இணையவழி மோசடி ...
இணையவழி மோசடி ...

இணைய
வழியில் பண மோசடி செய்த
சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய,
படுவத்தை
பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெலிகிராம்
குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர் அனுசரணை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன்,
இணையவழி
வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி வைப்புச் செய்யப்பட்ட 542,877 ரூபாயில், 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய,
(18.09.2026) காலை சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.
இணையவழியில்
மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பாக
2024.02.10 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய,
கணினி
குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சம்பவம்
தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருகோணமலை மதுபானசாலை கொள்ளையில் சிக்கிய 54, 61 வயது நபர்கள்…
திருகோணமலை
- அநுராதபுரம் சந்தியிலுள்ள மதுபானசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து,
பணத்தை
கொள்ளையிட்டுச் சென்ற இருவரில் ஒருவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
(18.09.2026) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர்,
உப்புவெளி
பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த, கிளிபுஞ்சிமலை பிரதேசத்திலுள்ள வெடிமருந்து களஞ்சியசாலையில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்கள்
54, 61 வயதுடைய ஹக்மன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து
ரூ. 115,000 பணம், அவர்கள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிள், T56 வகை துப்பாக்கி, அதற்குரிய 29 தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவத்தை
தொடர்ந்து செயற்பட்ட திருகோணமலை பொலிஸார் ஒரு சில மணித்தியாலங்களிலேயே சந்தேகநபர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்கள்
உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தற்காலிக தங்குமிடமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை…
அரசாங்கத்தினால்
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி / பால் பொன்னி அரிசியை விற்பனை செய்த இரத்மலானையிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை,
காலி வீதியில் Belta Super Mart என்ற பெயரில் இயங்கும் Beliatta Exim
Holdings (Pvt) Ltd நிறுவனத்திற்கு
எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
அதிகபட்ச
சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 255 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,
குறித்த
சுப்பர் மார்க்கெட் அதனை 270 ரூபாவுக்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்
குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் 500,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
இறக்குமதி
செய்யப்படும் கீரி பொன்னி அல்லது பால் பொன்னி GR 11 அரிசிக்கான கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாவாக 2025 ஒக்டோபர் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் ஒக்டோபரில் எரிபொருளுக்கான விலைத் திருத்தப்படும்…
எதிர்வரும்
ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை என்றும்,
ஜனாதிபதி,
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அக்குரஸ்ஸயில்
தற்சமயம் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது மாணவன் மின்னல் தாக்கி உயிரிழப்பு…
நிலவிவரும்
தீவிர மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பிரதேசத்தில்,
வீடொன்றின்
அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் மீது,
மின்னல்
தாக்கி உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு
அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தபோது,
வீட்டில்
பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் படுகையில் (Plug Point) பாய்ந்த மின்னல் தாக்குதல் அந்த மாணவனையும் தாக்கியுள்ளது.
இதில்
படுகாயமடைந்த மாணவன் அகலவத்தை பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு நாளை…
ஈஸ்டர்
தாக்குதல் சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டியமை, உதவி ஒத்தாசை புரிந்தமை, உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்,
24 பிரதிவாதிகளுக்கு
எதிராக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நாளை (22) அறிவிக்கப்படவுள்ளது.
நௌஃபர்
மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பில்,
2,309 சாட்சிகள்
சாட்சியமளித்ததுடன்,
தினமும்
இடம்பெற்ற சாட்சி விசாரணைகளின் பின்னர் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சாட்சி விசாரணைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நிறைவடைந்தது.
மேல்நீதிமன்ற
நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தி…
நோர்வூட்
பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில்,
அரசுக்கு
ஏற்பட்டிருக்கக்கூடிய
இழப்பு சுமார் 30 மில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத்
தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடிகளில் மிகப்பெரியதாக இது அமையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறைந்த
வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக,
உயிரிழந்த
வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நோர்வூட்
மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய இந்த மோசடி தொடர்பில் இதுவரை 20 அரச ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்
சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்வூட்
பிரதேச செயலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடியில் சுமார் 30 மில்லியன் ரூபாவும் தலவாக்கலை பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் சுமார் 02 மில்லியன் ரூபாவும் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நலன்புரி
நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு, நோர்வூட் சம்பவம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
எனினும்,
இதுவரை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
தகவலறியும்
உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி,
நோர்வூட்
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 18 அரச ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில்
10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி
நீக்கம் செய்யப்பட்டவர்களில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நான்கு ஊழியர்களும் ஆறு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.
மேலும்,
இரண்டு பெண் அரச ஊழியர்கள் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments