சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...


சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...



சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள  வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை(04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது. 

குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில்  செயற்பட்ட   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம்.  சுவர்ணகாந்தி  கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன்  ஏ. ஆதம்பாவா மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் வெள்ளிக்கிழமை (05) அன்று  குறித்த வழக்கானது  மன்றில்  விசாரணைக்கு   கல்முனை நீதிமன்ற  நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபரான  இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கல்முனை மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமி(பாடசாலையை விட்டு இடைவிலகியவர்)   தனது தாயுடன் ஆடை கொள்வனவிற்காக சென்றுள்ளார். 

இவ்வாறு ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞனுக்கும் அங்கு  சென்ற சிறுமிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு தொலைபேசி இலக்கம் பரிமாறப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் இருவரும் 2 மாதங்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATAPPS ) தொடர்பில் இருந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில்  தான் குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை(03) இரவு 11.30 மணியளவில்  வாடகைக்கு பெறப்பட்ட வேன் ஒன்றுடன்   தான் பணியாற்றிய  ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மற்றுமொரு  56 வயது மதிக்கத்தக்க நபரையும் வேனின் சாரதியாக அழைத்துக் கொண்டு சிறுமி தங்கி இருக்கின்ற வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தொலைபேசி ஊடாக அழைத்த  அவ்விளைஞன்  முகவரி ஒன்றினை காட்டுமாறு கூறியுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வீதிக்கு வந்த சிறுமியை  சந்தேக நபரான இளைஞன் உடனடியாக செயற்பட்டு சிறுமியின்   வாயை பொத்தி வேனில் கடத்தி சென்று அம்பாறை  மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம் பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமி  பாழடைந்த வர்த்தக் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் சந்தேக நபரான இளைஞன்  சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார். 

அதன் பின்னர் மற்றுமொரு சந்தேக நபரான 56 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து பின்னர்  இரு சந்தேக நபர்களும் மாறி மாறி துஸ்பிரயோகத்திற்கு  உட்படுத்தி  அக்கரைப்பற்று பகுதிக்கு அச்சிறுமியை  இறுதியாக அழைத்துச் சென்று விட்டுச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் சிறுமி அப்பகுதியால் வருகை தந்த பேரூந்தின் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த விடயங்களை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தினை பெற்ற பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபரான 2 பிள்ளைகளின் தந்தையான  56 வயது மதிக்கததக்க  சந்தேக நபரை பொலிஸார்  தேடி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறுமியை கடத்தி செல்ல உதவிய வேன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் சிறுமியின் தாய் மனஅழுத்தம் காரணமாக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.





மீகொட விபத்து வழக்கு - சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்

மீகொட பகுதியில் வெசாக் தானசாலை வரிசையில் நின்றவர்களின் மேல் கார் மோதிய சம்பவத்தில் குறித்த வாகனத்தின் உரிமையாளரும் சட்டத்தரணி மூலமாக சரணடைந்த மற்றுமொரு நபரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.





நாட்டில் 300 முதியோர் இல்லங்கள் ஆபத்தில்...

 நாட்டில் பதிவு செய்யப்படாத 300க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிதுன் தெரிவித்துள்ளார்.

தற்போது 456 முதியோர் இல்லங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்படும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை 148 ஆகும். 

இதுவரை பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களைப் பதிவு செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி நடத்துமாறு அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பாக முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக குறித்த முதியோர் இல்லங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குவதற்கும் அக்காலப்பகுதிக்குள் பதிவு செய்யப்படாத இல்லங்கள் தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் தீர்மானித்துள்ளது.

கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முதியோர் இல்லங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தைத் தீர்மானித்து இதுவரை பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் அது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிதுன் குறிப்பிட்டுள்ளார்.









மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6.873 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது....

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் (reserve assets) 1.6% அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளன.

2026 ஏப்ரல் இறுதியில் பதிவான 6.766 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து இந்த இருப்புக்கள் அதிகரித்துள்ளன, இது அந்த மாதத்தில் 107 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது. 








பலத்த காற்று குறித்து வெளியான எச்சரிக்கை...!!
 பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று (06) முற்பகல் 11.30 மணி முதல் இன்று  (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகுமென அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

அதேபோல், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையும் மற்றும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலப்பரப்பிற்குள் ஊடுருவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








ஒரே நாளில் 28,000க்கும் அதிகமானோர் சோதனை...
 
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த சோதனை  நடவடிக்கைகளின் போது 589 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, நேற்று (05) தினத்தில் 28,147 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 22 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 149 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 57 நபர்களும், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 78 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,289 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.










கொட்டா வீதி ரயில் கடவை தற்காலிகமாக மூடல்
 
களனிவெலி மார்க்கத்தின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கொட்டா வீதி ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக, ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன் கோட்டா வீதி ரயில் கடவையும் மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த வீதி மூடலானது நேற்று (06) காலை 9:30 மணி முதல் இன்று (07) காலை 7:30 மணி வரை அமுலில் இருக்கும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இக்காலப்பகுதியில் கொட்டா வீதி ரயில் கடவை வாகன போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்படவுள்ளதுடன், கொழும்பு கோட்டை மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இன்று பிற்பகல் மூன்று சாதாரண ரயில் சேகைள் நாரஹேன்பிட்ட ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து அவிசாவளை ரயில் நிலையம் வரை பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் பிரதான மாரக்கத்தின் ஹொரப்பே ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக, அந்த ரயில் கடவையையும் மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.





சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு...








No comments

Theme images by fpm. Powered by Blogger.