சிறு குழந்தைகளுக்கு தொலைபேசி இந்த அளவு தீங்கா ?
சிறு குழந்தைகளுக்கு தொலைபேசி
இந்த அளவு தீங்கா ?

சிறு குழந்தைகளுக்கு தொலைபேசி
இந்த அளவு தீங்கா ?
2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொலைபேசி, டேப்லெட் திரைகளை கொடுப்பது அவர்களின் மூளை வளர்ச்சியில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் WHO மற்றும் அமெரிக்க குழந்தை மருத்துவ அகாடமி AAP ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி:
18 முதல் 24 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வீடியோ அழைப்பு தவிர எந்த திரை நேரமும் கூடாது.
2 முதல் 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1 மணி நேரத்திற்கு மேல் திரை நேரம் கூடாது என, WHO 2019 இல் தெளிவாக பரிந்துரைத்துள்ளது.
WHO வின் பொது பரிந்துரையாக, 2 வயதுக்கு முன் திரை நேரம் இல்லை, 2 முதல் 5 வயது வரை ஒரு நாளைக்கு 1 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நடைமுறையில் 70% குழந்தைகள் இந்த வரம்பை மீறுகிறார்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன.
என்ன தீங்கு நடக்கிறது?
1. மொழி வளர்ச்சி பாதிப்பு:
பிலிப்பைன்ஸில் நடந்த ஆய்வில், ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் திரை பார்க்கும் குழந்தைகளுக்கு கேட்டல் மற்றும் பேசும் மொழி திறன் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது கண்டறியப்பட்டது
2. கவனக்குறைவு மற்றும் ADHD ஆபத்து:
10 ஆய்வுகளை உள்ளடக்கிய புதிய மெட்டா பகுப்பாய்வில், அதிக திரை நேரம் குழந்தைகளுக்கு ADHD ஆபத்தை கணிசமாக அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது,
ஒட்டுமொத்த ஆபத்து OR 1.56. இதில் பாலர் பருவ குழந்தைகள் 0 முதல் 6 வயது வரை மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், அவர்களுக்கான ஆபத்து OR 2.40 ஆக உள்ளது
3. கற்றல் திறன் குறைவு:
2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் திரையில் இருந்து நேரடி மனித தொடர்பு போல கற்றுக்கொள்வதில்லை. இது video deficit எனப்படுகிறது.
நேருக்கு நேர் பேசுவதும் விளையாடுவதும் தான் அவர்களுக்கு மிக முக்கியம்.
4. உடல் செயல்பாடு மற்றும் தூக்கம்:
அதிக திரை நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறை, சமூக தொடர்பு குறைவு, தொடர்பு திறன் வளர்ச்சி தாமதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
பெற்றோர் என்ன செய்யலாம்?
2 வயதுக்கு கீழ் தொலைபேசியை தவிர்க்கவும்.
அவசியம் என்றால் குடும்பத்துடன் வீடியோ அழைப்பு மட்டும்.
2 முதல் 5 வயது வரை ஒரு நாளைக்கு 1 மணி நேரத்திற்குள், தரமான கல்வி நிகழ்ச்சிகளை மட்டும், பெற்றோருடன் சேர்ந்து பார்க்கவும்.
திரைக்கு பதிலாக 180 நிமிட உடல் செயல்பாடு, வெளியில் விளையாடுதல், கதை சொல்லுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கவும்.
உணவு நேரம், தூங்கும் நேரத்திற்கு 1 மணி முன் திரையை அணைக்கவும்.
குழந்தையின் நடத்தை, தூக்கம், பேச்சு வளர்ச்சியில் தாமதம் இருந்தால் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
திருட வந்த திருடனுக்கு நித்திரை கொடுத்த தண்டனை…
மொனராகலை
- ரத்தனபிட்டிய பகுதியில் திருடன் ஒருவன் கதவை உடைத்து
வீட்டுக்குள்
நுழைந்த பின்னர் அங்கிருந்த
கட்டிலில்
அயர்ந்து தூங்கியுள்ளான்.
அடுத்த
நாள் வீட்டார் காலையில்
எழுந்து
பார்த்த போது அறிமுகம் இல்லாத ஒரு மனிதன் நமது வீட்டு
கட்டிலில்
உறங்குவதை
கண்டு
அச்சமுற்று அயலவர்களையும் போலீசாரையும் அழைத்து
பிடித்து
கொடுத்துள்ளனர்.
இவரை
கைது செய்த போலீசார்
நீதிமன்றத்தில்
ஆஜர் செய்துள்ளனர்.
போலீசார்
இவரிடம் வினவிய போது தனக்கு தற்செயலாக நித்திரை வந்ததாக இவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்தச்
சம்பவத்தால் வீட்டாரின்
கதவு
உடைக்கப்பட்டதால் சுமார் 10,000 ரூபா நஷ்டம் ஏற்பட்டு
உள்ளதாகவும்,
இவரால்
எந்த பொருளும் திருடப்படவில்லை
எனவும்
விசாரணைகள்
மூலம்
தெரிய வந்துள்ளது.
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள…
சவூதி
அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர்
மேலும் கூறுகையில், சவூதி மன்னருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்காக
சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் இதில் பங்கெடுத்துள்ளனர். இதன் மூலமும் சவூதி மன்னரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன்,
ஜனாதிபதியின் கோரிக்கையையும், பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பங்களையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்றையும் சவூதி மன்னருக்குச் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும்,
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.
இவ்வாறாக
ராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்துக் நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இலங்கையில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு…
கடந்த
ஆண்டில் இலங்கை 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளபோதிலும்,
நாட்டின்
மக்கள் தொகை 0.7 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த
ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டின் மக்கள் தொகை 21.75 மில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி,
இலங்கையில் 55 வயதிற்கு மேற்பட்டோரின் மக்கள் தொகை கடந்த ஆண்டில் 5.19 மில்லியனாக (51.9 லட்சம்) உயர்ந்துள்ளதாகவும், 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் மக்கள் தொகை 4.5 மில்லியனாக (45 லட்சம்) குறைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்
மூலம் நாட்டில் உள்ள முதியோர் மக்கள் தொகைக்கும் குழந்தைகள் மக்கள் தொகைக்கும் இடையிலான இடைவெளி குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது.
மத்திய
வங்கி அறிக்கையின்படி: 55 வயதிற்கு மேற்பட்டோர்:
2018-இல்
3.8 மில்லியனாகவும்,
2024-இல்
3.84 மில்லியனாகவும் இருந்த இந்நாட்டின் முதியோர் மக்கள் தொகை, கடந்த ஆண்டில் 5.19 மில்லியனாக அதிகரித்துள்ளது.
0 முதல்
14 வயது வரையிலான சிறுவர்கள்:
2018-இல்
5.47 மில்லியனாகவும்,
2024-இல் 5.53 மில்லியனாகவும் இருந்த சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 4.5 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இதன்
அடிப்படையில், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை சுமார் 1.34 மில்லியனால் அதிகரித்துள்ள அதேவேளையில்,
0-14 வயதுக்குட்பட்ட
சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் 1.03 மில்லியனால் சரிவடைந்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான தகவல்களுக்கு…
போதைப்பொருள்
அச்சுறுத்தலை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற அவசர அழைப்பு இலக்கம்,
தற்போது
24 மணிநேரமும் தடையின்றி இயங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசாரப் பிரிவு அறிவித்துள்ளது.
'முழு
நாடும் ஒன்றாக' பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சேவை மூலம் நாடு முழுவதிலும் இடம்பெறும்,
போதைப்பொருள்
கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கை குறித்தும் பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க முடியும்.
நாட்டின்
எந்தவொரு குடிமகனும் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதுடன்,
தகவல்
வழங்குபவர்களின் ரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, அளிக்கப்படும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி
செயலகம் மற்றும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயல்பாட்டுக் குழுவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் இந்தச் சேவை மூலம்,
பொதுமக்கள்
எந்த நேரத்திலும் பாதுகாப்பான முறையில் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல்களை வழங்க முடியும் என அரசாங்கம் மேலும்
தெரிவித்துள்ளது.
2,500-க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்…
அரசாங்கத்தின்
கடுமையான வரிச் சுமை காரணமாக நாட்டில் உள்ள திறமையான பணியாளர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருப்பதாக எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA),
வைத்தியர்கள்
மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்களுக்கு மேலதிக வரி நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
2021/2022 ஆம்
ஆண்டுக்குப் பின்னர் 2,500 க்கும் மேற்பட்ட நிபுணத்துவ வைத்தியர்களும் ஏனைய மருத்துவ அதிகாரிகளும் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவித்துள்ள அச்சங்கம்,
அவர்கள்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அதிக வரியும் ஒரு முக்கிய காரணியாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின்
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2023 ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்களால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் தொழில் வல்லுநர்களும் அடங்குவர் என்று அது தெரிவித்துள்ளது.
தனிநபர்
வருமான வரி அமைப்பில் பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக்கொண்ட போதிலும்,
பணவீக்கம்,
வாழ்க்கைச் செலவு, போக்குவரத்துச் செலவுகள் மற்றும் ஏனைய பொருளாதார அழுத்தங்களுடன் ஒப்பிடும் போது வழங்கப்பட்ட நிவாரணம் போதுமானதாக இல்லை என GMOA தெரிவித்துள்ளது.
சில
தொழில் வல்லுநர்கள் தொடர்ந்தும் தங்களது வருமானத்தில் கிட்டத்தட்ட 36 சதவீதத்தை நேரடி வரிகளாகச் செலுத்தி வருவதுடன்,
கணிசமான
அளவு மறைமுக வரிச் சுமையையும் சுமந்து வருவதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வைத்தியர்களின்
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான நீண்டகாலக் கவலைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அது, சில கொடுப்பனவுகள் பல வருடங்களாக திருத்தப்படவில்லை
என்றும்,
சில
மேலதிக கடமை மற்றும் விடுமுறைக்காலக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையின்
மேம்பட்டு வரும் பொருளாதார நிலைமை, அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வருவாயைப் பாதிக்காத வகையில் மேலும் வரித் திருத்தங்களைச் செய்வதற்கு இடமளிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வாதிட்டுள்ளது.
அச்சங்கத்தின்
கூற்றுப்படி, அரசாங்கத்தின் வரி வருவாய் 5.4 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதுடன்,
2025 ஆம்
ஆண்டின் வரி வசூல் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது.
வரவிருக்கும்
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள GMOA,
வரிவிலக்கு
எல்லை (tax-free
threshold), வரி விகிதங்கள் மற்றும் வருமான வரம்புகளில் மாற்றங்களைக் கோரியுள்ளது.
அரசாங்கத்தின்
ஒட்டுமொத்த வருவாயைப் பேணும் அதே வேளையில்,
வைத்தியர்கள்
மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்களுக்கு அதிக நிவாரணம் வழங்கும் வரி முறையொன்றை உருவாக்குமாறு அது கோரிக்கை விடுத்துள்ளது.
உயர்
திறமைமிக்க தொழில் வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறினால்,
அறிவு
மற்றும் தொழில்சார் திறமைகள் மேலும் இழக்கப்படுவது உட்பட இலங்கைக்கு நீண்டகாலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அச்சங்கம் எச்சரித்துள்ளது.
No comments