கல்வியை விரிவுபடுத்த பாடசாலைகளுக்கு
கல்வியை விரிவுபடுத்த பாடசாலைகளுக்கு

கல்வியை விரிவுபடுத்த பாடசாலைகளுக்கு
நாட்டின் கல்வித்துறையில் டிஜிட்டல் கற்றல் வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் ஸ்மார்ட் போர்டுகளை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனுடன், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த வசதிகள் மூலம் பாடங்களைத் தொழில்நுட்ப உதவியுடன் கற்பித்தல், கற்றல் வளங்களை இலகுவாகப் பயன்படுத்துதல் மற்றும் மாணவர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு; 46 பேர் காயம்!
சீனாவின் சிசாங் (Xizang) பிராந்தியத்தில் உள்ள நாக்சு (Nagqu) நகரின் பாக்கென் (Baqen) மாவட்டத்தில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் நேற்று (22) இரவு 10.33 மணியளவில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, நாக்சு நகருக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 191 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது.
டயானா கமகேவுக்கு மீண்டும் பிடியாணை!
போலியான பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று (22/10/2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி ஆஜராகவில்லை. இதனையடுத்தே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கு திகதி மறந்துவிட்டதாகக் கூறி இதற்கு முன்னரும் டயானா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியிருந்த நிலையில், அப்போதும் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், ஆவணங்களை திருத்திய பின்னர் இரு தரப்பு வாதங்களுக்கான திகதியை நிர்ணயிப்பதற்காகவே நேற்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
தான் இலங்கை பிரஜை அல்ல என்று தெரிந்திருந்தும் போலி பிறப்பு ஆவணத்தை தயாரித்து, அதனைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பெற முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தண்டனைச் சட்டக் கோவையின் 32, 102, 457 மற்றும் 459 ஆம் பிரிவுகளின் கீழ் 2024 ஜூன் 06 ஆம் திகதி இவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
A9 வீதி அக்குறணை
கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொட 7 ஆம் கட்டை பகுதி இன்று (22) இரவு 10 மணி முதல் நாளை (23) அதிகாலை 2 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்துடன் தொடர்புடைய 'பிரைம்மூவர்' இழுவை வாகனத்தை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினாலேயே வீதி இவ்வாறு மூடப்படவுள்ளது.
எனவே, குறித்த காலப்பகுதியில் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் கட்டுகஸ்தோட்ட, மடவள, வத்தேகம, உகுவலை மற்றும் எல்வள ஊடாகப் பயணித்து மீண்டும் A9 வீதியை அடைய முடியும்.
அதேபோன்று, மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் கனரக வாகனங்கள் எல்வள, உகுவலை, வத்தேகம, மடவள மற்றும் கட்டுகஸ்தோட்ட ஊடாகப் பயணிக்க வேண்டும்.
மேலும், இலகுரக வாகனங்கள் அலவத்துகொட, ஓவிஸ்ஸ, பூஜாபிட்டிய மற்றும் அம்பதென்ன ஊடாக கட்டுகஸ்தோட்டவைச் சென்றடைந்து அங்கிருந்து கண்டி திசையை நோக்கிப் பயணிக்க முடியும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்ளும் வகையில், குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் பதற்றம்!
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடத்திற்கு இன்று இரவு விரைந்த பொலிஸார் அங்கு சத்தியாக்கிரகம் செய்ய முடியாதென நீதிமன்ற அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளனர். இதன்போதே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் காவல்துறையினர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை - சவூதி அரேபியா இடையிலான விமான சேவை
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு – சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் கொழும்பு – ரியாத் இடையிலான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்தும் காலத்தை நவம்பர் 1ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
இதன்படி, குறித்த இரு வழித்தடங்களிலும் நவம்பர் 1ஆம் திகதி வரை விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கல்வியை விரிவுபடுத்த பாடசாலைகளுக்கு
No comments