மாணவர்களிடையே பரவும் வைரஸ் நோய்...

 மாணவர்களிடையே பரவும் வைரஸ் நோய்...



மாணவர்களிடையே பரவும் வைரஸ் நோய்...



மாணவர்களிடையே பரவும் வைரஸ் நோய்...


பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் மெனிஞ்சைடிஸ் வைரஸ் நோய் நிலைமை பரவி வருகின்றபோதிலும் அது தொடர்பில் பயம் கொள்ளத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

அதன்படி, மெனிஞ்சைடிஸ் எனும் மூளைக்காய்ச்சல் தியத்தலாவையில் 28 நோயாளர்களும் வெலிமடையில் 13 நோயாளர்களும் ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.




களனி, களு மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்துள்ள மக்களுக்கான அறிவிப்பு


அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு, அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 


கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழைவீழ்ச்சியைக் கருத்திற் கொள்ளும்போது, அதிகளவிலான மழைவீழ்ச்சி களனி கங்கை ஆற்றுப் படுகையிலேயே பதிவாகியுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


அத்துடன் களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை சூழவுள்ள இடங்களில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும், ஆறுகளின் உயர்வடைந்த நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதுடன், அதில் பெரியளவிலான அதிகரிப்பு எதுவும் காட்டவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. 


களனி கங்கையின் நாகலகம வீதிப் பகுதியின் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், அதில் மேலும் அதிகரிப்பு எதுவும் இல்லை எனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 


அத்துடன் எல்லகாவ மற்றும் மில்லகந்த ஆகிய இடங்களின் நீர்மட்டங்களும் படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எவ்வாறாயினும், மேலும் அதிகளவிலான மழைவீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில், களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




21 முக்கிய குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டனர்


வெளிநாடு சென்று தலைமறைவாகி இருந்த நிலையில் நாட்டினுள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை வழிநடத்தி வந்த பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 21 சந்தேகநபர்கள் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு  வெள்ளிக்கிழமை (22) நாட்டிற்கு  அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.


இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


டுபாயில் வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட  பாதாள உலகக்குழுவுடன் தொடர்புடைய 21 சந்தேகநபர்கள்  வெள்ளிக்கிழமை (22) விசேட பொலிஸ் குழுவொன்றின் கண்காணிப்பின் கீழ்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.  குறித்த சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்தை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள  அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


அழைத்துவரப்பட்ட நபர்கள் மனித படுகொலைகள், கப்பம் கோருதல், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாவதோடு,  பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களுமாவர். பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 21 பேரும் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவு  மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுடன் தொடர்புடைய ஏனைய  சந்தேகநபர்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள்  குறித்த தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில், தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட  சட்டநடவடிக்கைகளைத் தவிர்ப்பதுக்காக  வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பாதாள உலகக் குழுக்களின் வலையமைப்பை  ஒழிப்பதுக்கு பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என்றார்.





அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகள் வௌியீடு..! 


சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது.


ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய உத்தேச விலை வரம்புகள் கீழே தரப்பட்டுள்ளன.


தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலை வரம்பு (2026 மே 18 முதல் மே 24 வரை)


  • கோதுமை மா - 153.00 - 172.00
  • வெள்ளைச் சீனி - 195.00 - 235.00
  • பருப்பு - 225.00 - 249.00
  • உருளைக்கிழங்கு (இந்தியா) - 160.00 - 228.00
  • உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) - 160.00 - 201.00
  • பெரிய வெங்காயம் (இந்தியா) - 175.00 – 218.00
  • பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) - 112.00 - 160.00
  • சின்ன வெங்காயம் (இறக்குமதி செய்யப்பட்டது) - 280.00 - 320.00
  • நெத்திலி (தாய்லாந்து) - 1100.00 - 1156.00
  • நெத்திலி (ஏனையவை) - 1080.00 - 1309.00
  • காய்ந்த மிளகாய் - 900.00 - 1087.00
  • முட்டை (வெள்ளை) ஒன்று - 30.00 - 35.00
  • முட்டை (சிவப்பு) ஒன்று - 32.00 - 37.00
  • ரின் மீன் (உள்நாட்டு மெக்கரல்) 425g - 380.00 - 480.00
  • ரின் மீன் (உள்நாட்டு லின்னா ஜக் மெக்கரல்) 425g - 460.00 - 560.00
  • உள்நாட்டு பச்சை அரிசி (வெள்ளை) - 180.00 - 220.00
  • உள்நாட்டு பச்சை அரிசி (சிவப்பு) - 168.00 - 220.00
  • உள்நாட்டு நாடு அரிசி (வெள்ளை) - 190.00 - 230.00
  • பிரொய்லர் கோழி இறைச்சி (முழுக்கோழி தோலுடன்) - 1000.00 - 1250.00
  • முழு ஆடை பால்மா 400g - 990.00 - 1155.00




மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்..! 


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு இதுவரை பொறுப்பேற்கப்படாத வாகன இலக்கத் தகடுகளை, 


2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.


நாரஹேன்பிட்டிய தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதுமுள்ள மாவட்ட கிளைகளில் சுமார் 100,000 இலக்கத் தகடுகள் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்கள் நாரஹேன்பிட்டிய பிரதான அலுவலகத்தில் இலக்கத் தகடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஏனைய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இலக்கத் தகடுகளை அந்தந்த மாவட்ட செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளைகளில் பெற்றுக்கொள்ள வேண்டும்.


இந்தத் தகடுகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இதனைத் பெற்றுக்கொள்ள தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் நிர்வாக ரீதியான தாமதங்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது.


மேலதிக தகவல்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இலக்கத் தகடு பிரிவை 011-2033333 எனும் இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ளலாம்.





கிழக்கில் பல இளைஞர்களை ஏமாற்றிய நபர் சிக்கினார்...! 


அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, 


கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர், 


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, கனடாவின் சூப்பர் மார்க்கெட்களில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, 


இந்தச் சந்தேகநபர் பண மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.


இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்ய பலமுறை முயற்சித்த போதிலும், 


அவர் அதிகாரிகளிடம் சிக்காமல் தலைமறைவாகியிருந்தார்.


பின்னர், பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய சோதனையின் போது, 


குச்சவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இந்தச் சந்தேகநபருக்கு எதிராக நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை நீதிமன்றங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, 


அவருக்கு எதிராக மேலும் பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


விசாரணைகளின் படி, சந்தேகநபர் மோசடி செய்துள்ள ஒட்டுமொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.







 மாணவர்களிடையே பரவும் வைரஸ் நோய்...









No comments

Theme images by fpm. Powered by Blogger.