உயர்தரப் பரீட்சை தொடர்பான விஷேட அறிவித்தல்....
உயர்தரப் பரீட்சை தொடர்பான விஷேட அறிவித்தல்....

அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை,
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை விரிவாகப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர்கள் குழு ஒன்றினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரத்தப் பரிசோதனை (FBC) ஒன்றுக்கான அதிகபட்ச கட்டணமான 400 ரூபாய்க்கு பதிலாக
550 ரூபாய்
அறவிட்ட யாழ் தனியார் வைத்திய ஆய்வுகூடமொன்றுக்கு
30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது...!
தனியார்
வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில வைத்திய பரிசோதனைகளுக்கான,
அதிகபட்சக்
கட்டணங்களை மீறி கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனியார் வைத்திய ஆய்வுகூடமொன்றுக்கு,
யாழ்ப்பாண
நீதவான் நீதிமன்றம் 30 இலட்சம் ரூபாய் (3 மில்லியன் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
பாவனையாளர்
அலுவல்கள் அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்சக் கட்டணத்தின்படி,
முழுமையான
இரத்தப் பரிசோதனை (FBC) ஒன்றுக்கான அதிகபட்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும்.
எனினும்,
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இயங்கும் குறித்த தனியார் நிறுவனம் இதற்காக.
தனியார்
வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில வைத்திய பரிசோதனைகளுக்கான,
அதிகபட்சக்
கட்டணங்களை மீறி கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனியார் வைத்திய ஆய்வுகூடமொன்றுக்கு,
யாழ்ப்பாண
நீதவான் நீதிமன்றம் 30 இலட்சம் ரூபாய் (3 மில்லியன் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
பாவனையாளர்
அலுவல்கள் அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்சக் கட்டணத்தின்படி,
முழுமையான
இரத்தப் பரிசோதனை (FBC) ஒன்றுக்கான அதிகபட்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும்.
எனினும்,
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இயங்கும் குறித்த தனியார் நிறுவனம் இதற்காக 550 ரூபாய் அறவிட்டது விசேட சுற்றிவளைப்பின்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து,
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
விசாரணையின்போது
பிரதிவாதி நிறுவனம் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து,
நீதிமன்றம்
3 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்ததுடன்,
நிறுவனத்தின்
சொந்தச் செலவில் பிரதான நாளிதழ்களில் மன்னிப்பு அறிவிப்பை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.
தனியார்
வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெறும் பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்,
பணம்
செலுத்தும் ஒவ்வொரு முறையும் உரிய பற்றுசீட்டை பெற்றுக்கொள்வது நுகர்வோர் உரிமை என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட
அதிகபட்சக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில்,
அலுவலக
நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மடவளையில் வாடகைக்கு தங்கும் விடுதியில்
சுமார்
4 கிலோ தங்கத்துடன் சிக்கிய கொழும்பு பிரதேச நபர்கள்
சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகின..!
கண்டி,
வத்தேகம – மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது
செய்யப்பட்டவர்களிடமிருந்து
3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் பாளங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில்,
அவற்றுள்
ஒரு தங்கம் பாளம் மாத்திரம் சுமார் 1 கிலோ 500 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்,
இவர்களிடமிருந்து 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தத்
தங்கத் தொகையானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு
– கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள குறித்த சந்தேக நபர்கள்,
மடவளை
தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
செய்யப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள தங்கத் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின்போது காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனினும்,
கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களையும், அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை.
தாங்கள்
தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும்,
அது
தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன்,
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொலிஸார் எந்தவொரு விசாரணைக்காகவும் பொதுமக்களிடமிருந்து பணத்தை அறவிடுவதில்லை
யாராவது பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியோ
தங்களைப்
பொலிஸ் அதிகாரிகளாகப் போலியாக அடையாளப்படுத்தியோ
பண
மோசடி செய்யபார்த்தால் உடனடியாக 0112 300 756 இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்..!
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
இலங்கையின்
நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கருத்துத் தெரிவித்தார்.
இதற்கமைய,
கொழும்பு நகரை மையமாகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் 122 பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
அத்துடன்,
ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த ஆண்டிற்குள் மேலும் 50 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என
எதிர்பார்க்கப்படுவதுடன்,
அடுத்த ஆண்டில் மேலும் 100 பேருந்துகளைச் சேவையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின்
நகர்ப்புற போக்குவரத்தை முழுமையாகத் தாழ் தளப் பேருந்துகள் எனப்படும் 'மெட்ரோ பேருந்துகள்' மூலம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும். இந்தத் திட்டத்தின் கீழ், 2029ஆம் ஆண்டளவில் தாழ் தளப் பேருந்துகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
இந்தப்
போக்குவரத்துத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காகத் தனியார் துறை, மாநகரசபைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds)
ஆகியவற்றையும் இத்துறையில் முதலீடு செய்து பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,
வருகின்ற 2032 அல்லது 2035ஆம் ஆண்டளவில் இலங்கையின் முழுமையான நகரப் போக்குவரத்துச் சேவையையும் மெட்ரோ பேருந்துகள் மூலமாகவே முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2022 ஆம்
ஆண்டு ' அரகலய' போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்ற இளைஞரைக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக, அக்காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய
தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அநுருத்த
பண்டார என்ற குறித்த இளைஞனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணை செய்ததன் பின்னரே,உயர் நீதிமன்றம் இன்று (23) இந்த தீர்ப்பை வௌியிட்டுள்ளது.
மடவளையில் 500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர் - பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள்!
கண்டி,
வத்தேகம - மடவளை
பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது
செய்யப்பட்டவர்களிடமிருந்து
3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் பாளங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் ஒரு தங்கம் பாளம் மாத்திரம் சுமார் 1 கிலோ 500 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்,
இவர்களிடமிருந்து 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தத்
தங்கத் தொகையானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொழும்பு
- கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள குறித்த சந்தேக நபர்கள், வத்தேகமவிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
செய்யப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள தங்கத் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின்போது காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனினும்,
கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. தாங்கள் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மத்திய
மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்தினாயக்க மற்றும் மத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் சுதத் மாசிங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் வத்தேகம காவல்துறையினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன்,
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாட்டில் வெப்பம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில்
நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி,
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டம்
வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிக
வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு மற்றும் அசௌகரியங்கள் குறித்து பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது
No comments