புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக...
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக...
இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.
பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
இலங்கையின்
முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின்
டிஜிட்டல் மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விரிவாக விளக்கமளித்தனர்.
இதன்போது,
டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ஆய்வு செய்ததுடன், அதற்குத் தேவையான முதற்கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின்
பரந்த டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் உட்பட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
நடப்பு
அரசாங்கம், எதிர்பார்த்ததை விட விரைவாக வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பைக் கட்டியெழுப்பியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
"இலங்கை
தற்போது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களையே கையிருப்பாகக் கொண்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது இந்த கையிருப்பு 15 பில்லியன்களாக இருக்க வேண்டும். எனவே அரசாங்கம் இன்னும் 9 பில்லியன் டொலர்களை கையிருப்பாகக் கொண்டுவர வேண்டும்; இல்லையேல் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்" என்று ரணிலும் கம்மன்பிலவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும்
இதனை மறுத்து, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதார
நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இறக்குமதித் தடைகளைத் தளர்த்துதல் ஆகியவற்றுடன், இலங்கை தனது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை எதிர்பார்த்ததை விட விரைவாகக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை
அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கணிக்கப்பட்ட கையிருப்பு இலக்குகளை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022 மற்றும்
2023 ஆம் ஆண்டுகளில் வாகன இறக்குமதிக்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனினும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கம் பின்னர் அந்தத் தடைகளைத் தளர்த்த முடிவு செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி,
தற்போது சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நாணயக் கடிதங்கள் (Letters of
Credit - LC) திறக்கப்பட்டுள்ளன.
அந்த வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டிராவிட்டால்,
இலங்கையின் கையிருப்பு மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும்.
இருப்பினும்,
வெளிநாட்டு கையிருப்பைச் சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பராமரிக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.
இந்த
நிலையில், வெளிநாட்டு கையிருப்பு நிலையை மீண்டும் கட்டியெழுப்பும் அதேவேளையில், இலங்கை தனது வெளிநாட்டுக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.
எரிபொருள்
இறக்குமதியும் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எரிபொருள் இறக்குமதிக்காகக் கணிசமான அளவு கையிருப்பு வெளியேறுகிறது; இவை தவிர்க்க முடியாத செலவுகளாகும்.
இதன்
காரணமாக, பொருளாதாரச் செயல்திறனை அளவிடும் ஒரே அளவுகோலாக மட்டும் பார்க்காமல், வெளிநாட்டு கையிருப்புகளை முதன்மையாக ஒரு பாதுகாப்பு அரணாகப் பார்க்க வேண்டும் என அனில் ஜயந்த
வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரச்
செயற்பாடுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதேவேளையில், வளர்ச்சியைக் குன்றச் செய்யாமல் இந்த பாதுகாப்பு அரணை அரசாங்கம் கட்டியெழுப்பி வருகிறது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிகர
வெளிநாட்டு கையிருப்பின் வளர்ச்சியே இலங்கையின் முக்கிய இலக்காக உள்ளது. இதன்படி, விவேகமான மத்திய வங்கி முகாமை மற்றும் நிதித்துறை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கில் முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை
இலங்கையின்
வங்கித் துறையில் கடன் வழங்குவதற்கான விருப்பம் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ள போதிலும், அதன் வளர்ச்சி வேகம் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மந்தமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய கடன் வழங்கல் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
மே
மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல் கொள்கை இறுக்கமாக்கலைத் தொடர்ந்து நிலவும் கடுமையான பணச் சூழலே இதற்கு முக்கிய காரணம் என மத்திய வங்கி
சுட்டிக்காட்டியுள்ளது.
அனுமதிபெற்ற
வர்த்தக வங்கிகள் மற்றும் சிறப்பு வங்கிகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, சில்லறை, பெருநிறுவனம் (Corporate), சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (ஆகிய நான்கு துறைகளிலும் கடன் வழங்குவதற்கான வங்கிகளின் ஆர்வம் இரண்டாம் காலாண்டில் உயர்ந்துள்ளது.
பொருளாதார
நிலைமைகளின் முன்னேற்றம், கொள்கை ஸ்திரத்தன்மை, சிறந்த திரவத்தன்மை (Liquidity) மற்றும் சொத்துக்களின் தரம் உயர்வடைந்தமை ஆகியன இதற்கு பிரதான காரணங்களாகும்.
அத்துடன்,
மூன்றாம் காலாண்டிலும் கடன் வழங்கும் விருப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பணவீக்க அழுத்தம், செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு, மாற்று விகித நிலையற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் அநிச்சயங்கள் காரணமாக அதன் வேகம் மந்தமாகவே இருக்கும் என வங்கிகள் கணித்துள்ளன.
மேலும்
அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறைக்கான கடன் வழங்கல் விருப்பம் மூன்றாம் காலாண்டில் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை,
இரண்டாம் காலாண்டில் அனைத்துத் துறைகளிலுமான கடன் தேவை அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் நடைமுறை மூலதனத் தேவைகள், குறுகிய காலக் கடன்களுக்கான தேவை மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டமை ஆகியன இதற்கு வழிவகுத்துள்ளன.
விசேடமாக,
மூலோபாய உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கான நிதி வசதிகள் காரணமாக அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறையின் கடன் தேவை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
வங்கித்
துறையின் மொத்த நடைமுறையில்லா கடன்களின் அளவு (அசல் அல்லது வட்டித் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பச் செலுத்தத் தவறிய கடன்கள்) இரண்டாம் காலாண்டில் ஒட்டுமொத்தமாகக் குறைவடைந்துள்ளது.
சில்லறைத்
துறையின் இந்த கடன் நிலைமை சீரடைந்தமையே இதற்கு பிரதான காரணமெனினும், பெருநிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனத் துறைகளில் மொத்த நடைமுறையில்லா கடன்களின் அளவு அதிகரித்துள்ளது.
நாணய
மாற்று விகித வீழ்ச்சியால் ஏற்பட்ட செலவு அழுத்தங்கள் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் வெளிப்புற தாக்கங்களால் கடன் வாங்கியவர்களின் மீளச்செலுத்தும் திறன் பலவீனமடைந்தமையே இதற்கு காரணம் என மத்திய வங்கி
தெரிவித்துள்ளது.
மேலும்,
இரண்டாம் காலாண்டில் வங்கிகளின் கடன் விண்ணப்ப நிராகரிப்பு விகிதம் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது.
பெருநிறுவனம்
மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை குறைந்தமையே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், கடுமையான கடன் மதிப்பீடு மற்றும் இடர் முகாமை அளவுகோல்கள் காரணமாக சில்லறை மற்றும் சிறு, நடுத்தர தொழில்முயற்சி துறைகளில் கடன் விண்ணப்ப நிராகரிப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
விசா விண்ணப்பங்கள் குறித்து அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!
குழந்தைக்கு
அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத்
தூதரகம் எச்சரித்துள்ளது.
இது
தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர்
(Consular) அதிகாரிகள்
கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.
இவ்வாறான
நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும், இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
நாட்டின்
பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல்
மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். அதேவேளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னராக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும்,
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன்
கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியருக்கு பிணை வழங்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
இந்திய
நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருவருக்கு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அடையாளம்
தெரியாத நபர் ஒருவருக்குப் பிணை வழங்குவதற்காகப் பணம் பெற்றது, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹ_சைன் மொஹமத்
மற்றும் ஹசித் மொஹமத் ஆகிய இருவர் மீதே நீண்ட விசாரணையின் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்தநிலையில்
சந்தேகநபர்கள் தரப்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை.
இதன்போது.
தமக்கு நீதி வழங்குமாறு அவர்கள் கோரியதுடன், தனக்கு ஒரு சிறிய குழந்தை உள்ளதையும் கருத்தில் கொள்ளுமாறு முதலாவது சந்தேகநபர் கோரிக்கை விடுத்தார்.
எனினும்,பணத்திற்காகப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை வழங்குவோருக்கு சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் வகையில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மோசடி விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரினர்.
இந்தநிலையில்,
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்திற்கொண்ட பிரதான நீதிவான், இரு குற்றவாளிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். எனினும், குற்றவாளிகள் ஏற்கனவே ஆறு மாதங்கள் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியை அவர்களது தண்டனைக்காலத்திலிருந்து கழித்துக் கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.
No comments