புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு....

புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பா அறிவிப்பு....




புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு....



புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பா அறிவிப்பு....


2026ஆம் ஆண்டுக்கான .பொ. உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில், மேலதிக வகுப்பு மற்றும் கல்வி செயற்பாடுகளுக்கு எதிராக பரீட்சை ஆணையம் கடுமையான தடைகளை விதித்துள்ளது.

 

இதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை 2,532 மையங்களில் நடைபெறவுள்ள .பொ. உயர்தர பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுவது அல்லது விநியோகிப்பது ஆகியவை நேற்று(04.08.2026) நள்ளிரவு முதல் தேர்வு முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளன.

 

அதே போன்று, பரீட்சை மாதிரியான கேள்விகளை வழங்குவதாகக் கூறும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்டவைகளை ஊடகங்களை வெளியிடுவதும் அல்லது வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 9 அன்று 2,723 மையங்களில் நடைபெறவுள்ள 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி செயற்பாடுகளுக்கு இன்று(05.08.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது தரப்பினரும் 1968 ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் சட்டம் எண் 25இன் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை ஆணையகத்திற்கு தெரியப்படுத்தலாம்.

 

இதன்படி, முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகம்: 0112421111 பொலிஸ் அவசர எண்: 119 பரீட்சை ஆணையம் அவசர உதவி எண்: 1911 பள்ளித் தேர்வுகள் அமைப்பு மற்றும் முடிவுகள் பிரிவு: 0112784208 / 0112784537 ஆகிய எண்களுக்கு அழைப்பை மேற்கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.






இலங்கையில் 24 இணையதளங்கள் முடக்கம் (Block)…

இலங்கையில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த 24 இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய இணையதளங்களை (Online gambling and betting websites) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முடக்குவதற்கு,

 

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நடவடிக்கை எடுத்துள்ளது.

 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டு ஒழுங்குமுறை அதிகாரசபையினால் செய்யப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே,

 

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 

2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டு ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின்படி,

 

செல்லுபடியாகும் உரிமங்களைப் பெறாமல் இணையவழி சூதாட்ட சேவைகளை நடத்துவதும் விளம்பரப்படுத்துவதும் அச்சத்துறையின் 44 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.இலங்கை செய்திகள்

 

இலங்கை அரசியல்

அதற்கமைய, குறித்த சட்டவிரோத இணையதளங்களை நாட்டில் இருந்து அணுகுவதைத் தடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 

நாட்டின் சட்டக் கட்டமைப்பிற்கு முரணாகச் செயல்படும் இத்தகைய அனுமதி பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களில் ஈடுபடுவதையோ அல்லது அவற்றில் பணத்தை முதலீடு செய்வதையோ தவிர்க்குமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு என்பன பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளன.

 

முடக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியல்:

1. 1xbet.com

2. betway.com/en-lk

3. 22bet.com

4. melbet.com

5. unibet.com

6. betfair.com

7. dafabet.com

8. bet365.com

9. 1win.com

10. spinbetter.com

11. 10cric.com

12. bc.game

13. megapari.com

14. pin-up.bet

15. stake.com

16. mostbet.com

17. parimatch.com

18. betwinner.com

19. linebet.com

20. 4rabet.com

21. rajabets.com

22. dbbet.com

23. coldbet.com

24. WinWin

 

 

 

 

இன்று முதல் மழை மற்றும் காற்று அதிகரிக்கும்

தற்போது தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக,

 

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்று (6) ஆம் திகதி முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி, மேல் மற்றும் சபாரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொணராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள,

 

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

 

 

தடை செய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.

 

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (5) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆட்களைச் சேர்க்கும் அடிப்படையிலான திட்டங்கள் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமற்ற அதீத இலாபத்தை வழங்கும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும்,

 

இது தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, எவ்வித முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் குறித்த முதலீட்டு வாய்ப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையைப் பொதுமக்கள் கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் பின்வருமாறு,

 

Tiens Lanka Health Care (Pvt) Ltd

Best Life International (Pvt) Ltd

Mark – Wo International (Pvt) Ltd

V M L International (Pvt) Ltd

Global Lifestyle Lanka (Pvt) Ltd

Fast3Cycle International (Pvt) Ltd

Sport Chain App and Sport Chain ZS Society Sri Lanka

OnmaxDT

MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group

Fastwin (Pvt) Ltd

Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd

Ride to Three Freedom (Pvt) Ltd

Qnet / Questnet

Era Miracle (Pvt) Ltd and Genesis Business School

Ledger Block

Isimaga International (Pvt) Ltd

Beecoin App and Sunbird Foundation

Windex Trading

The Enrich Life (Pvt) Ltd

Smart Win Entrepreneur (Pvt) Ltd

Net Fore International (Pvt) Ltd / Netrrix

Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd

SGO / sgomine.com

I.C.A.N. Advertising (Pvt) Ltd and its affiliated platforms

Infinity Rover (Pvt) Ltd

TM App

  

 

 

 

சீரற்ற வானிலையால் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு....

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

அந்த நிலையம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த அனர்த்தத்தினால் 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அங்கு 1,912 குடும்பங்களைச் சேர்ந்த 7,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 மரணங்களும் பதிவாகியுள்ளன.

 

புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா ஒரு மரணம் வீதம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, சீரற்ற வானிலையால் இதுவரை மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அனர்த்த நிலைமையினால் ஒரு வீடு முழுமையாகவும், 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 383 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இந்தத் தரவுகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

காற்று மாசுபாட்டால் நாட்டில் ஆண்டுதோறும் 7,000 மரணங்கள் பதிவு...

காற்று மாசுபாட்டின் விளைவாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள் பதிவாகின்றன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சந்தனி விதானா இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

 

உலகளவில் ஆண்டுதோறும் 7 முதல் 8 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டால் மரணமடைவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையிலும் இந்தப் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாக எச்சரித்துள்ளார்.

 

காற்றில் காணப்படும் மிக நுண்ணிய தீங்கு விளைவிக்கும் துகள்கள் சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் நுழைந்து, பின்னர் இரத்த ஓட்டத்திலும் கலக்கக்கூடும் என்றும், இதனால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட நுரையீரல் நோய்கள், மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

 

மேலும், வீடுகளுக்குள் ஏற்படும் காற்று மாசுபாடு வெளிப்புறக் காற்று மாசுபாட்டைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

குறிப்பாக விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளை காற்றோட்டம் இல்லாத மூடிய இடங்களில் பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் புகை தேங்கி, பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

 

 புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு....

No comments

Theme images by fpm. Powered by Blogger.