இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருப்பவரா நீங்கள்?

 இரவு நேரங்களில் அதிக நேரம்

 விழித்திருப்பவரா நீங்கள்?




இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருப்பவரா நீங்கள்?




  இரவு நேரங்களில் அதிக நேரம்

 விழித்திருப்பவரா நீங்கள்?


இரவு நேரத்தில் தொடர்ந்து விழித்திருப்பது உடலுக்கும் மனதுக்கும் பல தீமைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

இன்றைய டிஜிட்டல் காலத்தில் பலரும் இரவு 12 மணிக்கு மேலும் தூங்காமல், மொபைல், வேலை, படிப்பு என விழித்திருக்கின்றனர்.

 

இது தற்காலிக பழக்கமாக தெரிந்தாலும், நீண்ட காலத்தில் பெரிய உடல்நல பாதிப்புகளை உருவாக்குகிறது.

 

இரவு விழிப்பால் ஏற்படும் முக்கிய தீமைகள்:

மூளை மற்றும் மனநல பாதிப்பு:

தூக்கம் குறையும்போது நினைவாற்றல், கவனம் செலுத்தும் திறன் குறைகிறது.

தொடர்ந்து தூக்கமின்மை மன அழுத்தம், எரிச்சல், பதற்றத்தை அதிகரிக்கும்.

 

 உடல் எடை அதிகரிப்பு:

இரவில் விழித்திருப்பது பசி ஹார்மோன்களை (Hunger hormones) மாற்றுகிறது.

இதனால் அதிகமாக சாப்பிட தோன்றும், குறிப்பாக இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் மீது நாட்டம் வரும்.

 

 இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு:

சரியான தூக்கம் இல்லாதபோது இரத்த அழுத்தம் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகள் எளிதில் வரும்.

 

ஹார்மோன் சமநிலை பாதிப்பு:

இரவில் தான் உடல் தன்னை சரிசெய்து கொள்ளும் ஹார்மோன்களை சுரக்கிறது.

விழித்திருப்பதால் இந்த செயல்பாடு தடைபட்டு, தோல் பொலிவிழப்பு, முடி உதிர்வு, சோர்வு ஏற்படும்.

 

 கண் மற்றும் செரிமான பிரச்சனை:

இரவில் திரை வெளிச்சத்தை அதிகம் பார்ப்பது கண் வலி, தலைவலியை உண்டாக்கும்.

செரிமானமும் சீர்கெடும்.

 

 நிபுணர்கள் கூறுவது:

தினமும் இரவு 10:30 முதல் 11:30 க்குள் தூங்கி, 7 முதல் 8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்வது அவசியம்.

தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மொபைல் பயன்பாட்டை நிறுத்துவது நல்ல தூக்கத்திற்கு உதவும்.





சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த…

 

இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு - இரு பெண்கள் கைது

 

நீதிமன்ற வளாக சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் தீவிர விசாரணை.

 

சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை ரூபாய் பெறுமதியுடைய,

 

அமெரிக்க டொலர்களை   திருடிய குற்றச்சாட்டின் பேரில்  இரு பெண்கள் சம்மாந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்காக இந்தியா – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர்   வியாழக்கிழமை (24) வருகை தந்திருந்தனர்.

 

வழக்கு விசாரணையின் போது நீதவான் கோரிய சான்றாதாரத்தைக் காட்டுவதற்காக  நீதிமன்றிற்குள் நுழைவதற்கு முன்னர் கைத்தொலைபேசிகளை ஒப்படைத்து வைத்திருந்த இடத்திற்கு இந்தியப் பிரஜை ஒருவர் சென்றுள்ளார்.

 

அங்குத் தனது கைத்தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட போது தான் கையில் வைத்திருந்த சுமார் 31 இலட்சம் இலங்கை ரூபாவிற்கும் அதிகமான அமெரிக்க டொலர் பணத்தைக் கொண்ட கடித உறையை அங்கே தவறுதலாக மறந்து வைத்துவிட்டு நீதிமன்றத்திற்கு  திரும்பியுள்ளார்.

 

குறித்த வழக்கு முடிவடைந்த பின்னர் கடித உறை ஞாபகத்திற்கு வரவே  உடனடியாகத் தொலைபேசியைப் பெற்ற உணவகப் பகுதிக்குச் சென்று தேடியுள்ளார்.

 

எனினும்  அங்குப் பணத்துடன் கூடிய கடித உறை காணப்படவில்லை.

 

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன் சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

 

முறைப்பாட்டிற்கு அமைவாக உடனடியாகச் செயற்பட்ட சம்மாந்துறைப் பொலிஸார்  அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இரு பெண் சந்தேக நபர்களைக் கைது செய்து,

 

மேலதிக விசாரணைக்காகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

 

அத்துடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) காணொளிக் காட்சிகளின் உதவியுடன் காணாமல்போன பணப்பையைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

ஒக்டோபர், நவம்பரில் வெள்ள அபாயம்…

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

வங்காள விரிகுடாவில் ஏற்படும் வானிலைச் செயற்பாடுகளுடன்,

 

இவ்விரு மாதங்களிலும் பொதுவாக வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால்,

 

மழையின் தீவிரத்தைப் பொறுத்து வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகள் தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்.

 

செப்டெம்பர் 28–29 முதல் பிற்பகல் இடியுடன் கூடிய மழையும் சில பகுதிகளில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.

 

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

 

சில கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், அலைகள் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் கடலோர மக்கள் மற்றும் மீனவ,

 

கடற்படை சமூகங்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு…

 

இவ்வாண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி,

 

இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 99,634 ஆகும்,

 

அதேவேளையில் மரண விகிதம் 0.077% ஆகப் பதிவாகியுள்ளது.

 

மேலும், மொத்த நோயாளர்களில் 52.53% மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 52,340 ஆகும்.

 

மாவட்ட மட்டத்தில் பார்க்கும்போது, அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 21,136 ஆகும்.

 

இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 19,569 நோயாளர்களும், கண்டியில் 7,547 நோயாளர்களும், களுத்துறையில் 6,339 நோயாளர்களும் மற்றும் மாத்தறையில் 6,273 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

இதற்கிடையில், ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

 

மேலும் ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

செப்டம்பர் மாதத்தில் இதுவரை 4,144 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

37 மருத்துவ அதிகார பிரிவுகள் தொடர்ந்து டெங்கு அதிஅபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன்,

 

நுளம்புகள் பெருக்கமடையும் இடங்களை அழித்து சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

லீசிங் நிறுவனங்கள் உங்கள் வாகனத்தை பலவந்தமாக கைப்பற்ற முடியுமா?

 

லீசிங் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை மீளக் கைப்பற்றும் நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபடுவதில்லை என இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 

2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைச் சட்டத்தின் கீழ், வாகனத்தை மீட்கும்போது வாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவிக்காத சந்தர்ப்பத்தில் மாத்திரமே,

 

லீசிங் நிறுவனம் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அதனைக் கைப்பற்ற முடியும்.

 

வாடிக்கையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

முன்னறிவிப்புடன் பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டால், பொது அமைதியைப் பேணுவதற்காக மட்டுமே பொலிஸார் தலையிட முடியும்.

 

வாகனத்தைக் கைப்பற்றுவதில் பொலிஸார் பங்கேற்க முடியாது.

 

சட்ட நடைமுறைகளை மீறி வாகனம் கைப்பற்றப்பட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும் என்றும்,

 

கொள்ளை, திருட்டு அல்லது குற்றவியல் அத்துமீறல் போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

தங்க நகைகள் அடகு வைப்பது சாதனை அளவை எட்டியது…

 

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து மக்கள் 14,970 கோடி ரூபாய் (ரூ. 149.7 பில்லியன்) கடன் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது அடகுக் கடன் மீதியில் 16.12% வளர்ச்சியாகும்.

 

இதன்படி, மே மாத இறுதியாகும் போது வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்பட்ட மொத்தக் கடன் மீதி 107,900 கோடி ரூபாயைக் (ரூ. 1.079 டிரில்லியன்) கடந்துள்ளது.

 

கடந்த ஆண்டின் மே மாதம் முதல் இந்த ஆண்டின் மே மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில்,

 

மக்கள் வணிக வங்கிகளிடம் இருந்து 37,180 கோடி ரூபாய் அடகுக் கடன்களைப் பெற்றுள்ளனர்.

 

இது அதற்கு முந்தைய ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடும்போது 52.6% என்ற குறிப்பிடத்தக்க உயர்வாகும்.

 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிவேகமாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, தங்கக் கடன்களின் தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

 

இதனால் ஒட்டுமொத்த நிதி அமைப்பிலும் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,

 

அடகு வைக்கப்படும் தங்க நகையின் பெறமானத்தில் அதிகபட்சமாக 70% வரை மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும் என,

 

இலங்கை மத்திய வங்கி கடந்த மே மாதம் கடன் எல்லையை நிர்ணயித்தது.

 

 இரவு நேரங்களில் அதிக நேரம்

 விழித்திருப்பவரா நீங்கள்?


 

No comments

Theme images by fpm. Powered by Blogger.