அனைத்து பாடசாலைகளிலும் ......!

 அனைத்து பாடசாலைகளிலும் ......!



அனைத்து பாடசாலைகளிலும் ......!


அனைத்து பாடசாலைகளிலும் ......!


டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ள கல்வி அமைச்சு, பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கொசுக்கள் போக்கும் இடங்களை இனங்கண்டு அழிப்பதற்கும், சமூக பங்களிப்புடன் கூடிய துப்புரவாக்கல் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.



பொதுமக்களின் கருத்துக்களைப் பெற புதிய QR குறியீடு அறிமுகம்.....



இலங்கை பொலிஸாரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய QR குறியீட்டு (QR Code) முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் சேவைகள் குறித்தும் பொதுமக்கள் தமது கருத்துக்களை நேரடியாக வழங்குவதற்காக “Sri Lanka Police Community Feedback Portal” என்ற பெயரில் இணையவழி டிஜிட்டல் தளம் (Online Digital Platform) ஒன்றைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு....


உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தற்போது சரிந்துள்ள போதிலும், நாட்டில் தற்போதைய எரிபொருள் விலைகளை அந்த விலைகளுக்கு ஏற்ப குறைக்க வாய்ப்பில்லை என தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதார நிலையை விளக்குவதற்காக, இன்று (17) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.


நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள், முன்னர் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், அந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் கையிருப்பு தீரும் வரை நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க இயலாது என்று அவர் கூறியுள்ளார். 


இருப்பினும், அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் பயன்படுத்தப்பட்ட பின்னரே விலை குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


"கடந்த மாதங்களில் வாங்கப்பட்டவற்றையே நாம் எதிர்காலத்தில் வாங்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப விலைகள் தீர்மானிக்கப்படும். அதிக விலைக்கு வாங்கியவற்றை எதிர்காலத்தில் நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும். குறைந்த விலைக்கு வாங்கியவற்றையும் எதிர்காலத்தில் நாம் பெற வேண்டியிருக்கும். இதற்குச் சிறிது காலம் ஆகும். இருப்பினும், விலைகள் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்காமல், எதிர்காலத்தில் அதே விலைகளை தக்கவைப்பது அல்லது விலைகளை குறைப்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.    



இந்தத் திட்டத்தின் மூலம் குடிமக்கள் தங்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் அல்லது ஆலோசனைகளை எளிதாகச் சமர்ப்பிக்க முடியும் என்றும், அந்தத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து மக்களை மையமாகக் கொண்ட, மிகவும் திறமையான பொலிஸ் சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தும் போது:


பொதுமக்கள் கருத்து, முறைப்பாடு, பாராட்டு அல்லது ஆலோசனை ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.


தேவைப்பட்டால் தங்களின் தனிப்பட்ட விபரங்களையும் இதில் உள்ளடக்க முடியும்.


அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு வந்ததற்கான காரணம், சம்பவம் அல்லது கருத்து குறித்த விபரங்களையும் இந்த அமைப்பில் உள்ளீடு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


இது தவிர, இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள E-Services பகுதிக்குச் சென்று, அதன் மூலமாகவும் பொதுமக்கள் இந்த 'Community Feedback Portal' தளத்தை அணுகித் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய இடங்களான வரவேற்புப் பிரிவுகள் மற்றும் முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கு அருகில் இந்த QR குறியீட்டுப் பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.


இந்தச் சேவை குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு வழிகாட்டுமாறும் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் -  விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...


இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரித்துள்ளது.


பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் சுங்க மதிப்பை நிர்ணயிக்கும்போது முன்னர் வழங்கப்பட்டு வந்த 15 சதவீத மதிப்பீட்டுக்குறைப்பு நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த தாக்கம் சந்தை முழுவதும் உணரப்படும் என்றும், பிரபலமான வாகன வகைகளின் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் VIASL-இன் துணைத்தலைவரும், செய்தித் தொடர்பாளருமான அரோஷா ரொத்ரிகோ கூறியுள்ளார்.


ஹொண்டா வெசல் Z பிளே SUV போன்றவை வேகமாக விற்பனையாகும் வகை என்றும், அவற்றின் விலை சுமார் 200,000 இலட்சம் வரை உயரக்கூடும், அதே நேரத்தில் சுசுகி வேகன் R-இன் விலை ஏறத்தாழ ரூ. 700,000 வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சுங்க மதிப்பீட்டு முறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று ரொத்ரிகோ கூறியுள்ளார்.


மோட்டார் வாகனங்களின் சுங்க மதிப்பை நிர்ணயிப்பதற்கு இரண்டு தனித்துவமான முறைகளை, 2016 ஜூன் 14 திகதியிட்ட வர்த்தமானி எண் 1971/10 பரிந்துரைக்கிறது என சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


பிரிவு 1(A) புத்தம் புதிய மோட்டார் வாகனங்களுக்கும், பிரிவு 1(B) பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உட்பட மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது.


மேலும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு 15 சதவீத சலுகை வழங்கப்படுவதாகவும், இறக்குமதி விதிமுறைகளின் கீழ் தகுதி பெறுவதற்காக புத்தம் புதிய வாகனங்கள் முதலில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக ஏற்றுமதி செய்யப்படும்போது அரசாங்கம் வருவாய் இழப்பைச் சந்திப்பதாகவும் மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


பெரிய அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் மொத்த கொள்முதல் தள்ளுபடிகள், சில்லறை விலைகளில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள டீலர் லாப வரம்புகள், உள்ளூர் வரிகள் மற்றும் இதர செலவுகள், மற்றும் சர்வதேச வணிகப் பரிவர்த்தனைகளில் பொதுவான வணிக விலை பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் காரணமாக, பட்டியலிடப்பட்ட சில்லறை விலைகள் பெரும்பாலும் இறுதி கொள்முதல் விலையை பிரதிபலிப்பதில்லை என்பதை அமைச்சகம் உணர்ந்திருந்தது.


இந்த குறைப்பை நீக்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்த சங்கம், உயர்ந்த சுங்க மதிப்புகள் இறக்குமதி வரிகள் மற்றும் தீர்வைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும், இது இறுதியில் நுகர்வோருக்கான வாகன விலைகளை உயர்த்தும் என்றும் கூறியுள்ளது.


இந்த முடிவு, வாகனங்களை வாங்கும் திறனிலும் இலங்கையின் வாகன இறக்குமதித் துறையின் மீட்சியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், முடிவை அதிகாரிகள் கவனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது



இலட்சக்கணக்கானோருக்கு அரச வேலைவாய்ப்புகள் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு...


இந்த ஆண்டு 120,000க்கும் மேற்பட்டோர் அரச சேவையில் சேர்க்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.


அரச சேவையை வலுப்படுத்தாமல், நாட்டை கட்டியெழுப்பும் இலக்குகளை அடைய முடியாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்க நிறுவனங்களும் பாடசாலைகளும் அதிக அபாயமுள்ள இடங்களில் உள்ளன என்று பிரதமர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, அரச ஊழியர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான பொருளாதார வலிமையை வழங்குவதற்காக அரசாங்க வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அவர்கள் பதவியேற்றபோது உணர்ந்த மகிழ்ச்சியுடன் ஓய்வுபெறும் வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டி பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, இலங்கை தொழில்நுட்ப சேவையின் மூன்றாம் தர தொழில்நுட்ப அதிகாரி பதவிகளுக்கான 133 நியமனக் கடிதங்கள், அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்டன. 



கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை விடுப்பு....


காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


எனவே, கடற்சார் மற்றும் மீனவச் சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


அத்துடன், கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




 அனைத்து பாடசாலைகளிலும் ......!



No comments

Theme images by fpm. Powered by Blogger.