பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை...
பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை...

பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை...
இலங்கையில் இனிவரும் காலங்களில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிடாத பாடசாலை மாணவர்களினதும், அதேபோல் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களினதும் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடாதிருக்க பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கோருவதற்கும் பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வேறு இலக்கங்களை இடும் சில விண்ணப்பதாரர்கள், பரீட்சைக்குத் தோற்றும்போது உண்மையான தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளது.
இதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடும் போது பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர்
சிரமங்களுக்கு மத்தியிலும் இதுவரையில் அத்தகைய விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இனிவரும் காலங்களில் அவ்வாறு செய்யப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது அனைத்து விண்ணப்பதாரர்களினதும் பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்...
உரிய தரநிலைகளைப் பின்பற்றாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
பதிவு செய்யப்படாத நிலையங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறும், தரமற்ற முதியோர் இல்லங்களுக்கு இனி அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு….
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30% முதல் 40% வரையான அதிகரிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களுள் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நோயாளர்களில் சுமார் 80 சதவீதமானோர் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளனர்.
'டித்வா' புயல் நிலைமையுடன் நாட்டில் ஏற்பட்ட பலத்த மழைவீழ்ச்சி மற்றும் அதன் பின்னர் அவ்வப்போது பெய்த மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினத்தில் (05) மற்றுமொரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனுடன் இந்த வருடத்தின் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்கள் அடங்குவதுடன், ஏனையோர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் 29 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்திருந்தனர் என்றும் வைத்தியர் கபில கன்னங்கர அங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு...
லாஃப்ஸ் எரிவாயுவின் ஜூன் மாத விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 6,245 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2,500 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலைகளே ஜூன் மாதத்திலும் அமுலில் இருக்கும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு...
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று (06) பிற்பகல் 3.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உர மானியம் அதிகரிப்பு - விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்...
அரசாங்கத்தினால் வழங்கப்படும் உர மானியம் ஒரு ஹெக்டேயருக்கு 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முன்னர் வழங்கப்பட்ட மானியத்தை விட 5,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 502,836 விவசாயிகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக அரசாங்கம் 10,947 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
குறித்த மானியத் தொகை ஒரே தடவையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல் நினோ விளைவுகள் ஆரம்பம் - உலகம் முழுவதும் எச்சரிக்கை...
உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் எல் நினோ விளைவுகள் தொடங்கிவிட்டதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக இந்த எல் நினோ தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்றப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த காற்றானது பசிபிக் பெருங்கடல் பக்கம் அதிகமாக வீசுவதால் இந்த பகுதியில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருப்பதே, எல் நினோ விளைவு தொடங்கியதற்கான அறிகுறியாகக் கருதப்படுகின்றது என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை...
No comments