பாடசாலை மாணவர்களிடையே பரவிவரும் ...!
பாடசாலை மாணவர்களிடையே பரவிவரும் ...!
பாடசாலை மாணவர்களிடையே பரவிவரும் ...!
பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளை08/05/2026 மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மெத்தியூ இருமொழி பாடசாலை மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.
குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும், பிள்ளைகளுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறச் செய்யுமாறும்,
சுகாதாரப் பிரிவினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நடைபெறும்
உங்கள் நெருங்கியவர்களில் ஒருவர் விபத்து அல்லது அவசர நிலை என்று கூறி தொலைபேசியில் பணம் கேட்டால், பதற்றமடைந்து உடனே பணம் அனுப்ப வேண்டாம்.
வேறு வழிகளில் அந்த நபர் உண்மையில் எங்கே இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது குரல்கூட போலியாக உருவாக்கப்பட முடியும்.
கேட்கும் குரலை நம்பி ஏமாறாதீர்கள் – பணம் அனுப்புவதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள். மோசடிக்காரர்களிடம் சிக்காமல் புத்திசாலித்தனமாக இருங்கள்.
கொரோனா காலத்தில் சேவையாற்றிய இளைஞருக்கு இலவச
கொரோனா காலத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது தன்னார்வத்துடன் சேவையாற்றிய இளைஞரை கௌரவிக்கும் வகையில், இலவசமாக ஹஜ் யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்புகளை நல்லடக்கம் செய்யும் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட இளைஞர் குழுவினரால், தங்களுக்குள் இருந்து, மௌலவி சமீம் ஸலாமி என்ற இளைஞரின் பெயர் இந்த வாய்ப்புக்காக முன்மொழியப்பட்டது.
அதற்கமைய, அவருக்கான விமான பயணச்சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு, முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களினால் நேற்று (04.05.2026 )சமய மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
சுமார் 700 பெண்களின் தொலைபேசி இலக்கம் தனிப்பட்ட புகைப்படங்களோடு சிக்கிய நபர்
டெலிகிராம் குழுவை பயன்படுத்தி, கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரை Criminal Investigation Department (CID) கைது செய்துள்ளது.
அம்பாறை பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், பிபில பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, சுமார் 700 இளம் பெண்களின் தொலைபேசி எண்கள், மேலும் சிலரின் தனிப்பட்ட (அருவருப்பான) படங்கள் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில் தெரியவந்ததாவது,
ஆரம்பத்தில் பெண்களுடன் நட்பாக உரையாடி, பின்னர் அவர்களின் படங்களை மாற்றியமைத்து (edit செய்து) மீண்டும் அவர்களுக்கே அனுப்பி, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மேலும் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
தனது அடையாளத்தை மறைக்க, டெலிகிராம் கணக்குகளில் உண்மையான பெயர் அல்லது படம் பயன்படுத்தாமல், அழைப்புகளும் வராதவாறு அமைப்புகளை மாற்றியமைத்திருந்தார்.
பயம் மற்றும் அவமானம் காரணமாக பல இளம் பெண்கள் புகார் அளிக்க முன்வராமல் இருப்பதாகவும், இதன் மூலம் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 14 நாட்கள் ரிமாண்ட் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை CIDயின் கணினி குற்றப்பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் – உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்!
விஜய் பதவியேற்பு விழா ஒத்திவைப்பு?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்பதாக கூறிய நிலையில், பெரும்பான்மை இன்னும் கிடைக்காததாக நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே 108 இடங்களை தக்க வைத்திருக்கும் தவெக காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவை நேற்று பெற்றது.
இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன்படி, இடதுசாரிகள் (04), விடுதலைச் சிறுத்தைகள் (02) கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். ஆனால், இதுவரை ஆட்சி அமைக்க விஜய்யை ஆளுநர் அழைக்கவில்லை.
ஆளுநர் மாளிகையில் இருந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அதிகாரிகள் பதவி ஏற்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முற்பட்டது கடுமையான விமா்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கு செய்யப்பட்டு வந்த முன்னேற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க தாமதம் ஏற்படும் நிலையில், முதலமைச்சருக்கான பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக விஜய்யிடன் அதிகாரிகள் எடுத்துரைத்தை அடுத்து, பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ்
தென் ஆப்பிரிக்கா அருகே ஆடம்பர சொகுசுக் கப்பல் ஒன்றில் ஹண்டா என்னும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 3 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து MV Hondius என்று பெயர் சூட்டப்பட்ட கப்பலில் இருந்த 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது கேப் வர்டி என்னும் இடத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து நேற்று (புதன்கிழமை) மூன்று பயணிகள் மீட்கப்பட்டனர், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஒரு நோயாளி தற்போது தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார், அதே நேரத்தில் சுவிட்சர்லாந்துக்குத் திரும்பிய மற்றொரு முன்னாள் பயணி ஸூரிச்சில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எந்த அறிகுறிகளும் இல்லாமல் தற்போது கப்பலில் இருக்கும் அனைத்து பயணிகளும், கப்பல் கேனரி தீவுகளை அடைந்தவுடன் இறங்க அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும் அவர்கள் ஸ்பெயினின் இராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், மற்ற அனைத்து பயணிகளும் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, அந்தந்த நாடுகளின் சுகாதார நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
ஹண்டா வைரஸ்கள் என்பவை எலி, அணில், முள்ளம்பன்றிகள் உள்ளிட்ட கொறித்துண்ணிகளால் (rodents) பரவும் வைரஸ்கள் ஆகும், அவை மனிதர்களுக்குத் தொற்று நோயை உண்டாக்கக்கூடியவை.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 10,000 முதல் 100,000 பேருக்கு இந்த நோய் ஏற்படுகிறது, இதன் தீவிரம் குறிப்பிட்ட வகையைப் பொறுத்து மாறுபடும்.
சொகுசுக் கப்பலில் கண்டறியப்பட்ட ஹண்டா வைரஸ், ஏண்டஸ் ஹண்டா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் அர்ஜெண்டினா மற்றும் சிலி நகரங்களில் இருக்கும். இந்தக் கப்பல் ஏப்ரல் 1ஆம் திகதி அர்ஜெண்டினாவில் இருந்து கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
ஹன்டா வைரஸ் முதன்மையாக விலங்குகள் மூலம் பரவுகிறது. எலிகள் அல்லது சுண்டெலிகளுடனான தொடர்பு, அல்லது அவற்றின் சிறுநீர், எச்சம், அல்லது உமிழ்நீர் வழியாக இது மனிதர்களுக்குத் தொற்றுகிறது.
பெரும்பாலும் வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்யும்போது இந்த வைரஸ் காற்றில் பரவுகிறது. அரிதான சூழல்களில், அசுத்தமான மேற்பரப்புகள் மூலமாகவும் ஹண்டா வைரஸ் பரவுகிறது.
எனினும் பொதுமக்கள் நலனுக்கு ஒட்டுமொத்தமாக ஏற்படும் அபாயம் குறைவே என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே பரவிவரும் ...!

No comments