நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அரசு ...!

நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அரசு ...!






நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அரசு ...!



நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அரசு ...!




நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அரசு ...!



 கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில்  3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.


தற்போதைய ஜனாதிபதி படித்த தம்புத்தேகம பாடசாலையும் இதன் கீழ் மூடப்பட உள்ளதாக தமது கட்சிக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலம் முழுவதும் இந்த நாட்டின் அரசாங்கங்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்த நாட்டில் கல்வியைச் சீர்திருத்தத் தயாராகி வருவதை நாங்கள் அறிவோம்.


நாடாளுமன்றத்தில் தனது உரையில் அனுர குமார திசாநாயக்க இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகள் குறித்து மிகுந்த உணர்ச்சியுடன் பேசினார். 


100 இற்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட 3141 பாடசாலைகள் இருப்பதாக அவர் கூறினார். 


சில பாடசாலைகளை மூடவும் சில பாடசாலைகளை இணைக்கவும் தேவையான இடங்களில் புதிய பாடசாலைகளை நிறுவவும் அவர் கள் தயாராக உள்ளனர். 


முதல் பார்வையில், இந்த அறிக்கையின் ஆபத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. கருணாசேன கொடிதுவக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அநுர திசாநாயக்கவின் உரையைப் போன்ற ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார். 


இலங்கை யில் 3000 பாடசாலைகளை மூடுவதற்கான திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் அவர்தான்.


அந்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடியது.


அப்போது பாடசாலைகளை பாதுகாப்பதற்காக  பாடசாலை பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. 


அவர்கள் அனைவரும் இப்போது பாடசாலைகளை மூடுவதற்கான உலக வங்கியின் திட்டத்தைச் செயல்படுத்த தயாராகி வருகின்றனர் என துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.



மக்கள்தொகையில் தீவிர மாற்றம் -- அதிர்ச்சி அளித்த புள்ளிவிபரம்


கடந்த மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றம், ஆண் மக்கள் தொகை வீதத்தில் நிலையான சரிவு மற்றும் அதற்கேற்ப பெண் மக்கள் தொகை வீதத்தில் அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் இலங்கை பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


1995 இல் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 100.2 ஆண்கள் என்றிருந்த ஆண்-பெண் வீதம் தற்போது தலைகீழாக மாறி நாட்டில் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 93.7 ஆண்கள் மட்டுமே இருப்பதாக தற்போதைய புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.


பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு சில திட்டங்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து கல்வித் துறைகளிலும் பெண் மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ள பல்கலைக்கழக அமைப்பிற்குள்ளும் கூட இந்த மாற்றம் தெளிவாகத் தெரிவதாகவும் கூறப்படுகிறது.


ஆண்களை விட பெண்கள் அதிக வீதத்தில் பணியிடங்களுக்கு நுழைவதற்கான வளர்ந்து வரும் போக்கும் காணாப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண் தொழிலாளர் கிடைப்பது தொடர்ந்து குறைந்து வருவதால், இந்த பாலின ஏற்றத்தாழ்வு பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வேலைவாய்ப்புத் துறைகளில் சவால்களுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் ஆண் பணியாளர்களில் கணிசமான பகுதியினர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்றும், இது பிரச்சினையை மேலும் மோசமாக்குகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.


இந்த நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையே மக்கள்தொகைப் போக்கில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த விடயத்தை கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் நெருக்கடி மேலும் மோசமடைவதைத் தடுக்க வலுவான அரசாங்கத் தலையீட்டின் அவசரத் தேவையை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



காசோலை மோசடியில் ஈடுபடுவோருக்கு சிறை


வங்கிகளில் போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை விநியோகிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அந்தவகையிவ் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.


இது தொடர்பான சட்டத்திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குவோரும், மூடிய கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குவோரும் இந்த சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்கள்.


வங்கிகளுக்கு நிதிப்பாதுகாப்பை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திருத்தங்களின் கீழ், விதிக்கப்படும் அபராதம், வங்கியில் உரிய நிதியின்றி திரும்பிய காசோலைக்குச் சமமான தொகையாக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.


இந்தநிலையில் காசோலையை வழங்கிய ஒருவர், காசோலையைப் பெற்றவரின் கோரிக்கையின் கீழ் 90 நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தாது போனால் இந்த திருத்தத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



விமானத்தில் பிறந்த குழந்தை


மும்பை நோக்கி புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீர் பிரச வலி ஏற்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.


ஓமன் தலைநகரான மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கடந்த திங்கள் அதிகாலை 3.15 மணியளவில் வானில் பறந்து கொண்டிருந்தபோது, தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.


வழக்கமாகக் கேபினில் கிடைக்கும் வசதிகள் இவற்றுக்கு போதுமானதல்ல என்றாலும், விமான ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, விமானக் கேபினில் ஒரு தனியறையை தயார் செய்தனர்.


மேலும், விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அனுப்பினார்.


இந்த நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த மருத்துவ துறையைச் சேர்ந்த தாதி ஒருவர் முன்வந்து, விமான ஊழியர்களின் உதவியுடன் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்த்துள்ளார்.


இதில் அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைப்பார்த்த பயணிகள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். இந்தநிலையில் விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன் தாய், குழந்தை இருவரும் அங்கு தயாராக இருந்த நோய்காவு வண்டியில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


தாய், சேய்க்கு தேவையான உதவிகளை செய்ய தாய்லாந்து தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.



ஏற்றுமதி துறையில் --- இலங்கை


2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நிலையான முன்னேற்றத்தையும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கண்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


நேற்று(26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அவர் கூறியதாவது:


🔹 மொத்த ஏற்றுமதி வருவாய்:

2025 ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 6,933.35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 7.14% அதிகரிப்பு ஆகும்.


🔹 மே மாத வளர்ச்சி:

2025 மே மாதத்தில் மட்டும் 1,386.66 மில்லியன் டொலர்கள் வருவாய் உருவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 6.35% ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியாக இருக்கிறது.


🔹 சரக்கு ஏற்றுமதி:

மே மாதத்தில் மட்டும், சரக்கு ஏற்றுமதி 1.70% உயர்ந்து 1,028.52 மில்லியன் டொலர்கள் ஆகியுள்ளது. இதில் ரத்தினங்கள், நகைகள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.


2025 ஜனவரி முதல் மே மாதம் வரை சரக்கு ஏற்றுமதி 5,344.23 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.46% அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.


மங்கள விஜேசிங்க இதை குறித்து கூறுகையில்:


“இது ஏற்றுமதித் துறையின் நிலைத்த வளர்ச்சி மட்டுமல்ல, சந்தைகளை பன்முகப்படுத்தும் முயற்சிகளும், போட்டித்தன்மையை மேம்படுத்தும் திட்டங்களும் கொடுத்த நேர்மறையான விளைவுகளின் வெளிப்பாடாகும்” எனத் தெரிவித்தார்.





நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அரசு ...!


 

No comments

Theme images by fpm. Powered by Blogger.