இலங்கையில் உயர் ஆபத்துமிக்க காலகட்டம்!
இலங்கையில் உயர் ஆபத்துமிக்க
காலகட்டம்!

இலங்கையில் உயர் ஆபத்துமிக்க
காலகட்டம்!
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை உள்ள காலம் உயர் ஆபத்துமிக்க கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெங்கு பரவும் அபாயம் அடுத்த 3 வாரங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டெங்கு பரவல் தற்போது ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
பல மாவட்டங்களில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மூன்று மாவட்டங்கள் தொடர்ந்து கவலைக்குரியவையாக உள்ளது. அவற்றுக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
நிலவும் மழைக்காலச் சூழல் காரணமாக புதிய நுளம்பு குடம்பிகள் உருவாகும் என்பதால், பொது மற்றும் தனியார் இடங்களைத் தொடர்ச்சியாகத் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
புதுப்பிக்கத்தக்க
சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (22) நிறைவடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்தக்
கருத்துக்களின் அடிப்படையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கான புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டணங்கள் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை
மின்சாரச் சீர்திருத்தச் சட்டத்தின்படி, புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையின் தொடர்ச்சி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும்போது, அதற்குரிய விலை மற்றும் விலை சூத்திரத்தைத் தீர்மானிக்கும் மற்றும் அங்கீகரிக்கும் அதிகாரம் இலங்கை பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
சூரிய, காற்று மற்றும் பயோமாஸ் (Biomass) போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான பொருத்தமான விலை சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜயநாத் ஹேரத் குறிப்பிட்டார்.
அந்த
விலை சூத்திரங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களைத் தீர்மானிப்பது தொடர்பில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் ஆலோசனைச் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு பிணை
2008 ஆம்
ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னர்
பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதனைத்
தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்குத் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததை அடுத்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.
அதன்பின்னர்,
இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,000 ஐத் தாண்டியது
நாட்டில்
இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு
கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
நேற்று (21) ஒரே நாளில் 1,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேசிய
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் உள்ள 162 மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த
சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி காணப்படுவதுடன், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன்
மாதத்தில் 21,535 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் கடந்த 21 நாட்களில் மட்டும் 22,749 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்த
ஆண்டில் டெங்கு நோய் காரணமாக 56 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.
மாகாண
மட்டத்தில் அவதானிக்கும் போது, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.78% ஆகும் (41,236 நோயாளர்கள்).
தென்
மாகாணத்தில் 11,950 நோயாளர்களும் (15.30%), மத்திய மாகாணத்தில் 6,603 நோயாளர்களும் (8.45%) பதிவாகியுள்ளனர்.
மாவட்ட
மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 16,478 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன்,
கொழும்பு மாவட்டத்தில் 15,540 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவற்றைத்
தவிர, மாத்தறை மாவட்டத்தில் 5,454 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,228 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 5,135 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
பொதுமக்கள்
தங்களைச் சுற்றியுள்ள வளாகங்களைப் சுத்தமாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்: தென் மாகாணத்தில் தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு
இரண்டாம்
தவணைப் பரீட்சைகளின் அடிப்படையில் , இன்று (22) நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு புவியியல் மற்றும் குடியுரிமைக் கல்வி வினாத்தாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத்
பரீட்சை ஜூலை 24 ஆம் திகதி நடைபெறும் என்று தெற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அச்சிடும்
பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சம்பந்தப்பட்ட கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வினாத்தாள்களை விநியோகிக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த
மாற்றம் குறித்து அனைத்து அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரின்
விற்பனை
விலை
அதிகரிப்பு
: மத்திய
வங்கி
வெளியிட்ட
இன்றைய
நிலவரம்
இலங்கை
மத்திய வங்கியினால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
அதன்படி,
இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 341.04 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று
(21) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340.94 ஆக காணப்பட்டது.
வெளிநாட்டு
நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள்
தெரிவிக்கின்றனர்.
No comments