பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுப்பு......!

       

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுப்பு......! 



பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுப்பு......!



பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுப்பு......! 


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு மோசடி மொபைல் செயலி தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்த ஒரு தொலைபேசி எண்ணை திருத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.


பொலிஸ் ஊடகப்பிரிவின் முந்தைய அறிக்கையில் (D/Media/Out/649/2026) வாட்ஸ்அப் வழியாக "ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்" என்ற பெயரை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியுடன் தொடர்புடைய எண்களில் 011‑7771979 என்ற எண்ணும் பட்டியலிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், 011‑7771979 என்பது தனது அதிகாரப்பூர்வமான, சட்டப்பூர்வமான தொடர்பு எண் என்று தெளிவுபடுத்தி, அந்த எண்ணை அறிக்கையிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளது.


விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, பொலிஸ் ஊடகப்பிரிவு சட்டப்பூர்வமான எண்ணை நீக்கிவிட்டு, தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோசடி குறித்து பொதுமக்களை மீண்டும் எச்சரித்துள்ளது.


குறித்த மோசடிக்காரர்கள்(srilankan[.]wuozgo[.]cc),(srilankan[.]vaco[.]cc), மற்றும் (srilankan[.]krgo[.]cc) ஆகிய மூன்று போலி இணையதளங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்தச்செயலியை நிறுவியவுடன், பணப்பரிமாற்றம் செய்வதற்காக ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTPs), வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தரவுகள் திருடப்படுகின்றன.


இந்த மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய எண்கள் 077‑4558361 074‑1142208 077‑5791209 074‑3268200 தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தனிநபர்களும் குழுக்களும் இதுபோன்ற திட்டங்கள் மூலம் பொதுமக்களைத் தொடர்ந்து சுரண்டி வருவதாகவும்,பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.   



வான் கதவுகள் திறப்பு..

    

சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் இராஜாங்கனை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை இன்று (09) காலை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அடி வீதமும் விநாடிக்கு 8,400 கன அடிக்கும் திறக்கப்பட்டுள்ளது.


அதேபோல், லுணுகம்வெஹேர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2 கதவுகள் தலா 4 அடி வீதமும், ஏனைய 4 கதவுகள் தலா 8 அடி வீதமும் விநாடிக்கு 2,915 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கிரிந்தி ஓயாவைப் பயன்படுத்துவோர் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 


இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 கதவுகள் தலா 2 அடி வீதமும், ஏனைய 2 கதவுகள் தலா 3 அடி வீதமும் விநாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.



 9 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை...

    

நடப்பாண்டில் இதுவரை 9 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 


இதன்படி, 904,855 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் இவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர். அவர்களின் எண்ணிக்கை 200,796 ஆகும். அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 


இதேவேளை, இம்மாதம் முதலாம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 28,578 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



 பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!




ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதேநேரம், சாதாரண தேநீரின் விலையை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சிற்றுண்டிகளின் விலையும் 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்தார்.

எனினும், முட்டை ரொட்டி, பரோட்டா மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலையில் எந்த உயர்வும் மேற்கொள்ளப்படவில்லை.
உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அதிகரித்ததை தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.




எரிமலை வெடிப்பு – 3 பேர் பலி!


இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ (Mount Dukono) எரிமலை இன்று (08) காலை வெடித்ததில் மலையேறுபவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எரிமலைப் பகுதிக்குள் நுழைவதற்கும் மலையேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், சிங்கப்பூரைச் சேர்ந்த 09 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


பாதிக்கப்பட்ட பலரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எரிமலை வெடித்தவுடன் சுமார் 10 கிலோமீற்றர் உயரத்திற்கு வானத்தை நோக்கி சாம்பல் படலம் சீறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் எரிமலைகளில் ஒன்றான டுகோனோ, மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுப்பு......! 

No comments

Theme images by fpm. Powered by Blogger.