அவசர எச்சரிக்கை...
அவசர எச்சரிக்கை...

அவசர எச்சரிக்கை...
அப்புத்தளை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, வீதிகளில் எதிரே வரும் வாகனங்களைக் கூட தெளிவாகக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், வாகன சாரதிகள் தங்களது வாகனங்களின் முன்விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்தவாறு அவதானமாக பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக வீதி விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், சாரதிகள் வேகத்தைக் குறைத்து, போதிய இடைவெளியைப் பேணி, முன்னெச்சரிக்கையுடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உயர் கல்வி கற்ற இளைஞர்களில் 43% பேருக்கு வேலை வாய்ப்பில்லை…
உயர்
கல்வி கற்ற இலங்கை இளைஞர்களில் 43 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி,
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 12 நாடுகளில் உயர் கல்வி கற்ற இளைஞர்களின் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது.
சர்வதேச
நாணய நிதியத்தால் ஏப்ரல் 16 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த விவாதத்தில் முன்வைக்கப்பட்ட இந்தத் தரவுகள், அந்த அமைப்பின் ‘Finance &
Development’ சஞ்சிகையின்
செப்டம்பர் இதழிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
கல்வி
நிலை உயரும் போது வேலையின்மை குறைவதற்குப் பதிலாக அது அதிகரிக்கும் ஒரு அசாதாரண பிராந்திய போக்கு காணப்படுவதாகவும், அந்த நிலைமை இலங்கையிலேயே மிகவும் தீவிரமாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தெற்காசியாவில்
குறைந்தபட்ச மதிப்பைப் பதிவு செய்த பங்களாதேஷில் இந்த சதவீதம் 36 ஆக உள்ள நிலையில்,
இலங்கையின்
மதிப்பு அதைவிட 7 சதவீதம் அதிகமாகும்.
மேலும்,
தாய்லாந்தில் உயர் கல்வி கற்ற இளைஞர்களின் வேலையின்மை விகிதமான 13.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் மதிப்பு மூன்று மடங்கிற்கும் அதிகமாகும்.
கடந்த
ஆண்டு தாய்லாந்தின் ஒட்டுமொத்த இளைஞர் வேலையின்மை 3.9% என்ற மிகக் குறைந்த அளவில் காணப்பட்ட போதிலும்,
அங்கு
படித்த இளைஞர்கள் வேலையற்றோராக மாறுவதற்கான வாய்ப்பு சாதாரண இளைஞர்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது.
இந்த
இடைவெளி தென்கிழக்கு ஆசியா முழுவதும் காணப்பட்டாலும், தெற்காசிய பிராந்தியத்தில் இது மிகவும் பரந்த அளவில் காணப்படுவதாக அச்சஞ்சிகை வலியுறுத்துகிறது.
இலங்கையின்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தரவுகளுடன் ஒப்பிடுகையில்,
2025 ஆம்
ஆண்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை இளைஞர்களின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமான 19.5 சதவீதத்தைப் போல் இரண்டு மடங்கிற்கும் அதிகமான மதிப்பை படித்த இளைஞர்களின் வேலையின்மை காட்டுகிறது.
அத்துடன்,
இது நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வேலையின்மை விகிதமான 3.9 சதவீதத்தைப் போல் 11 மடங்கு மதிப்பாகும்.
இலங்கையில்
அனைத்து வயதுப் பிரிவினரையும் கருத்தில் கொள்ளும்போது, க.பொ.த
உயர்தரம் மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதி கொண்ட நபர்களின் சராசரி வேலையின்மை 2024 இல் இருந்த 7.8 சதவீதத்தில் இருந்து 6.0 சதவீதம் வரை குறைந்திருந்த போதிலும்,
வேலைச்
சந்தையில் புதிதாக நுழையும் உயர்தகுதி கொண்ட புதிய இளைஞர் சமூகமே வேலையின்மையின் தீவிரமான தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது என்பதை இந்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த
நெருக்கடி குறித்து விளக்கமளித்த IMF இன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன், உயர் கல்வி கற்ற இளம் தொழிலாளர்கள் தமது தகுதிகளுக்குப் பொருத்தமான வேலைகளைக் கண்டறிய முடியாமல் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்” எனத்
தெரிவித்தார்.
செயற்கை
நுண்ணறிவின் (AI) விரிவாக்கம் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் உயரக்கூடும் என்ற போதிலும்,
தேவையான
புதிய திறன்கள் வளர்ச்சி அடைவதற்கு முன்னரே செயற்கை நுண்ணறிவு பரவினால், அது இளம் தொழிலாளர்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே,
பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் வேலைச் சந்தையில் முதலாளிகளின் உண்மையான தேவைக்கு ஏற்ப தமது கல்வித் திட்டங்களை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில்,
அடுத்த தசாப்தத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் சுமார் 1.2 பில்லியன் இளைஞர்கள் புதிதாக தொழிலாளர் படையில் இணையவுள்ளதாக உலக வங்கி கடந்த ஜூன் மாதம் மதிப்பிட்டிருந்தது.
இது
வரலாற்றில் இதுவரை பதிவான மிகப்பரிய இளைஞர் சமூகத்தின் வருகையாகும்.
ஆனால்,
தற்போதைய உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வேகம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்த மட்டத்தை விட மூன்றில் ஒரு பங்கினால் குறைந்துள்ள ஒரு கடினமான பொருளாதார சூழலிலேயே அவர்கள் வேலைகளைத் தேட வேண்டியிருக்கும் என்றும் உலக வங்கி மேலும் எச்சரித்துள்ளது.
ஜூலை மாதம் 7.2 ஆக இருந்த நாட்டின்…
தொகைமதிப்பு
மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் (NCPI) மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
2026 ஜூலை மாதத்தில் 7.2% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 8.1% ஆக உயர்வடைந்துள்ளது.
2026 ஜூலை
மாதத்தில் 4.9% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் புள்ளிக்கு புள்ளி பணவீக்க விகிதம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் 6.6% ஆக உயர்வடைந்துள்ளது.
அதேபோன்று,
2026 ஜூலை மாதத்தில் 9.2% ஆக இருந்த உணவு
அல்லாத பிரிவின் புள்ளிக்கு புள்ளி பணவீக்க விகிதம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் 9.3% ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு…
ஈஸ்டர்
தின பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு,
இன்றைய
தினம் (22ஆம் திகதி) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது.
ஆரம்பத்தில்
25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அவர்களில்
17ஆவது பிரதிவாதி சிறையில் இருந்தபோது உயிரிழந்தார்.
அதனையடுத்து,
24 பேருக்கு எதிராக வழக்கு நடைபெற்றது.
இவர்களுக்கு
எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகளை சட்ட மா அதிபர் தாக்கல்
செய்தார்.
அவற்றில்
- ஈஸ்டர் தின தாக்குதல்களை நடத்த சதி செய்தமை, தாக்குதல்களுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கியமை,
தற்கொலைக்
குண்டுதாரிகளுக்கு ஆதரவளித்தமை முக்கியமான குற்றச்சாட்டுகளாகும்.
சந்தேக
நபர்களில் நௌபர் மௌலவி என அழைக்கப்படும் மொஹமட்
நௌபர்,
'கபூர்
மாமா' என அழைக்கப்படும் ஆதம்
லெப்பை மற்றும் மில்ஹான் ஆகியோர் முக்கியமானவர்களாவர்.
இந்த
வழக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நீடித்தது.
அரச
தரப்பு சாட்சியங்கள் 2022 ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்கி 2026 ஓகஸ்ட் 13ஆம் திகதி நிறைவடைந்தன.
வழக்கு
தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அவை
: -
- 10 ஒப்புதல்
வாக்குமூலங்கள்
- 2,076 வழக்குச்
சான்றுப் பொருட்கள்
- வெடிபொருட்கள்
- குண்டு
தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள்
- கத்திகள்
- துப்பாக்கிகள்
- அரச
பகுப்பாய்வாளர் அறிக்கைகள்
- DNA அறிக்கைகள்
- சட்ட
வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகள் ஆகும்.
இந்த
வழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர், பொலிஸாரிடம் வழங்கிய 10 ஒப்புதல் வாக்குமூலங்களை, சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதித்தது.
இவை
வழக்கின் முக்கிய சான்றுகளாக அரச தரப்பால் முன்வைக்கப்பட்டன.
அரச
தரப்பு சாட்சியங்களை முடித்த பின்னர், பிரதிவாதிகளின் பாதுகாப்புத் தரப்புச் சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்கள் முன்வைக்கப்பட்டன.
சந்தேக
நபர்களில் 20 பேர் தமிழில் வாக்குமூலமளித்தனர்.
இன்றைய
தீர்ப்பை வழங்கவுள்ள மூவரடங்கிய Trial-at-Bar அமர்வில்,
நீதிபதிகள்
நவரத்ன மாரசிங்க,
ராமநாதன்
கண்ணன்,
சுஜீவ
நிஸ்ஸங்க ஆகியோர் உள்ளனர்.
ஈஸ்டர்
குண்டுத் தாக்குதல்களுடன் - ஒரு மண்ணளவு கூட தொடர்புபட்டவர்களும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.
அந்தத்
தாக்குதல்களில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
மேலும்,
குற்றவாளிகள் தண்டிக்கப்படுதன் மூலம் - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பழி - களையப்பட வேண்டும்.
ஜப்பானில்
சக்திவாய்ந்த புயல் - இருவர் உயிரிழப்பு…
ஜப்பானில்
ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல், தலைநகர் டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்காரணமாக,
16 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வெளியேற்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
Dujuan புயல் மணிக்கு
சுமார் 144 கிலோமீட்டர் (89 மைல்) வேகத்தில் காற்றுடன், டோக்கியோவுக்கு அருகிலுள்ள கட்சூரா (Katsuura) நகருக்கு தெற்கே 130 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்று
அதிகாலையில், புயல் கடற்கரையை விட்டு விலகி, வடகிழக்கு திசையில் கடலை நோக்கி நகர்ந்தது. பின்னர் Aleutian தீவுகள் நோக்கிச் செல்லும் நிலையில், அதன் காற்றின் வேகம் சற்று குறைந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில், புயல் வடக்கு நோக்கி நகர்ந்தாலும் தொடர்ந்து கனமழை பெய்யும் அபாயம் உள்ளது என ஜப்பான் வானிலை
ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புயல்
காரணமாக விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று Japan Airlines 135 விமானங்களையும், All Nippon
Airways 140 விமானங்களையும்
ரத்து செய்தன. இதனால் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
மேலும்,
டோக்கியோ–ஒசாகா
இடையிலான புல்லட் ரயில் சேவைகள் உள்ளிட்ட சில ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டதாக ஜப்பான் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது
இரு ஆசனப்பட்டிகள் இருந்தால் இருவர் மட்டுமே பயணிக்கலாம்…
அதிவேக
வீதிகளில் ஆசனப்பட்டி வசதி இல்லாத இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
அதிவேக
வீதிகளைப் பயன்படுத்தும் வாகனங்கள்,ஆசனப்பட்டி பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என போக்குவரத்து கட்டுப்பாடு
மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர
தெரிவித்துள்ளார்.
அதன்படி,
பின்னாலுள்ள இருக்கையில் இரண்டு ஆசனப்பட்டி மட்டுமே இருந்தால், இரு பயணிகள் அங்கு பயணிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு
ஆசனப்பட்டி இல்லாமல் மூன்றாவது பயணி ஒருவர் நடுவில் பயணித்தால், அந்தப் பயணிக்கு எதிராக காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.
மோசமான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்டோர் பாதிப்பு....
நாடளாவிய ரீதியில்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 41 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 458 குடும்பங்களைச் சேர்ந்த 1,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கடந்த 18ஆம்
திகதி முதல் இன்று (22) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் பதிவான காலநிலையின்படி, ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நேற்று
இரவு வீசிய பலத்த காற்று காரணமாக கலஹிட்டியாவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியின் மின்சார விநியோகக் கட்டமைப்பிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையினால்
அசௌகரியங்களுக்கு உள்ளான 26 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேருக்கு தற்போது 3 பாதுகாப்பான நிலையங்களில் தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அவசர எச்சரிக்கை...
No comments