சமூக வலைதளங்களில் AI குற்றம் ---அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ....!

சமூக வலைதளங்களில் AI குற்றம் ---அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ....




சமூக வலைதளங்களில் AI குற்றம் ---அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ....!




சமூக வலைதளங்களில் AI குற்றம் ---அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ....


சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகள் பரப்பப்படுவதைத் தடுக்கத் தவறியதாக, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது ஸ்பெயின் அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.


பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


எக்ஸ், மெட்டா மற்றும் டிக்டொக் ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு ஸ்பெயின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.


சமூக வலைதளங்களின் அடிமையாக்கும் அம்சங்கள் மற்றும் தவறான விளம்பரப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக ஸ்பெயின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் விரிவான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை பார்க்கப்படுகிறது.


இது தொடர்பாக மூன்று அமைச்சகங்கள் வழங்கிய தொழில்நுட்ப அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள டிக்டொக் நிறுவனம், இத்தகைய செயல்கள் தங்களது தளத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களைப் பாதுகாக்க மேம்பட்ட தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.


இருப்பினும், எக்ஸ் மற்றும் மெட்டா நிறுவனங்கள் இது குறித்து உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையகமும் (DPC), ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் நிறுவனத்தின் 'க்ரோக்' (Grok) எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.


இந்தத் தொழில்நுட்பம் சிறுவர்களின் ஆபாசப் படங்களை உருவாக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



உச்ச இராணுவப் பதற்றம்


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதை பிபிசியின் தரப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.


இந்தநிலையில், 2026 பெப்ரவரி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பதிவான முக்கிய நகர்வுகள் வெளியாகியுள்ளன.


அமெரிக்க வான் படைக்குச் சொந்தமான இரண்டு சிறப்பு ரேடார் கண்காணிப்பு வானூர்திகள், அலாஸ்காவிலிருந்து, ஐக்கிய இராச்சியத்திற்கு ஒரே இரவில் வந்துள்ளன.


ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கண்காணிப்பு வளையத்தை பலப்படுத்துவதற்கும் இந்த புதிய வானூர்திகள் வரவழைக்கப்பட்டுள்ளன.


ஏற்கனவே F-15E Strike Eagles மற்றும் F-35 போர் வானூர்திகள் இந்தப் பிராந்தியத்தில் தயார் நிலையில் உள்ளன.


இதேவேளை, பாரசீக வளைகுடாவில் ஈரானின் புதிய அதிநவீன போர்க்கப்பல் ஒன்று பயணிப்பதைக் காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.


அமெரிக்காவின் ஏப்ரகாம் லிங்கன் கப்பல் ஈரான் அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்துள்ள நிலையில், அதற்குப் பதிலாக ஈரான் தனது கடற்படை ஒத்திகைகளையும் நவீன போர்க்கப்பல்களையும் அங்கு குவித்துள்ளது.



தொழில் வல்லுநர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்


சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம், பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பாரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 


அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், ஒரு நாட்டிற்குள் குடிமக்களினதும் தொழில் வல்லுநர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் முதன்மையான பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளது. 


எந்தவொரு தொழில் வல்லுநரும் அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்கள் இன்றி, சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது தொழில்முறை சேவைகளை வழங்குவதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள்ளும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாகப் பல பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 


குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சூழலில் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வலுவான மற்றும் நம்பகமான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கை போக்குவரத்து சபையில் --- தகுதிக்கே இடம்!


இனிவரும் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.


அனைத்து பதவிகளுக்குமான ஊழியர் உள்வாங்கல் செயன்முறையை முறைப்படியாக மேற்கொள்வதே இதன் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.


எதிர்வரும் சில நாட்களில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் குறிப்பிட்டார்.



சமூக வலைதளங்களில் AI குற்றம் ---அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ....

No comments

Theme images by fpm. Powered by Blogger.