AI மூலம் சிறுவர்களுக்கு அதிகரிக்கும்...

AI மூலம் சிறுவர்களுக்கு

அதிகரிக்கும்...



AI மூலம் சிறுவர்களுக்கு அதிகரிக்கும் இணைய அச்சுறுத்தல்…



 

AI மூலம் சிறுவர்களுக்கு

அதிகரிக்கும்...


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர்களின் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் காணொளிகள் (AI-generated Child Sexual Abuse Material – CSAM), சிறுவர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

முன்னைய காலங்களில் இணையத்தில் பரப்பப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அல்லது காணொளிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நிழற்படங்களைக் கொண்டிருந்தன.

 

எனினும், தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு சிறுவனின் அல்லது சிறுமியின் சாதாரண புகைப்படத்தைப் பயன்படுத்தி,

 

அவர்கள் நிர்வாணமாகவோ அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவோ தோற்றமளிக்கும் தத்ரூபமான போலிப் படங்களை உருவாக்க முடியும்.

 

இது சிறுவர்களின் தனியுரிமைக்கும் மனநலத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் அறிகுறிகள்

 

இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்கள் ஏதேனும் அச்சுறுத்தல் அல்லது அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், பின்வரும் அறிகுறிகள் தென்படக்கூடும்:

 

கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியைப் பயன்படுத்தும்போது ஒருவர் அருகில் வந்தால், உடனடியாகத் திரையை மூடுவது அல்லது மறைப்பது.

 

சமூக ஊடகக் கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளைத் திடீரெனக் கடுமையாக்குவது அல்லது புதிய கணக்குகளை உருவாக்குவது.

 

குற்ற உணர்வு, கவலை அல்லது மன உளைச்சலுடன் காணப்படுவது; தனிமையில் இருக்க முயற்சிப்பது.

 

பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

 

இணையத்தில் காணப்படும் ஆபத்துகள் மற்றும் அறிமுகமற்ற நபர்களுடன் தொடர்புகொள்வதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து சிறுவர்களுடன் நட்புறவுடன் கலந்துரையாடுங்கள்.

 

சிறுவர்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடும்போது, ‘Public’ என்பதற்குப் பதிலாக ‘Private’ தனியுரிமை அமைப்பைப் பயன்படுத்துங்கள்.

 

தங்களது புகைப்படங்களை அறிமுகமற்ற நபர்களுடன் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்குமாறு சிறுவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

 

சிறுவர்கள் பயன்படுத்தும் இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன்,

 

அவர்களின் இணையப் பயன்பாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான தொழில்நுட்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.

 

சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான முதல் படி விழிப்புணர்வே எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் வேகத்திற்கு ஏற்ப பெற்றோர்களும் தமது அறிவைப் புதுப்பித்துக்கொண்டு, சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது





இலங்கையில் 80% மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம்


இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும்,

 

அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்த இரு நோய்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்வதன் மூலம் ஒருவரது ஆரோக்கியத்தில் பல தீவிர சிக்கல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர்,

 

இதன் மிகக் கொடூரமான விளைவு மாரடைப்பு ஏற்படுவதாகும் என்றும் வலியுறுத்தினார்.

 

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இதய சிகிச்சை வளாகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் (16.09.2026) பிற்பகல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க,

 

நமது நாட்டில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணமாகின்றன.

 

இவ்வாறு உயிரிழக்கும் 80% பேரில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளன. இவற்றை நாம் 'NCDs' (தொற்றா நோய்கள்) என அழைக்கிறோம்.

 

இதில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், இந்த இரண்டு நோய்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு, ஒருவரது ஆரோக்கியத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாகும்.

 

இலங்கையின் தற்போதைய நிலைமையைப் பார்த்தால், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50% மட்டுமே பயனுள்ள கட்டுப்பாட்டில் உள்ளனர்.

 

அதேபோல், நீரிழிவு நோயாளிகளில் 25% போன்ற சிறிய சதவீதத்தினரே சரியான கட்டுப்பாட்டில் உள்ளனர்.

 

இந்த நிலைமையினாலேயே இன்று இது சமூகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

 

இந்த இரண்டு நோய்களினதும் மிக மோசமான சிக்கல் 'MI' அல்லது மாரடைப்பு ஏற்படுவதாகும். பிரதான சிக்கலாக மாறுவதும் இதுவேயாகும்.

 

அப்படியென்றால், இந்த நவீன தொற்றுநோயை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது? நமது முன் உள்ள மிகப்பெரிய சவால் இதுவேயாகும்.

 

நாடு முழுவதும் நவீன வசதிகளை ஏற்படுத்துவதுடன், நமது சுகாதார அமைப்பானது நாட்டின் மக்கள் தொகை வடிவமைப்பு மற்றும் நோய் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடையாளம் காண வேண்டியிருந்தது.

 

அதற்கேற்ப, நமது சுகாதார அமைப்பையும் அதற்கு ஏற்ற நடைமுறைகளுக்கு மாற்றியமைக்க வேண்டும்.

 

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய, சுகாதார அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவது இத்தகைய ஒரு பாரிய வேலைத்திட்டமாகும்.

 

இதில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. ஆரோக்கியா (Arogya), கொத்தணி அமைப்புகள் மற்றும் உயர்நிலை பராமரிப்பு நிறுவனங்கள் ஆகிய மூன்றையும் நமது சுகாதார அமைப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பது எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

 


 

 

வீட்டில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியை கவனமாக பயன்படுத்துங்கள்

 

குளிர்சாதனப் பெட்டியில் மின் கோளாறு, சேதமான வயர், வாயு கசிவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

 

குறிப்பாக சேதமடைந்த மின் வயர்களை அலட்சியப்படுத்தக் கூடாது.

 

மேலும், ஒரே மின் இணைப்பில் பல சாதனங்களை இணைப்பதையும், உறைந்த பனியை கத்தியால்

 

அகற்றுவதையும் தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியை சுவருடன் மிகவும் நெருக்கமாக வைக்காமல், போதிய காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.

 

Plug சூடாகுதல், எரிந்த வாசனை, வழக்கத்திற்கு மாறான சத்தம் அல்லது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால்,

 

தொடர்ந்து பயன்படுத்தாமல் தகுதியான நிபுணரிடம் பரிசோதனை செய்வது பாதுகாப்பானது.

 

 

 

 

9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம்

போதைப்பொருள் உட்கொள்வதற்காக தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய யாழ்ப்பாணம், அச்சுவேலிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மகன்,

 

தாய் பணம் தராததால் கோபமடைந்து, கடந்த 14ஆம் திகதி தாயை தடியால் அடித்துக் கொன்றுள்ளார்.

 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அச்சுவேலி புத்தூர் மேற்கு, சிவ தேவாலய வீதியில் வசித்து வந்த 74 வயதுடைய பெண் ஆவார்.

 

இவரது மகன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று, கடந்த .பொ. சாதாரண தரப் பரீட்சையில் (G.C.E. O/L) 9 ‘A’ சித்திகளைப் பெற்ற திறமையான மாணவனாவார்.

 

பாடசாலைக் காலத்தில் போதைப்பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவனையும் அவனது இரு நண்பர்களையும் அதிபர் பாடசாலையிலிருந்து நீக்கியிருந்தார்.

 

எனினும், போதைப்பொருளுக்கு அடிமையான இம்மாணவன் வழக்கமாக தாயிடம் பணம் பெற்று போதைப்பொருள் உட்கொண்டு வந்த நிலையில்,

 

சம்பவத்தன்று தாய் பணம் தராததால் அவரை தடியால் தாக்கி கொலை செய்துள்ளான்.

 

தாய் வாழ்வதற்காக வெளிநாடுகளில் உள்ள ஏனைய பிள்ளைகள் பணம் அனுப்பி வந்துள்ளதாகவும்,

 

அந்தப் பணத்தில் பாதியை இக்கொலைகார மகன் தாயை மிரட்டிப் பெற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது.

 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கல்வியில் உச்சம் தொட்ட மாணவன் காவாலியானது எவ்வாறு?

 

யார் பொறுப்பு?

 

பிள்ளைகள் யாரோடு பழகுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.

 

பிள்ளைகளுடைய ஒவ்வொரு அசைவுகளையும் நாம் உற்று நோக்க வேண்டும்.

 

பல இன்னல்களுக்கு மத்தியில் மகனை படிக்க வைத்த தாய் இன்று மரணப் படுக்கையில்...

 

 

 

 

இனி சமூக ஊடகங்களில் ஆபாச வார்த்தைகள் தூசனங்கள் பின்னூட்டம் Comments செய்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம்

 

இனி சமூக ஊடகங்களில் ஆபாச வார்த்தைகள், தூசனங்கள் அல்லது பொதுவெளிக்கு உகந்தது அல்லாத வகையில் பின்னூட்டம் Comments இடுபவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யலாம்.

 

முறைப்பாடு செய்வதற்கு முன் : -

 

பின்னூட்டத்தின் Screenshot எடுக்கவும்.

சம்பந்தப்பட்ட Profile மற்றும் Post URL- சேமிக்கவும்.

 

தேதி, நேரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பதிவு செய்யவும்.

 

பின்னர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாடு அளிக்கலாம்.

 

தேவையானால் Cyber Crime பிரிவுக்கு விசாரணைக்காக அனுப்புமாறு கோரலாம்.

 

அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

 

 

சவுதி அரேபியாவில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு

அதனை இரத்துச்செய்ய தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை,

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனோஜன், சமூக வலைத்தளமான முகநூலில் முஹம்மது நபியை பற்றி அவதூறாக கருத்துப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.நேற்று சவுதி அரேபிய உச்சநீதிமன்றத்தினால், இத் தீர்ப்பு வழங்கப்பட்டமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

 

 

 

பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை

 

பலாங்கொடையில் இருந்து இம்புலாமுர நோக்கி பயணித்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் ஐந்து இலட்சம் பெறுமதியான,

 

தங்கச் சங்கிலியை திருடியதாக கூறப்படும் நான்கு பெண்களை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

திருகோணமலை உப்புவெளி பகுதியில் இருந்து வந்த சந்தேக நபர்கள் தங்கச் சங்கிலி ஒன்றை அணிந்திருந்த பெண்ணின் அருகில் சென்று குழப்பம் ஒன்றை ஏற்படுத்தி,

 

அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை திருடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த பெண் தனது தங்க சங்கிலி காணாமல் போனதை அடுத்த பேருந்தில் கூச்சல் இட்டதை அடுத்து குறித்த நான்கு பெண்களும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

 

பேருந்தில் பயணித்த பயணிகள் 4 பெண்களையும் பிடித்துள்ளதோடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

 

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

 

திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 29,31,56,57, வயதுடைய நான்கு பெண்களே பலாங்கொடை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

 

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



AI மூலம் சிறுவர்களுக்கு அதிகரிக்கும்...



 

No comments

Theme images by fpm. Powered by Blogger.