வரலாற்றில் ஒரே நேரத்தில் 08 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி ....!

வரலாற்றில் ஒரே நேரத்தில் 08 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி  ....




வரலாற்றில் ஒரே நேரத்தில் 08 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி  ....!



வரலாற்றில் ஒரே நேரத்தில் 08 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி  ....


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ்.நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இன்று வியாழக்கிழமை (19.02.2026) ஆரம்பமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப நாளில் 8 தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார். இதன்மூலம் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவியாக மேற்படி மாணவி இடம்பிடித்துள்ளார். 


மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம், சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology) மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற துறைகளில் விசேட சித்தி, மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவிக்கான விருது ஆகியவற்றுக்காகவே குறித்த தங்கப் பதக்கங்கள் மாணவி அபிராமிக்கு வழங்கப்பட்டுள்ளன.



யாத்திரிகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்!


எதிர்வரும் 27 மற்றும் 28 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.


2026.02.27 ஆந் திகதி அதிகாலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 01.00 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.


கச்சதீவுக்கான படகுச்சேவை, குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026 திகதி அதிகாலை 5.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.


குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒருவருக்கான படகுப் பயணக் கட்டணம் 1200 ரூபாயாகும்.


கச்சதீவுக்கு குழுவாக தனியாக படகில் வருகை தரும் யாத்திரிகர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2026.02.27 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ம் திகதி அன்று காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவைக் கொண்டுவரமுடியும் அத்துடன் அந்தப் பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.




எரிக் டேன் காலமானார்


கிரேஸ் அனாடமி' (Grey's Anatomy) மற்றும் 'யூபோரியா' (Euphoria) தொடர்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் எரிக் டேன் (Eric Dane), தனது 53ஆவது வயதில் காலமானார்.

அவர் ALS (Amyotrophic Lateral Sclerosis) எனப்படும் நரம்பியல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



வாகனக் கொள்வனவா? அவசரம் வேண்டாம்!



இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

புதிய வரி விதிப்பால் வாகனங்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படாது எனச் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே உறுதியளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஜப்பானில் வாகன விலை வீழ்ச்சி கண்டுள்ளது.

அந்த விலைக்குறைப்பின் பலன் உள்ளூர் சந்தையில் பிரதிபலிக்கும் என்பதால், வரியினால் ஏற்படும் சிறு அதிகரிப்பு ஈடுசெய்யப்படும்.

இதன்படி, 2.5வீத வரி என்பது வாகனத்தின் பெறுமதிக்கு ஏற்ப சுமார் 75,000 முதல் 100,000 ரூபாய் வரை மட்டுமே மேலதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பல தனிநபர் இறக்குமதியாளர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்கின்றனர்.

எனினும்,புதிய முறையில், வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கும் முன்பே துறைமுகத்தில் வரியைச் செலுத்த வேண்டும்.

இதனால் அரச வருமானம் அதிகரிப்பதுடன், பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத அனைத்து இறக்குமதியாளர்களும் சமமாக வரி செலுத்துவது உறுதிச் செய்யப்படும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே சுட்டிக்காட்டியுள்ளார்.



தொழில்சார் கல்விக்கான முதலீடு நிறுவன உறுதிப்பாட்டிற்கும் தேசிய முன்னேற்றத்திற்குமான அடித்தளம்


திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் இணைப்பதும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 இலங்கை பட்டயப் பணியாளர் முகாமைத்துவ நிறுவனத்தினால் (CIPM) ஏற்பாடு செய்யப்பட்ட, ‘அங்கீகாரத்தின் புதிய உச்சங்கள்’ New Heights of Recognition எனும் கருப்பொருளிலான விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் கடந்த புதன்கிழமை ,பெப்ரவரி 18 நடைபெற்ற இந்நிகழ்வின்போது, SCQF 11 ஆம் மட்டத்தின் (Level 11) கீழ், QS தரச்சான்று பெற்ற புதிய பாடத்திட்டத்துடனான 'மனிதவள முகாமைத்துவத்தில் பட்டயத் தகைமை' (CQHRM) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது, தொழில்சார் மற்றும் தொழிற்கல்விப் பாதைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
 
நமது கல்விப் பாதைகளையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதில் இந்தத் தருணம் மிகவும் முக்கியமானது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற, நிபுணத்துவ மற்றும் தொழிற்துறை சார்ந்த பல்வேறு வாய்ப்புகளை வழங்கக்கூடிய கல்விச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். இது நாம் கல்வித்துறையில் ஆரம்பித்துள்ள சீர்திருத்தச் செயல்முறைகளுடன் ஒத்துப்போகின்றது.

கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது எல்லைக்கு உட்பட்டது மாத்திரமல்ல, எவர் வேண்டுமானாலும் கல்வி கற்றுக்கொண்டே தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும், எனத் தெரிவித்தார்.
 
இலங்கையின் தேசிய முன்னுரிமைகளை முன்னிறுத்தி மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
இலங்கை பொருளாதார மீட்சி, நிறுவன ரீதியான சீர்திருத்தம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் இக்காலகட்டத்தில், திறமையான மற்றும் ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட மனிதவளத் தலைமைத்துவத்தின் தேவை இன்றியமையாதது.

போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம் என்பது முதலீடு மற்றும் உட்கட்டமைப்புகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, நிறுவனங்களைத் திறம்பட வழிநடத்தக்கூடிய தகுதிவாய்ந்த தொழில் நிபுணர்களின் மீதே தங்கியிருக்கின்றது.
 
இந்த SCQF Level 11 மனிதவள முகாமைத்துவ பட்டயத் தகைமையானது, நிபுணர்களின் சர்வதேச அங்கீகாரத்தை வலுப்படுத்துவதுடன், நாட்டின் தொழில்சார் கல்வி முறைமை மீதான நம்பிக்கையையும் மேலும் உறுதிப்படுத்தும் என பிரதமர் குறிப்பிட்டார். 

அத்தோடு, நியாயமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பாதுகாப்பான பணிச்சூழல், பெண்களுக்கான தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணித்தள சமத்துவத்தை முன்னெடுப்பதில் மனிதவள முகாமைத்துவப் பிரிவின் வகிபாகம் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொழிற்துறையின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், பணியாளர் முகாமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாகத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



வரலாற்றில் ஒரே நேரத்தில் 08 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி  ....


No comments

Theme images by fpm. Powered by Blogger.