உயர்தர பரீட்சை...
உயர்தர பரீட்சை...

உயர்தர பரீட்சை...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 க்கான நிகழ்நிலை (Online) அனுமதி அட்டை திருத்தம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அடுத்த மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2532 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் தற்போது அந்தந்த பாடசாலைகள் சார்ந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தம் இருப்பின், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று, அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி கணக்கில் நுழைந்து உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பரீட்சை தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 அவசர அழைப்பு இலக்கம், 0112784208 அல்லது 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளலாம்.
ரூ.14.8 மில்லியன் மதிப்பிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இளைஞர் கைது
சுமார்
14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர்
மொனராகலையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்
தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று (27) காலை 9.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளார்.
விமான
நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரது பயணப் பையைச் சோதனையிட்டபோது, குறித்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த
போதைப்பொருளானது சொஸேஜஸ் வடிவில், மேலே சொக்லேட் பூசப்பட்டு, பிரபல சொக்லேட் நிறுவனத்தின் பெயரைக் கொண்ட பொதிகளில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு...
நீர்கொழும்பு
சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவர்கள்,
"ஹீனட்டியன சுபுன்" எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, "களு மல்லி" எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் "பபா" எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச்
சந்தேகநபர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகள் பேருந்துகளை 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறை ஆய்வு செய்ய நடவடிக்கை
அனைத்துப்
பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீற்றர் தூரம் பயணித்த பின்னர் அவற்றை ஆய்வு செய்வதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதி
பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.
கடந்த
காலங்களில், சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகன தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக நாட்டில் பல விபத்துகள் சம்பவித்துள்ளன.
இவ்வாறான
சூழலில், வாகனக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
இதற்கிடையில்,
புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் தனியார் பேருந்துத் தொழிலை அழிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மெய்வல்லுனர் தெரிவுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இராஜினாமா!
தங்களது
உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதத்தை அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் நேரில் ஒப்படைத்துள்ளனர்
இத்தெரிவுக்குழுவின்
உறுப்பினர்களாக டி.ஏ. தயாரத்ன,
கேர்னல் எம்.கே.பி. ஜயசேகர
மற்றும் ரவி வித்தியாலங்கார ஆகியோர் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 250,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்த ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி கண்டாலும், பாதுகாப்பான நாடுகளுக்கு உயர் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளுக்குத் தொழிலாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, கடந்த ஆண்டில் 143,087 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
அவர்களில் 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் ஆவர்.
இந்தக் காலகட்டத்தில் 50,497 பெண் தொழிலாளர்களும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது.
தற்போது இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இதுவரை அவர்களில் 7,873 பேர் இஸ்ரேலிய வேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 8,000 தொழிலாளர்களைத் தென் கொரியாவிற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் 4,794 பேர் ஏற்கனவே புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.
பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் 73,623 தொழிலாளர்கள் திறன் சார்ந்த பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் 69,494 தொழிலாளர்கள் திறன் சாராத பணிகளுக்காகச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலப்பகுதியில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தர பரீட்சை...
No comments