இரு முகப்பூச்சுக் கிரீம்களுக்கு…
இரு முகப்பூச்சுக் கிரீம்களுக்கு…

குறிப்பிட்ட வரம்பை மீறிய அளவில் கன உலோகங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து,
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரண்டு சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களுக்கு எதிராக இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நாடளாவிய பொதுச் சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Goree Beauty Cream மற்றும் Chandni Whitening Cream ஆகியவை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் என மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அடையாளப்படுத்தியுள்ளது.
செப்டெம்பர் 8ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
இந்த இரண்டு கிரீம்களையும் கொள்வனவு செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவற்றின் விற்பனை, விநியோகம் மற்றும் விளம்பரங்களைத் தடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பரிசோதனையில் கண்டறியப்பட்டவை
CDSCO மேற்கொண்ட பரிசோதனைகளில்:
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்வதற்குத் தேவையான இறக்குமதிப் பதிவுச் சான்றிதழ்கள் பெறப்படவில்லை.
இந்தப் பொருட்கள் நச்சுத்தன்மை உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்த வகையான கன உலோகங்கள் கண்டறியப்பட்டன அல்லது அவற்றின் அளவு என்ன என்பது அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
சிறுநீரகங்களைப் பாதிக்குமா?
சில சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் பாதரசம் போன்ற ஆபத்தான கன உலோகங்கள் காணப்படலாம்.
அவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடும்.
ஆனால், குறித்த இரண்டு கிரீம்களும் சிறுநீரக நோயை நேரடியாக ஏற்படுத்தியதாக CDSCO அறிவிப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
அவற்றால் நச்சுத்தன்மை உள்ளிட்ட உடல்நல ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?
இந்த இரண்டு கிரீம்களையும் கொள்வனவு செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொள்வனவு செய்திருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அழகுசாதனப் பொருட்களை வாங்கும்போது:
தயாரிப்பாளர் மற்றும் உரிமத் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும்.
தொகுதி இலக்கம், தயாரிக்கப்பட்ட திகதி மற்றும் காலாவதித் திகதியைப் பார்க்க வேண்டும்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் பதிவுச் சான்றிதழ் இலக்கம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தெளிவற்ற அல்லது தவறாக வழிநடத்தும் லேபிள்களைக் கொண்ட பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
குறித்த கிரீம்களைப் பயன்படுத்திய பின்னர் தொடர்ச்சியான தோல் எரிச்சல், வீக்கம் அல்லது வழக்கத்திற்கு மாறான நிறமாற்றம் ஏற்பட்டால்,
தயாரிப்பின் பொதியுடன் தோல் மருத்துவரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாறுமாறாக ஓட்டும் பேருந்து சாரதிகளை…
பொலிஸ்
வட்ஸ்அப் (WhatsApp) அவசர உதவி இலக்கம் மூலம் புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வட்ஸ்அப்
இலக்கம் : 070
4755600
கண்காணிப்பு:
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. செனவிரத்னவின்
நேரடி மேற்பார்வையின் கீழ் 24 மணி நேரமும் இது இயக்கப்படுகிறது.
எவற்றைப்
புகாரளிக்கலாம்?
விதிமீறல்களைக்
காட்டும் தெளிவான வீடியோ ஆதாரங்களை (ஸ்மார்ட்போன் கிளிப்புகள் அல்லது டேஷ்கேம் காட்சிகள் போன்றவை) பொதுமக்கள் அனுப்புமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
போதைப்பொருள்
அல்லது மது அருந்திவிட்டு பேருந்துகள் அல்லது வாகனங்களை இயக்குதல்.
அதிக
வேகம் மற்றும் ஆபத்தான முறையில் முந்திச் செல்லுதல்.
சாலைகளின்
நடுவில் திடீரென வாகனத்தை நிறுத்துதல்.
போக்குவரத்து
விளக்குகள் மற்றும் சமிக்ஞைகளைப் புறக்கணித்தல்.
ஆபத்தான
முறையில் வாகனம் ஓட்டுவது போன்ற பொறுப்பற்ற செயல்கள்.
புகாரளிப்பதற்கான
வழிகாட்டுதல்கள்
நீங்கள்
ஒரு விதிமீறலைப் பதிவு செய்து புகார் செய்ய விரும்பினால், பின்வரும் தேவைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்:
தெளிவான
காட்சிகள்: வீடியோவானது பேருந்து இலக்கத் தகடுகள் (Number plates) மற்றும் வழித்தட எண்களை (Route numbers) தெளிவாகக் காட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அத்தியாவசிய
விபரங்கள் : -
திகதி,
சரியான இடம் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவு போன்ற ஆதரவுத் தகவல்களை வழங்கவும்.
உண்மையான
தன்மை:
புனையப்பட்ட
அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை அனுப்புவதை பொலிஸார் கண்டிப்பாகத் தடை செய்துள்ளனர்.
மற்றும்
கனரக வாகன சாரதிகளைச் பரிசோதிக்க நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குப் பெருமளவிலான மதுப் பரிசோதனைக் கருவிகள் (Breathalyzers) விநியோகிக்கப்பட்டுள்ளன.
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு…
செப்டம்பர்
மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இது
தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி,
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியனுக்கும் அதிகமான தொகை (ரூ. 9,181,696,250) வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.
அத்துடன்,
அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தொகை (ரூ. 2,120,856,250) செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே,
இந்த நிதியை பயனாளிகள் நாளை (17) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள்
சபை மேலும் தெரிவித்துள்ளது.
அதிகாலையில் சோகம் – ரயில் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு…
இன்று
(16) காலை 4.30 மணியளவில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி தாயும் அவரது உறவுக்கார மகளும் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம்
நோக்கி ரயிலில் பயணிப்பதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடைக்கு வருவதற்காக ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளனர்.
ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் உறவுக்கார மகள் ஆகியோர் மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதியுள்ளதில்,
தாயும்
உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இம்மூவரும்
அனுராதபுரம் புனித நகரத்தில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்து
கொள்வதற்காக மதுகம பகுதியிலிருந்து வந்துள்ளனர்.
இவர்கள்
ரயில் பாதையின் வழியே மிகவும் கவனக்குறைவாக நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 நாட்களில் மாறும் வானிலை…
இன்னும்
10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
அதன்
பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் உறுதிப்படுத்தினார்.
தற்போது
எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும்,
இனிவரும்
நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
ஒக்டோபர்
மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும்,
இதனால்
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒக்டோபர்
மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால்,
எல்
நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.
இது
குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர்,
சில
வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த
வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து,
மழைவீழ்ச்சி
குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதன்
காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் நாட்டிற்கு கிடைக்கும் மழையை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments