பாடசாலை சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்...

 பாடசாலை சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்...



பாடசாலை சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்...



 பாடசாலை சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்...


தனமல்வில காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலுத்வெல பகுதியில், 7 வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர்,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

முச்சக்கரவண்டி சாரதியான 46 வயதுடைய குறித்த சந்தேகநபர், நீண்டகாலமாகப் பாடசாலை மாணவர்களைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தி வருபவர். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியும் அதே முச்சக்கரவண்டியில் பாடசாலைக்குச் செல்பவர் ஆவார்.

 

கடந்த ஜூன் மாதம் 03-ஆம் திகதி, பாடசாலை முடிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில், கராஜ் ஒன்றிற்கு   அழைத்துச் சென்று இக்கொடூரச் செயலைச் செய்துள்ளார்.

 

இச்சம்பவம் குறித்துச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

முறைப்பாட்டின் அடிப்படையில், கொவுல்ஆர பகுதியைச் சேர்ந்த குறித்த முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்த காவல்துறையினர், அவரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

அதன்பிறகு, சந்தேகநபரை ஜூலை 16-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, மருத்துவப் பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தணமல்வில தலைமைப் பொலிஸ் பரிசோதகர் டி.எம்.பி. பண்டார தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,000 ஐக் கடந்தது


இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61,060 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 2,604 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

 

மொத்த நோயாளர்களில் அதிகளவானோர், அதாவது 52.50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 32,054 ஆகும்.

 

அதேபோல், தென் மாகாணத்தில் 9,674 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,237 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

மத்திய மாகாணத்தில் 4,823 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,979 நோயாளர்களும், வடமேல் மாகாணத்தில் 2,778 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

 

ஊவா மாகாணத்தில் 1,550 நோயாளர்களும், வடமத்திய மாகாணத்தில் 1,013 நோயாளர்களும், வட மாகாணத்தில் 957 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

மாவட்ட மட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 12,445 ஆகும்.

 

அதேபோல், கம்பஹா மாவட்டத்தில் 12,282 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,428 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

களுத்துறை மாவட்டத்தில் 4,092 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 3,802 நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3,588 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

காலி மாவட்டத்தில் 3,501 நோயாளர்களும், கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்தில் 2,557 நோயாளர்களும், அம்பாந்தோட்டையில் 1,745 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

கேகாலை மாவட்டத்தில் 1,649 நோயாளர்களும், குருணாகலில் 1,629 நோயாளர்களும், மட்டக்களப்பில் 1,220 நோயாளர்களும், புத்தளத்தில் 1,149 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

கல்முனைப் பகுதியில் 784 நோயாளர்களும், மொனராகலையில் 776 நோயாளர்களும், பதுளையில் 774 நோயாளர்களும், யாழ்ப்பாணத்தில் 708 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

இதற்கு மேலதிகமாக, களுத்துறை சுகாதார அறிவியல் நிறுவன அதிகாரப் பிரதேசத்தில் 678 நோயாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 656 நோயாளர்களும், திருகோணமலையில் 563 நோயாளர்களும், அனுராதபுரத்தில் 531 நோயாளர்களும், பொலன்னறுவையில் 482 நோயாளர்களும், அம்பாறையில் 412 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

நுவரெலியா மாவட்டத்தில் 365 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் வவுனியா (94), மன்னார் (64), கிளிநொச்சி (56) மற்றும் முல்லைத்தீவு (35) ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.

 

புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் உள்ள 142 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதி-அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

 

 

 

 

St. Bridget's Convent 125 ஆண்டு கால வரலாற்றுப் பயணம் கோலாகலமாக ஆரம்பம்!


கொழும்பு, புனித பிரிஜட் கன்னியர் மடத்தின் (St. Bridget’s Convent) 125ஆவது ஆண்டு நிறைவு விழா அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, "Shamrock Trail 2026" எனும் விசேட பாதயாத்திரை மற்றும் களியாட்ட நிகழ்வு நேற்று முன்தினம் (04) கோலாகலமாக ஆரம்பமானது.

 

பாடசாலையின் நீண்டகால வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், தற்போதைய மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

 

பாதயாத்திரையானது பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, நகரின் முக்கிய வீதிகள் ஊடாகச் சென்றது. வண்ணமயமான உடைகள், இசைக்குழுக்களின் அணிவகுப்பு மற்றும் பாடசாலையின் அடையாளத்தைப் பறைசாற்றும் சின்னங்களுடன் இந்த நடைபவனி நடைபெற்றது.

 

வழியெங்கும் பாடசாலை கீதங்கள் முழங்க, பங்கேற்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாடசாலையின் 125 ஆண்டு காலப் பயணத்தை நினைவு கூர்ந்தனர்.

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவிகள் ஒன்றுகூடி தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

 

பாதயாத்திரையைத் தொடர்ந்து, கொழும்பு தர்ஸ்டன் மைதானத்தில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

 

 

 

 

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, மோதல் நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

 

நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று இன்று காலை திட்டமிட்டபடி நடத்திய தாக்குதல்களினாலேயே இந்த மோதல் வெடித்துள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் நேரிட்டது.

 

நேற்று (05) சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை நள்ளிரவளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பின்னணியிலேயே, இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சுமார் 1,800-க்கும் அதிகமான குறுகிய காலக் கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே நேற்று பிற்பகல் மோதல் ஏற்பட்டது.

 

அந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 34 பேர் காயமடைந்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்தமை காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

பின்னர், சிறைச்சாலையின் பெண் மற்றும் ஆண் கைதிகள் சிலர் அதன் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அந்தப் போராட்டத்தின் போது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அங்கிருந்து கீழே விழுந்த நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த நேற்று இரவு பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

 

சிறைச்சாலைக்குள் வன்முறையில் ஈடுபட்ட கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை வைத்தியசாலையை உடைத்து மருந்துகளைக் கொள்ளையடித்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

அத்துடன், அங்கிருந்த உடற்பயிற்சிக் கூடத்தின் கதவுகளை உடைத்து, அங்குள்ள இரும்புத் தடிகளையும் வன்முறைச் செயல்களுக்காக அவர்கள் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் ஏற்பட்ட சூழலில் கைதிகள் ஆயுதங்களைக் கவர்ந்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நள்ளிரவிலேயே ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகளை அங்கிருந்து அகற்றியுள்ளனர். இன்று அதிகாலை அமைதியாக இருந்த கைதிகள், காலையில் மீண்டும் திட்டமிட்டபடி சிறைச்சாலை அதிகாரிகளை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி, அவர்களின் அலைபேசிகளைப் பறித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

அதிகாரிகளின் கடுமையான சிறைக்கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

 

இந்த மோதல் ஏற்பட்ட சிறைச்சாலையில் பல்வேறு குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 26 பாதாள உலக உறுப்பினர்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 

இந்த மோதலை சிறையில் தண்டனை அனுபவித்துவரும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவரே வழிநடத்தியதாகப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

 

இவர் 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

 

கூரிய ஆயுதங்களால் தாக்குதல், கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன.

 

2016-ஆம் ஆண்டு நாரம்மல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவரையும் அவரது உதவியாளரையும் தாக்கி, கட்டிவைத்துவிட்டு, தூபிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலும் இவர் மீது வழக்கு உள்ளது.

 

நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர் தற்போது நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

 

 

 

 

 

 

வெனிசுவேலா நிலநடுக்கம் - 3,000 கடந்த உயிரிழப்பு

 

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐக் கடந்துள்ளது.

 

இதுவரை நிலநடுக்கத்தில் உயிரிழந்த 3,342 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 41,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கடந்த ஜூன் 24 அன்று வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.

 

இந்த நிலநடுக்கங்களால் காயமடைந்த 16,000-க்கும் மேற்பட்டோர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 

 


நீர்கொழும்பு சிறைக் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான .சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

 





QR குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!


நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் , பெற்றோலியக் கூட்டுத்தாபன த்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில் இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

நாட்டில் எதிர்காலத்திலும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய விநியோக முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

 

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. எனவே மறுஅறிவித்தல் வரை தற்போதைய ஒதுக்கீட்டு எல்லைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 பாடசாலை சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்...

 

 


No comments

Theme images by fpm. Powered by Blogger.