந்தை அணுகல் தொடர்பான சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.



ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு......


No comments

Theme images by fpm. Powered by Blogger.